< தமிழில் டேலி Tally.ERP9 >

Jul 20, 2016

E- C TAX வணிகர்கள் எளிதாக மதிப்பு கூட்டு வரியை கட்ட அரசு ஏற்பாடு வணிகவரித்துறை அறிவிப்பு


                                          Total Solution Project (TSP)

                                                                          e - C TAX


தமிழ்நாட்டில் வரி வருவாயில் வணிகவரித்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்த துறையில் மதிப்பு கூட்டு வரி (வாட்வரி ) அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் வரி வருவாய் உயர்ந்து வருகிறது. வரி செலுத்தும் வணிகர்களுக்கு படிவம்(நமூனாக்கள் ) தாக்கல் செய்வதிலும் அது தொடர்பான படிவங்கள் பெறுவதிலும் உள்ள நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி டிஎஸ்பி ( T S P ) என்ற புதிய சேவையை தொடங்கி வைத்தார்.
இந்த புதிய சேவையில் ஜேஜே ( FORM JJ ) போன்ற படிவங்களை வணிகர்கள் தங்களது நிறுவனங்களில் இருந்த படியே எந்தவித சிரமமும் இல்லாமல் பதிவிறக்கம் செய்து பயன் பெற்று வருகிறார்கள்.
வணிகர்களது வாணிப நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை இந்த மாதம்(JULY 2016 முதல்   ( JUNE 2016 RETURN ) இந்த புதிய சேவையை பயன்படுத்தி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.



எனவே புதிய மென்பொருளில் வணிகர்கள் https://ctd.tn.gov.in/home என்ற இணையதளத்தில் உடனடியாக தங்களது வணிகம் தொடர்பான பதிவுகளை பதிவு செய்திட வேண்டும். இந்த புதிய மென் பொருளில் படிவங்களை தாக்கல் செய்வதால் வணிகர்கள் தங்களுக்கு உரிய படிவங்களை எந்தவித அலைச்சலும் இன்றி அவரவர் நிறுவனங்களில் இருந்தபடி பெறும் வகையில் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது.
இதுவரை பதிவு செய்யாத வணிகர்கள் அனைவரும் உடனடியாக பதிவு செய்து புதிய மென்பொருளின் பயன்களை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உதவி மையம்

வணிகர்கள் புதிய மென்பொருளை பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை ஆலோசனை தொடர்பாக வணிகவரித் துறையின் அனைத்து வரிவிதிப்பு வட்டங்களிலும் உதவி மையம் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

அது மட்டுமல்லாது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 103 6751 பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மென்பொருள் தொழில்நுட்பம் தொடர்பான வணிகர்களது சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதற்கு துறை சார்ந்த மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய குழு வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிகவரித்துறை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

உடனடியாக பதிவு

எனவே வணிகர்கள் அனைவரும் புதிய மென்பொருளில் உள்ள வசதிகளை பெற்றுக் கொள்ள உடனடியாக பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

Post a Comment