< தமிழில் டேலி Tally.ERP9 >

Dec 18, 2011

வை திஸ் கொல வெறி!

* ஒய் திஸ் கொல வெறி
( ஏன் இந்த கொலைவெறி )*
( why this kolaveri )
டிசம்பர் மாதம் இசைவிழா மாதம். இசை விழாக்களை ஊடகங்கள் வரிந்து கட்டி விமர்சிக்கும். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் மூன்று (3) படத்தின் ஒரு பாடல் யூடியூபில் (YOU TUBE) இணைக்கப்பட்டது.


தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி ( why this kolaveri ) என்ற பாடல் இன்று பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கிறது.

பண்பலை வானொலிகளில் இப்பாடல் ஒலிக்காத நாளில்லை.

இளைஞர்களிடம் மிகப் பெரிய ஆதரவைப் பெற்றுள்ளதால் இது போன்ற பாடல் கலாச்சாரம் தொடர்ந்து வந்து விட போகிறதோ என அச்சப்படுகிறார்கள் இசை விமர்சகர்கள்.

ஊடகங்களில் இந்த பாடல் பற்றி விவாதங்களும் கருத்து மோதல்களும் அரங்கேறியுள்ளன.

நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளை பார்த்தால் தொடர்ந்து ஒரு சில வரிகளை அடிக்கடி பயன்படுத்துவார்.
"நல்லா தானே போய்கிட்டு இருக்கு. ஏன் இந்த கொல வெறி"

உஷ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே.

வேணாம் வலிக்குது அழுதிருவேன்"
என்று சொல்வார்.

அது போன்ற கொல வெறி ( kolaveri )சம்பவம் தான் இந்தப் பதிவு.


நீண்ட நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரை சந்தித்தேன். தன்னுடைய அலுவலகத்தில் தனியாரால் வடிவமைக்கப்பட்ட ஒரு கணக்கியல் மென்பொருளை பயன்படுத்துவதாகவும் அதன் சிறப்பம்சம் பற்றியும் கூறினார்.

அடுத்த சந்திப்பில் அவருடைய வாடிக்கையாளர் தான் பயன்படுத்தும் TALLY 5.4 சிறப்பம்சங்களை கூறியதால் எனது நண்பரும் TALLY 5.4 வாங்கி பயன்படுத்துவதாக கூறினார்.

அடுத்தடுத்த சந்திப்புகளில்
TALLY 6.3 ,
TALLY 7.2 ,
TALLY 8.1 ,
TALLY 9 என வரிசையாக வந்த TALLY மென்பொருளின் புதிய பதிப்புகள் ( VERSION ) பற்றியும் புதிதாக சேர்த்துள்ள கூடுதல் வசதிகளையும் பயன்பாட்டு சிறப்புகளையும் நேரில் பார்க்கும் போதெல்லாம் கூறி வருவார்.

1.1.2007 அன்று முதல் தமிழகத்தில் வாட் வரி (VAT) அறிமுகம் செய்யப்பட்டது.

மதிப்புகூட்டுவரி (VALUE ADDED TAX) அறிமுகம் செய்யப்பட்டதால் டேலி ( TALLY ) மென்பொருளின் தேவை அதிகரித்தது.

அந்த சமயத்தில் நண்பரை மீண்டும் சந்தித்தேன்.
VAT வரி வந்ததும் வணிகவரித் துறை புதிதாக படிவங்களை (FORMS) அறிமுகம் செய்துள்ளதாக கூறினார்.

அதே போல கொள்முதல் , விற்பனை விவரம் அடங்கிய இணைப்புகளை (ANNEXURE) இணையத்தின் மூலம் பதிவேற்றம்
(UPLOAD) செய்ய டேலி (TALLY) மென்பொருள் பெரிதும் உதவுவதாக கூறினார்.

பின்பு TALLY 9 பதிப்பு (VERSION) Tally.ERP9 என புதிதாக மாறியது.

அந்த சமயத்தில் நண்பரை சந்தித்தேன்.

தான் டேலி9 லிருந்து புதிய ERP VERSIONக்கு மாறப் போவதில்லை என்றார்.

அதற்கு நண்பர் கூறிய காரணத்தை கேட்டவுடன் உஷ்... அப்பா ... இப்பவே கண்ணை கட்டுதே.
நல்லா தான்யா போய்கிட்டு இருந்தது. ஏன் இந்த கொல வெறி.. வேணாம் வலிக்குது அழுதிருவேன் ன்னு நடிகர் வடிவேலுவின் குரல் எங்கிருந்தோ எதிரொலிப்பது போலிருந்தது.

என்னை நம்பித் தான் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு வழக்குகளை என்னிடம் ஒப்படைச்சிருக்காங்க.
நான் Tally9 லிருந்து Tally.ERP க்கு மாறினால் என்னுடைய வாடிக்கையாளர்களின் கணக்குகள் TALLY SERVERல் இணைக்கப்பட்டு விடும்.

அப்புறம் என்னுடைய வாடிக்கையாளர்களின் கணக்குகள் TALLY நிறுவனத்திற்கு தெரிந்துவிடும்.

PRIVACY போன பிறகு என்னுடைய வாடிக்கையாளர்கள் (CLIENT) என் மீது வைத்துள்ள நம்பகத் தன்மையை இழந்து விடுவேன்.

அதனால் தனக்கு
DOT NET ம் வேண்டாம்.
ERPயும் வேண்டாம் என பிடிவாதம் பிடித்தார்.

காலப் போக்கில் வணிகவரித் துறை மாதாந்திர ரிட்டன் படிவம் (MONTHLY RETURN FORM) வணிகர்கள்
E FILING முறையில் மட்டுமே செய்ய வேண்டும் என அறிவித்தது.

வணிகவரித் துறை கேட்கும் பார்மெட்டில் தான் இணைப்புகளை (ANNEXURE) எக்ஸல் (Excel) மூலம் பதிவேற்றம் (UPLOAD) செய்ய வேண்டும்.

இந்த விஷயத்தில் பலரும் திணறிக் கொண்டிருக்க டேலி.ஈஆர்பி9
(Tally.ERP9) மூலம் எளிதில் இணைப்புகளை (ANNEXURES) (அப்லோடு) செய்யலாம் என கேள்விப்பட்டதும் எனது நண்பர் Tally 9ஐ Tally.ERP9க்கு வேறு வழியில்லாமல் மாற்றிக் கொண்டார்.

ERP9க்கு மாறியவுடன் வாட் வரி
ஈ- பைல் எளிதில் செய்ய ஆரம்பித்தார்.

இதன் மூலம் டாட்நெட் வசதி அவருக்கு ஒரு வருடத்திற்கு கிடைத்தது.

மேலும் அடுத்த ஒரு வருடத்திற்கு டேலி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யும் புதிய பதிப்புகளும்
(VERSION) , புதிய வெளியீடுகளும் ( RELEASE ) , அதே போல வரி சம்பந்தமான STAT FILEகளையும் பதிவிறக்கம்
(DOWNLOAD) செய்து கொள்ளலாம். பின்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் நண்பரின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். நான் சென்ற போது எனது நண்பர் கணினியில் மின்னஞ்சலை பார்த்துக் கொண்டு தனது வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

தனது Tally.ERP9 ன் டாட் நெட் சேவை விரைவில் முடிவடைவதால் அச்சேவையை புதுப்பித்துக் கொள்ள நினைவூட்டும் மின்னஞ்சல் அது.

டேலியின் டாட் நெட் சேவையை தற்போது புதுப்பிக்கும் எண்ணமில்லை என்றார்.

என்னுடைய டேலி பைல் ஏதாவது திறக்க முடியாமல் போனால் டேலி சர்வரிலிருந்து எனக்கு தேவைப்படும் டேட்டாவை எடுத்து தருவார்கள்.

எனக்குத் தான் ஆட்டோ பேக்அப் வசதி இருக்கே. அப்புறம் ஏன் நான் வருடா வருடம் டாட் நெட்டை ரினிவல் செய்யனும் என்றார்.
பேச்சு பேச்சாத் தான் இருக்கிறது.

நண்பர் இன்னமும் அந்த கோட்டை தாண்டல.

அவரோட வாதம் பிடிவாதமாய் இன்னமும் தொடர்கிறது. இந்த பதிவை படித்த மகாஜனங்களே
"இது கதையல்ல நிஜம்".


டேலி (TALLY) மென்பொருளை
Tally 5.4 முதல்
Tally 9 வரை ஏறத்தாழ 10 வருடங்களாக பயன்படுத்தும் நண்பர் Tally.ERP9 ன் டாட் நெட் வசதி பற்றி புரியாமல் பேசுவது ஏன்..?

10 வருட டேலி அனுபவத்தில் நிபுணராக
(EXPERT) மாறி இருப்பார்னு பார்த்தா இப்படி கொலையா கொல்றாரே

யார் இப்படி பேச சொல்லிக் கொடுத்தது.

ஒரு வேளை ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ.

இல்ல குப்புறப் படுத்து யோசிச்சிருப்பாரா

மூக்கு புடப்பா இருக்கிறதால இந்த மாதிரி யோசிக்க தோனுதா

Dec 12, 2011

டேலி பயன்பாட்டு மொழிகளின் பட்டியல்.

அழைப்பு மணி
( காலிங் பெல் ) ஒலித்தது. கதவைத் திறந்தேன்.
வந்தவர்
"சார் கேஸ் " என்று உரத்த குரல் கொடுத்தார்.

எம்டி (EMPTY) கொடுங்க சார் என்றார்.

காலி சிலிண்டர் தந்தேன்.
காலி சிலிண்டர் எடுத்துக் கொண்டு சென்றவர் பின்பு முழு சிலிண்டர் எடுத்து வந்தார்.

காசு கொடுங்க சார் என்று பில்லை நீட்டினார்.

பில் இரு பகுதியாக இருந்தது.

பில்லின் ஒரு பகுதியை எனக்கு தந்துவிட்டு பில்லின் மற்றொரு பகுதியில் கையெழுத்திட சொன்னார்.

எனக்கு ஒரே ஆச்சர்யம் காரணம் நான் கையெழுத்திட்ட பில் முழுக்க தமிழில் அச்சிடபட்டிருந்தது.

எனக்கு தந்த பில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

ஒரே பில் தான் ஒரு பகுதி ஆங்கிலம் ஒரு பகுதி தமிழ் ஏன் என்று கேட்டேன்.

எங்களை மாதிரி டெலிவரி பாய்ஸுக்கும் லோடு மேனுக்கும் ரூட்டுல ( ROUTE ) ஈசியா டெலிவரி செய்றதுக்கு தமிழில் பில்.

கஸ்டமருக்கு இங்கிலீஸ்ல பில் என்றார். எங்க ஆபிஸில இங்கிலீஸுல பில்லை சார்ட்டா அடிக்கிறாங்க சார்.

அதை எங்களை போல இருக்கிற லோடுமேனால சரியா படிச்சு புரிஞ்சிக்க முடியாது.

சில சமயம் பழக்கப்பட்ட ஏரியாவுல கஸ்டமர் வீட்டுக்கிட்ட நின்னுகிட்டே அந்த அட்ரஸை தேடுற காமெடி எல்லாம் நடக்கும் என்றார்.

அவர் பேச்சை கேட்ட போது கவிஞர் காசி ஆனந்தனின் இந்த பாடல் தான் ஞாபகம் வந்தது.


"தமிழா நீ பேசுவது தமிழா "

டேலி (tally) மென்பொருள் மூலம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பில் அச்சிடலாம் என்று சொல்கிறோம்.

ஏனென்றால் Tally ( டேலி ) மென்பொருள் என்பது CONCURRENT MULTILINGUAL SOFTWARE ஆகும். எங்கேயாவது டேலி மென்பொருள் மூலம் தமிழில்
( TAMIL ) அச்சிடப்பட்ட பில்லை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?

வெகு அபூர்வமான விசயம். காரணம் யாரும் முயற்சி செய்து பார்ப்பதில்லை!


நம்மில் பலருக்கு டேலி (TALLY) மென்பொருள் மூலம் ஆங்கிலத்தில் மட்டுமே கணக்குகளை நிர்வகிக்க முடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

டேலியில் ஏதாவது ஒரு கம்பெனியை திறந்து கொள்ளுங்கள்.

ALT+ G என்ற சுருக்குவிசையை பயன்படுத்தி தமிழ் மொழியை தேர்வு செய்தால் ஒட்டு மொத்த டேலி மெனுவும் தமிழில் மாறிவிடும் என்பது தெரியுமா..

பிறகு நீங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கணக்கு நிர்வகிக்கலாம்.
தமிழில் பில் அச்சிடலாம்.

உங்கள் கைப்பேசியில் SETTING MENU விற்கு LANGUAGE பகுதியை திறந்து தமிழ் மொழியை தேர்வு செய்தால் மொத்த மெனுவும் தமிழில் மாறிவிடுகிறது அல்லவா.
பின்பு குறுஞ்செய்தியை கூட தமிழில் அனுப்பலாம். அதுபோலத் தான் இதுவும். அப்ப டேலி மென்பொருளில் தமிழ் தவிர வேறு என்ன பயன்பாட்டு மொழிகள் இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா..

Tallyல் ஏதாவது ஒரு கம்பெனியை திறந்து கொள்ளுங்கள்.

ALT+G என்பதை அழுத்துங்கள். இப்பொழுது என்னென்ன மொழிகளில் டேலி மென்பொருளை பயன்படுத்தலாம் என பயன்பாட்டு மொழிகளின் பட்டியல் தெரிகிறதா..

இதோ அந்த பட்டியல்.

1) ARABIC ( SAUDI ARABIA )

2) URDU (ISLAMIC REPUBLIC OF PAKISTAN )

3) ஆங்கிலம்

4) இந்தோனேசியன் மொழி

5) கன்னடம்

6) குஜராத்தி

7) தமிழ்

8) தெலுங்கு

9) பஞ்சாபி

10) பஹாஸா மெலாயு

11) மராத்தி

12) மலையாளம்

13) வங்காளி

14) ஹிங்கிலிஷ்

15) ஹிந்தி

உங்கள் தேவை எதுவோ அந்த மொழியில் டேலி மென்பொருளை உபயோகித்து பயன்பெறுங்கள்.

டேலியில் பயன்பாட்டு மொழியை மாற்ற சுருக்குவிசை


ALT+G.


டேலியில் விசைப்பலகை
( KEY BOARD ) யின் தட்டச்சு மொழி
( TYPING LANGUAGE ) மாற்றம் செய்ய சுருக்கு விசை

ALT+ K.

Nov 8, 2011

IMAGE PRINTING IN Tally.ERP9 டேலி ( TALLY ) மூலம் இன்வாய்ஸை லோகோவுடன் பிரிண்ட் செய்வது எப்படி...? கற்கலாம் வாங்க..

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்று சொல்வார்கள்.
ஆனால் உங்கள்
நிறுவனத்தின் தயாரிப்புகளை வியாபாரச் சந்தையில் கொண்டு சேர்க்க
விளம்பரம் அவசியம் தேவை.

அதேபோல் தான் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின்
சின்னங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம் செய்கிறார்கள்.

பிரச்சாரம் செய்கிறார்கள்.
சாலை ஊர்வலம் செல்கிறார்கள்.

சரி.

டேலி.ஈ.ஆர்.பி 9
( Tally.ERP9 ) மூலம் எப்படி உங்களது விற்பனை பில்லை
( SALES INVOICE ) கம்பெனி லோகோ LOGO உடன் எப்படி அச்சிடுவது
( PRINT செய்வது ).

அச்சகத்தில் ( பிரிண்டிங் பிரஸ் ) கொடுத்து தான்
உங்கள் நிறுவனத்தின் லோகோவுடன் இது வரை விற்பனைபில்லை அச்சடித்து
வந்திருப்பீர்கள்.

சாதாரணமாக பில்புக் அச்சிட்டு தரும்போது கேட்கும்
தொகையை விட லோகோவுடன் அச்சிட்டுத் தந்தால் கூடுதல் தொகை
கேட்டிருப்பார்கள்.

இப்போது டேலி.ஈ.ஆர்பி9
( Tally.ERP9 ) மூலம்
நீங்கள் எளிதில் லோகோவுடன் விற்பனை பில் அச்சிடலாம் !


இந்த வசதி
Tally.ERP9ன் ரிலீஸ் 3லிருந்து புதிதாய் தரப்பட்டது.


என்னங்க பிரஸ் ( PRESS ) வச்சிருக்கவங்களே D.T.P சென்டரில் கொடுத்துத் தான் இந்த வேலைகளை
செய்றாங்க.



நாங்க எப்படி எளிதில் இந்த வேலையை செய்ய முடியும்னு கேட்கிறீங்களா..

ஹலோ.. நண்பரே இதற்காக தனியா டேலி பயிற்சி புத்தகமோ அல்லது டேலி பற்றி
மின்னூல்
( E-Book ) ஏதாவது இருக்கான்னு தேடுறீங்களா..

இதற்காக சிறந்த தொழில் நுட்ப அறிவு உங்களுக்கு இல்லன்னு நினைக்கிறீங்களா.

கவலையே
படாதீங்க.

இதற்கு சிறந்த தொழில்நுட்ப அறிவோ
( TECHNICAL KNOWLEDGE )
அல்லது புதிதாய்
ஏழாம் அறிவு கூட தேவையில்லை.



வாங்க டேலி
( TALLY )
கத்துக்கலாமா..


முதலில் உங்கள் கம்பெனியோட லோகோவை
( LOGO ) JPEG
இமேஜ் பைலாகவோ அல்லது BMP இமேஜ் பைலாகவோ கம்பியூட்டரில் TALLY ஐகானை
ரைட் கிளிக் செய்து,
FIND TARGETஐ திறந்து
PROPERTY-ல் சேமித்து வைத்து
கொள்ளுங்கள்.

JPEG மற்றும் BMP இமேஜ் பைலின் ( SIZE ) அளவுகள்
( 96*80 ) என்று இருக்க வேண்டும்.

அதாவது இமேஜ் பைலின் அளவு:
அகலம் 96 PIXELS ஆகவும்,
உயரம் 80 PIXELS ஆகவும் இருக்க வேண்டும்.

இப்போது எந்த
கம்பெனியின் லோகோவின் இமேஜை சேமித்தீர்களோ அந்த கம்பெனியை திறந்து
கொள்ளுங்கள்.

இப்போது
F11 என்ற கீயை அழுத்துங்கள்.

பிறகு F1 ஐ
அழுத்துங்கள்.

ACCOUNTING FEATURES என்ற திரை தெரிகிறதா..

அதில் கடைசியாக இருக்கும்
OTHER FEATURES
என்ற பகுதிக்கு சென்று ENABLE
COMPANY LOGO ..?
என்பதற்கு
YES என மாற்றுங்கள்.


இப்போது புதிதாய்
COMPANY LOGO என்ற ஒரு கட்டம் தெரியும்.


அந்தக் கட்டத்தில்
LOCATION OF LOGO என்ற பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கே உங்கள் கம்பியூட்டரில் லோகோ
இமேஜ் சேமித்து வைத்துள்ள டிரைவின் ரூட் பாத்தை டைப் செய்யுங்கள்.


உதாரணத்திற்கு

D:/Tally.ERP9.CompLogo.jpg

அல்லது

C:/Tally.ERP9.CompLogo.bmp


இப்படி எதுவோ அதை டைப் செய்யுங்கள்.


குறிப்பு:-
பைல் பெயர் .bmp அல்லது .jpg என்று தான் முடியும்வகையில்
இருக்க வேண்டும்.


இப்போது SAVE செய்து OK என்று அழுத்தவும்.
அவ்வளவு தான்.

நீங்கள் எடுக்கும் எல்லா பிரிண்ட்களிலும் கம்பெனி லோகோ இருக்கும்.







ஒரு SALES INVOICE ஐ பிரிண்ட் எடுத்து பாருங்கள்.

பில்லின்
மேல்பகுதியின் இடதுஓர மூலையில் லோகோ இருக்கிறதா?

SALES INVOICE
பிரிண்டில் மட்டுமல்ல நீங்கள் பிரிண்ட் எடுக்கும்



PURCHASE ORDER ,

DELIVERY NOTE ,

SALES ORDER ,

RECEIPT VOUCHER ,

DEBIT / CREDIT NOTE ,


REMINDER LETTER ,

CONFIRMATIONS OF ACCOUNTS



என எல்லாவற்றிலும் கம்பெனி
லோகோ பிரிண்ட் ஆகி இருக்கும்.

இது தாங்க டேலியின்
( Tally) லோகோ இமேஜ் பிரிண்டிங் என்பது.
டேலியின் இந்த வசதியால்
உங்கள் பிரிண்டிங் சார்ஜ்
( அச்சுகூலி ) வெகுவாக குறையும்.



மீண்டும் சந்திப்போம்,
(அடுத்த பதிவில் )
புதிதாய் சிந்திப்போம்

( Tally பற்றி.. )


- நன்றி.
K.RAJA.
கே.ராஜா.

Oct 20, 2011

போடுங்கம்மா ஓட்டு டேலி சின்னத்தை பார்த்து..



டேலி இன்வாய்சில் கம்பெனி லோகோ (LOGO).



"போடுங்கம்மா ஓட்டு".
சமீப காலமாக எல்லோர் காதுகளிலும் ஒலித்த வார்த்தை தான் "போடுங்கம்மா ஓட்டு"

வழக்கமான தேர்தல் போல் கூட்டணி குழப்பம் இல்லாமல் பெரும்பாலும் அனைவரும் தனித்தே நின்றனர் இந்த உள்ளாட்சி தேர்தலில்.

வாக்கு சேகரிக்க வந்தவர்கள் உங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்ட கையோடு தங்கள் சின்னத்தையும் காண்பித்து உங்களது பொன்னான வாக்குகளை கேட்டு சென்றிருப்பார்கள்.

கட்சிகளுக்கு கொள்கை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு கொடியும் சின்னமும் முக்கியம்.

வாக்களர்களின் மனதில் சென்றடைவது சின்னங்களே.

DMK (திராவிட முன்னேற்ற கழகம்)
சின்னம் உதயசூரியன்.

ADMK (அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்)
சின்னம் இரட்டை இலை.

பா.ம.க-(பாட்டாளி மக்கள் கட்சி)
மாம்பழம்.

MDMK (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்)
சின்னம் பம்பரம்.

தே.மு.தி.க வின் சின்னம் கொட்டு முரசு.

இப்படி கரை வேட்டிகள் திரும்ப திரும்ப உங்களை தேடி வந்தாலும் வாக்குச்சாவடியில் நீங்கள் தேடுவது உங்களுக்கு பிடித்த சின்னம்.

ஆக உங்கள் எண்ணங்களில் எளிதில் குடி கொள்வது சின்னங்களே.

அவ்வளவு ஏன் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் உண்டு.

அரசியல்ல சின்னமெல்லாம் சாதரணமப்பா.
வேட்பாளர்களின் எளிதில் கவரும் சின்னங்களே வாக்காளர்களின் வாக்குகளாக மாறுகின்றன. அதனால் தங்களோட சின்னத்தை மக்களிடம் சென்று பிரபலபடுத்தி சேர்க்க பெருமளவில் விளம்பரம் செய்கிறார்கள்.

அப்போ உள்ளாட்சி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்..?

மக்களால் எந்த கட்சியின்
(வேட்பாளரின்) சின்னம் அதிகமாக முத்திரையிடப் படுகிறதோ அந்த சின்னத்தின் வேட்பாளரே வெற்றியடைவார்.

உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தல் , பாராளுமன்ற தேர்தல் என எல்லாவற்றிற்குமே இது பொருந்தும்.

அரசியல்ல சின்னங்கள் சரி.

வியாபாரத்திற்கும் டேலிக்கும்
(TALLY) என்ன சம்பந்தம் என்கிறீர்களா..?

பொதுவாக வியாபார சந்தைக்கு வரும் பொருட்கள் விளம்பரமில்லாமல் மக்களிடம் சென்றடைவதில்லை.

அவ்வாறு விளம்பரத்தப்படும் போது அந்த கம்பெனியின் லோகோ (LOGO) எனப்படும் சின்னங்களே அதிகமாக மக்களை சென்றடைகின்றன.

G FOR HEALTH என்ற காளீஸ்வரி நிறுவனத்தின் கோல்டு வின்னர் ஆயில் விளம்பரமானாலும் சரி,
உனா பானா என்ற உதயம் பருப்பு விளம்பரமானாலும் சரி,
ஒவ்வொரு கம்பெனியின் லோகோவும் அந்தப் பொருளோடு விளம்பரபடுத்த படுகிறது.
N என்ற எழுத்தோடு கூடிய லோகோ நேனசல் பானாசோனிக் கம்பெனியின் பொருள் என்பதை சர்வதேச அளவில் எடுத்து செல்கிறது.

அதே போலத் தான் S என்ற எழுத்தை கொண்ட லோகோ சின்னம் SONY நிறுவனத்தின் தயாரிப்பு களை உலகெங்கும் அடையாளம் காட்டுகிறது.

ஆக சிறிய நிறுவனமோ பெரிய நிறுவனமோ அவற்றின் லோகோ சின்னங்களே அவர்களின் தயாரிப்புகளை அடையாளம் காட்டுகின்றன.

BCCI மேட்ச் ஆனாலும் சரி,
IPL மேட்ச் ஆனாலும் சரி அதற்கும் ஒரு லோகோ உண்டு.

வித்தியாசமாக S என்ற எழுத்தை கொண்ட மாருதி சுசூகி-யின் லோகோவை மறக்க முடியுமா.
இல்லை நரசுஸ் காபி, மர்பி ரேடியோ இவற்றின் லோகோகளைத் தான் மறக்க முடியுமா.
ஸ்டீவ் ஜாப்ஸ் - ன் ஐபோன், ஐபேடு- களை பிரபலபடுத்திய ஆப்பிள் சின்னம் எவ்வளவு பிரபலம்.

அவ்வளவு ஏன் தமிழக அரசின் லோகோ ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்,
இந்திய அரசின் லோகோ சாஞ்சி சாரநாத் ஸ்தூபி,

மத்திய ரிசர்வ் வங்கியின் புலி சின்னம் என எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.









பொதுவாக லோகோ என்ற சின்னங்கள் மக்கள் மத்தியில் பொருள்களை விளம்பரபடுத்தவும் அந்த நிறுவனத்தை அடையாளப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. என்ன சார்... உங்க நிறுவனத்திற்கும் லோகோ சின்னம் இருக்கா..?

அப்ப கட்டாயம் நீங்க அந்த லோகோ சின்னத்தை விற்பனை பில், டெலிவரி செலான் , லட்டர் பேடு, விசிட்டிங் கார்டு என எல்லாவற்றிலும் பிரிண்ட் செய்திருப்பீர்கள்.

இதற்காகத் தான் Tally.ERP9 லிலும் லோகோ பிரிண்டிங் என்ற புதிய வசதி செய்து தரப்பட்டுள்ளது.

Sep 5, 2011

இப்போது Tally.ERP9 புதிதாய் அரபி ( ARABIC ) மொழியிலும்..



*=Tally.ERP 9*= ன் புதிய அம்சங்கள்
( LATEST UPDATES )

* அரபி العربية (ARABIC) மொழியில் டேலி
(TALLY) *

தேவை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் எங்கள் சேவை தொடரும் என்பதே டேலி
(TALLY) நிறுவனத்தின் சிறப்பம்சம்.

அரபி மொழி இன்று வளைகுடா நாடுகளில்
(GULF COUNTRIES) அதிக மக்களால் பேசப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்ல 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் அரபி மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது.
மேலும் தற்போது ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் டேலி (TALLY) மென்பொருளை பயன்படுத்துகிறார்கள்.

ஏற்கனவே டேலி மென்பொருளில் ஆங்கில மொழியோடு பல்வேறு மொழிகளிலும் பயன்படுத்தும் வசதி உள்ளது.

இப்போது கூடுதலாக அரபி மொழியிலும் பயன்படுத்த வசதி தரப்பட்டுள்ளது.

ஆங்கில மொழி மூலம் அண்டை மாநிலங்கள் மட்டுமல்ல உலகின் எந்த நாட்டு மக்களையும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.

இன்று ஆங்கில மொழி உலகப் பொதுமொழியாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது.

உலகப் போரின் போது உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்து நாட்டின் காலனி நாடுகளாக ( இந்தியா உட்பட ) இருந்தன.

அதனால் தான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சூரிய அஸ்தமனமில்லை என்று சொன்னார்கள்.

காலப்போக்கில் ஏராளமான நாடுகள் விடுதலை அடைந்தாலும் ஆங்கிலேயரின் நிர்வாக மொழியான ஆங்கில மொழி மக்களோடு மக்களாக இரண்டற கலந்துவிட்டது.

அவ்வளவு ஏன்..
நம்மால் ஆங்கில மொழி கலப்பில்லாமல் பேசுவது கடினமாக இருக்கிறது அல்லவா!

நாம் பேசும் தமிழ்மொழியே பேச்சுவழக்கால் தனது இயல்புதன்மை இழந்து தங்கிலீஸ் ( TANGLISH) ஆக மாறிவிட்டது.

ஆங்கிலத்தில் கணக்குகளை எளிதில் டேலி மென்பொருள் மூலம் நிர்வகிக்க முடியும்.

சரி.. பிறகு எதற்கு டேலியில் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் கணக்குகளை நிர்வகிக்க வேண்டும்..?


உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள்.
பல்வேறு வேறுபட்ட மொழி, இனம், மதம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் மொத்த கலவை.
மொழிவாரி மாநிலங்களின் ஒருங்கிணைந்த இணைப்பு.
நாம் எந்த மொழியை தாய் மொழி கொண்டிருந்தாலும் அனைவரும் இந்தியரே.

அதே போல் தான் எந்த மொழியில் நாம் டேலியை உபயோகப்படுத்தினாலும் டேலி அமைப்பு மாறாது.

Google, Yahoo, Facebook என பல்வேறு இணையசேவைகள் தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் தனது சேவையை தருவது எதனால்..?

குறிப்பிட்ட மொழிகள் பேசுவோர் தனது இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவதால் தான்.

அதேபோல் தான் எந்த மொழி பேசுவோர் அதிகமாக டேலி மென்பொருளை பயன்படுத்துகிறார்களோ அந்த மொழியை தனது மென்பொருளில் பயன்பாட்டு மொழியாக சேர்த்து கொள்கிறது.

தாய்மொழி மூலம் பயன்படுத்துவதால் ஆர்வமாய் ஏராளமான பயனாளர்கள் (USERS) அதிகரிப்பார்கள்.
அதனால்தான் டேலியை


CONCURRENT
MULTILINGUAL
SOFTWARE



என்று சொல்கிறார்கள்.

ஒரே சமயத்தில் ஆங்கிலத்தோடு பிற மொழிகளை பயன்படுத்துவதால் என்ன பலன் எனக் கேட்கிறீர்களா..

நீங்கள் வட இந்திய மாநிலத்திற்கு சரக்கை அனுப்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.

இன்வாய்ஸ் மற்றும் டெலிவரி செலானையும் டேலி மூலம் ஆங்கிலத்தில் அனுப்புவதை விட இந்தியில் அனுப்பி பாருங்கள்.

நிச்சயம் கூடுதல் பலன் கிடைக்கும்.

உங்களது சரக்கை பெற்ற வெளிமாநில வணிகர் அவரது தாய்மொழியிலேயே தொடர்பு கொள்வதால் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு வியாபாரம் பெருகும்.


ஓவ்வொருக்கும் தாய் மொழி என்பது
"கண்" போன்றது.

ஆங்கிலம் என்பது கண்ணுக்கு மேல் அணியும் "கண்ணாடி" போன்றது.

அந்த கண்ணாடி அழகுக்காக
(STYLE) அணியும் கூலிங்கிளாஸாகவும் இருக்கலாம். அல்லது உங்கள் பார்வையின் தேவைக்கேற்ப அணியும் பவர் கிளாஸாகவும் இருக்கலாம்.

அதுபோலத் தான் டேலியிலும் உங்கள் தேவைக்கேற்ப பயன்பாட்டு மொழியை மாற்றியமைத்து பயனடையுங்கள்.



டேலியில் பயன்பாட்டு மொழி தேர்விற்கான சுருக்கு விசை

ALT+G



உங்கள் NOKIA அல்லது SAMSUNG கைப்பேசியை எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது
MENU
SETTINGS
LANGUAGES ஐ திறந்தால் ஆங்கிலம் தவிர வேறு சில மொழிகள் இருக்கும்.

அதில் தமிழை தேர்வு செய்யுங்கள்.

உங்கள் கைப்பேசியியின் மொத்த மெனுவுமே தமிழில் மாறியிருக்கும்.

CONTACTS
(தொடர்புகள்)

MESSAGES
(தகவல்கள்)

SETUP
(அமைப்புகள்)
என இருக்கும்.

இப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் குறுந்தகவல் அனுப்ப முடியும்.

இதே தான் டேலியில் மாற்றுகிறீர்களோ அந்த மொழியில் மெனுக்கள் தெரியும்.

அதேபோல் அந்த குறிப்பிட்ட மொழியில் பதிவுகளை பதிவு செய்யலாம்.

லெட்ஜர்களை தமிழில் துவக்கலாம்.


இதையும் தெரிந்து கொள்ளுங்கள்..

1) நாம் வழக்கமாக தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதும் போது என்ன செய்வோம்.


இடமிருந்து வலமாக
(LEFT TO RIGHT) தான் எழுதுவோம். ஆனால் அரபி மொழியில் வலமிருந்து இடமாக
( RIGHT TO LEFT) எழுதுவார்கள்.


2) அதேபோல் நாம்
தேதி/ மாதம் /வருடம்
(DAY/ MONTH/ YEAR)
என்ற முறையில் எழுதுவோம்.
ஆனால் அரபி மொழியில் வருடம்/ மாதம்/ தேதி

(YEAR/MONTH/ DAY) என்று எழுதுவார்கள்.


3) வழக்கமாக நாம் பயன்படுத்தும் புத்தகங்கள் எப்படி இருக்கும்.. முகப்பு அட்டை
(FRONT PAGE) துவங்கி பின்புற அட்டை யில்
(LAST PAGE) முடியும்.

பக்க எண் 1 முதலில் துவங்கி கடைசியில் முடியும்.


அரபி மொழியில் பின்புற அட்டை
( LAST PAGE ) மேலில் இருக்கும்.
முகப்பு அட்டை
( FRONT PAGE ) கீழே இருக்கும்.

Aug 20, 2011

Tally.ERP9ல் புதிய இந்திய நாணய குறியீடு ( NEW INDIAN CURRENCY SYMBOL IN Tally.ERP9 )




*=Tally.ERP 9*=ன் புதிய அம்சங்கள்
( LATEST UPDATES )
( TALLY 9 )

அமெரிக்கா நாட்டின் பணத்தை டாலர் ( DOLLAR ) என்று அழைப்பார்கள்.

இங்கிலாந்தின் பணத்தை ( CURRENCY ) பவுண்டு ( POUND ) என்றும்

ஜப்பான் கரன்சியை யென் ( YEN ) என்றும்

ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் கரன்சியை யூரோ ( EURO ) என்றும் அழைப்பார்கள்.

டாலர்
( DOLLAR ) $

பவுண்டு
( POUND ) £

யூரோ
( EURO ) €


யென்
( YEN ) ¥



இவற்றின் கரன்சி குறியீடுகள்
( CURRENCY SYMBOL )
உலக அளவில் பிரசித்தமானது.

அதேபோல் தான் நம் இந்திய நாட்டின்

பணத்தை
( CURRENCY )

ரூபாய்
(RUPPEES )


என்று அழைக்கிறோம்.
உதாரணத்திற்கு 1000 ரூபாய் என்பதை எப்படி எழுதுவோம்.
ரூ. ஆயிரம் மட்டும் என்று தமிழில் எழுதுவோம்.

ஆங்கிலத்தில் எழுதும்போது Rs.1000 only என எழுதுவோம்.

Rs என்ற இந்திய நாணய குறியீட்டை
( CURRENCY SYMBOL ) இந்திய அரசு சமீபத்தில் மாற்றி அமைத்தது அனைவருக்கும் தெரிந்ததே.

இதை வடிவமைத்த பெருமை தமிழகத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரை சேரும்.



புதிய நாணய குறியீட்டுடன் கூடிய
1 ரூபாய்,
2 ரூபாய்,
5 ரூபாய்,
10 ரூபாய்
நாணயங்களை ரிசர்வ் வங்கி விரைவில் புழக்கத்திற்கு விட உள்ளது.







இந்த புதிய நாணய குறியீட்டை டவுண்லோடு செய்து பலரும் MS WORD ,
EXCEL -லில் பயன்படுத்த துவங்கி விட்டனர்.

அப்ப ( TALLY ) டேலி மட்டும் என்ன சும்மாவா..

நாமும் காலத்திற்கேற்ப மாறணுமில்ல.

அதனால் Tally.ERP9 ம் தனது மென்பொருளில் புதிய மாற்றம் செய்துள்ளது.

RELEASE 3 ல் இதற்குரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் Rs என்பதற்கு பதிலாக புதிய நாணய குறியீட்டுடன் அனைத்து ரிப்போர்டும் நமக்கு கிடைக்கும்.

நாம் பிரிண்ட் எடுக்கும் எல்லா ரிப்போர்ட்களிலும், சேல்ஸ் இன்வாய்ஸ்களிலும் புதிய இந்திய நாணய குறியீடு தான் இருக்கும்.


இந்த நாணய குறியீட்டிற்கான புதிய சுருக்குவிசை
( ShortCut Key )

Ctrl + 4



Ctrl+ N என்ற சார்ட்கட் கீயை அழுத்தி உங்கள்

Tallyன் கால்குலேட்டரை திறந்து கொள்ளுங்கள்.



இப்போது





Ctrl +4
என்பதை ஒரு சேர அழுத்துங்கள்.

புதிய இந்திய நாணய குறியீடு தெரிகிறதா...?

Jul 23, 2011

வரி மாற்றங்களும் சில நெருடல்களும் ( Tally 9 )




VAT

நெருடல் 1 :

வாட் வரிச் சட்டம் 1.1.2007 நடைமுறைக்கு வந்தது.
ஆனால் அதற்கு முன் எந்த ஒரு பொருளுக்கும் வரி மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

தமிழகத்தில் 20 சதவீத வரிக்கு விற்கப்படும் பொருள் பாண்டிச்சேரியில் 4 சதவீத வரிக்கு கூட விற்கப்படும்.

அதற்காக இந்தியாவில் நீங்கள் எந்த மாநிலத்தில் ஒரு பொருளை வாங்கினாலும் ஒரே வரி தான் இருக்க வேண்டும்.

ஒரே பொருளுக்கு மாநிலத்திற்கு மாநிலம் வரி வேறுபடக்கூடாது.

சமச்சீர் வரித் திட்டம்
(UNIFORM TAX SYSTEM)
என்ற முறை தேவைப்பட்டது.

அதற்காகத் தான் மதிப்புக்கூட்டு வரி
( VALUE ADDED TAX ) எனும் வாட் வரி இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்டது.

ஆனால் நடப்பது என்ன..?

இந்தியா முழுதும் எந்த பொருளுக்கும் ஒரே வரி விகிதம் என்பதற்காக ஆரம்பிக்கபட்ட STATE BASED VAT SYSTEM இன்று எந்த பொருளை வாங்கினாலும் பழையபடியே மாநிலத்திற்கு வெவ்வேறு வரி விகிதம் என வந்துள்ளது!


நெருடல் 2 :

தமிழக வாட் வரிச் சட்டத்தில் இன்னமும் REVISED RETURN கொடுக்க வணிகர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை!


நெருடல் 3 :

வாட் வரி நடைமுறைக்கு வந்தவுடன் மத்திய விற்பனை வரி
( CST ) ஆண்டிற்கு ஒரு சதவீதம் வரி குறைக்கப்படும் என கூறப்பட்டது.
ஆனால் நடந்தது என்ன..?!

4 சதவீதமாக இருந்த மத்திய விற்பனைவரி
( CST )
முதலில் 3 சதவிகிதமாகவும்
பின்பு 2 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டது.
ஆனால் 2 சதவிகித மத்திய விற்பனைவரி இன்னமும் குறைக்கபடாமல் இருக்கிறது!

தற்போது CST வரியே இல்லாமல் இருந்திருக்க வேண்டும்..
ஆனால் ஏனோ
2 சதவிகித வரியாகவே தொடர்கிறது.

இது ஒருபுறம் இருக்க
வாட் வரியை நீக்கி விட்டு மத்திய அரசு இந்தியா முழுவதும் GST
( சரக்கு சேவை வரி )
என்ற வரித் திட்டத்தை கொண்டுவர உள்ளது.

இதன்படி
( Goods Service Tax )
சரக்கு சேவைவரி என்பது

VAT ,

CST ,

EXCISE ,

SERVICE TAX

என அனைத்து வரிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

இதற்காக மத்திய அரசு மாநில அரசுகளிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.

=* நேற்று *=
31.12.2OO6 வரை
TNGST தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டம் Tamil Nadu General Sales Tax.

=* இன்று *=
1.1.2007 முதல் VAT மதிப்பு கூட்டு வரிச் சட்டம் Value Added Tax.

=* நாளை *=
GST சரக்கு சேவை வரி Goods Service Tax.



நாட்டில் எந்த வரிச் சட்டம் நடைமுறைக்கு வந்தாலும்
Tally நிறுவனம் அதற்கேற்ப தனது மென்பொருளில் மாற்றங்கள் செய்து புதிய மேம்படுத்திய (Release) வெளியீடுகளை அறிமுகம் செய்கிறது.
இதனால் Tally மென்பொருளை உபயோகிப்பவர்கள் எளிதில் கணக்குகளை பதிவு செய்ய முடிகிறது. அதேபோல் வரிகளை சரியாக கணக்கிட்டு அரசுக்கு செலுத்த முடிகிறது. பயன்பாட்டாளர்களின் தேவைக்கேற்ப தங்கள் மென்பொருளில் மாற்றம் செய்து வெளியிடுவதால் தான் அன்றும் இன்றும் என்றும் Tally நிறுவனம் கணக்கியல் மென்பொருள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

Jul 18, 2011

தமிழகத்தில் புதிய வாட் வரி மாற்றமும், Tally.ERP9ல் புதிய மாற்றமும் ரிலீஸ் 146 ( TALLY 9 )




*=Tally.ERP 9*= ன் புது வெளியீடு ரிலீஸ் 146.

தமிழக அரசு முன்னதாக ஆகஸ்டு 4ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் என அறிவித்திருந்தது.
ஆனால் யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்பது போல வரி மாற்றம் தற்போது முன்னே வந்துள்ளது. பட்ஜெட் ஆகஸ்டில் என தெரிகிறது.
புதிய வாட் ( VAT ) வரி மாற்றங்கள் 12.07.2011 முதல் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி இதுவரை 4 சதவீத வாட் வரி விதிக்கபட்ட பொருள்கள் எல்லாம் இனி 5 சதவீத வாட் வரி விதிக்கப்படும்.

அதே போல் இதுவரை 12.5 சதவீத வரி விதிக்கபட்ட பொருள்கள் எல்லாம் இனி 14.5 சதவீத வரி விதிக்கப்படும்.



புதிதாக தற்போது 20 சதவீத வரி அமல்படுத்தபட்டுள்ளது.

இதன்படி புகையிலை, சுருட்டு, பீடி, சிகரெட் முதலியவை 20 சதவீத வரிவிதிப்பிற்கு வந்துவிடும்.

டெக்ஸ்டைல் எனப்படும் ஜவுளி வகைகளுக்கு இதுவரை முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஜவுளி வகைகளுக்கு புதிதாக 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கைத்தறிக்கு வரிவிலக்கு தொடர்கிறது.

தற்போது பில் போடுவது முதல் கணக்கு பராமரிப்பு வரை எல்லாமே கம்பியூட்டர்மயமாகி விட்டது.

இதனால் புதிய வரி விகிதத்திற்கேற்ப எல்லா வணிகர்களும் தங்களது கணக்கியல் மென்பொருளில் (ACCOUNTS SOFTWARE) மாறுதல்களை உடனடியாக செய்ய வேண்டியுள்ளது.

வணிகர்கள் தங்கள் மென்பொருளில் திருத்தம் செய்தால் தான் புதிய வரியை வசூல் செய்ய முடியும்.

வாட் வரி கணக்கிட்டு மாத முடிவில் ரிட்டன்களை
E-FILE செய்ய முடியும். மற்ற தனியார் மென்பொருளை பற்றி தெரியவில்லை.

Tally நிறுவனம் நான் ரெடி நீங்க ரெடியா என்பது போல உடனடியாக தமிழக அரசின் வாட் வரி மாற்றத்திற்கேற்ப தனது மென்பொருளில் மாற்றம் செய்து RELEASE 146ஐ அறிமுகம் செய்துள்ளார்கள். எனவே உடனே

www.tallysolutions.com

என்ற தளத்திற்கு சென்று
RELEASE 146 ஐ பதிவிறக்கம் செய்து உங்கள்
Tally.ERP9 ஐ மேம்படுத்தி
(UPGRADE) கொள்ளுங்கள்..

Jun 11, 2011

*=Tally.ERP 9=* ல் கால்குலேட்டர் வசதி. ( பகுதி 2 ) ( Tally )

*=Tally.ERP 9*= ல் கால்குலேட்டர் வசதி. ( பகுதி 2 )

பெரும்பாலும் நம்மில் பலர் விண்டோஸ் இயங்குதளத்தை தான் உபயோகபடுத்துகின்றோம். நீங்கள் கம்பியூட்டரை பயன்படுத்தும்போது கால்குலேட்டர் வசதி தேவைப்பட்டால் என்ன செய்வீர்கள். உங்களுடைய விசைப்பலகையில் ( KEY BOARD ) கீழ் பகுதியின் இடது ஓரத்தில் WINDOWS FLAG KEY என்ற கீ ALT மற்றும் CTRL இடைப்பட்டு இருக்கும்.இப்போது அந்த WINDOWS KEY அழுத்துங்கள். உடனே START MENU திரையில் தோன்றும். அதில் ALL PROGRAMMES என்பதை செலக்ட் செய்தால் ACCESSORIES என்பது தெரியும். இப்போது அதில் CALCULATOR என்பதை அழுத்தி பாருங்கள். இப்போது கால்குலேட்டர் ரெடி. கால்குலேட்டரில் VIEW என்பதை அழுத்தி சாதாரண கால்குலேட்டரை SCIENTIFIC கால்குலேட்டராகவும் மாற்றி பயன்படுத்தலாம். அல்லது மானிட்டரில் இடது ஒரத்தின் கீழ் பகுதியில் தெரியும் START என்பதை MOUSE கொண்டு அழுத்துங்கள். இப்போது ALL PROGRAMS அழுத்தி ACCESSORIESல் CALCULATORஐ அழுத்துங்கள்.

கால்குலேட்டர் மெனுவை எளிதில் தேர்வு செய்ய மற்றொரு முறையும் உள்ளது. R மற்றும் WINDOWS KEYஐ ஒரு சேர அழுத்தினால் ( Win key + R ) RUN BOX தெரியும். இப்போது RUN boxல் CALC என்று டைப் செய்து ENTER கீயை அழுத்தவும். இப்போது கால்குலேட்டர் வசதி எளிதில் ரெடி.
ஒருவேளை நீங்கள் இணையத்தை ( INTERNET ) பயன்படுத்தும் போது உங்களுக்கு கால்குலேட்டர் வசதி தேவைப்பட்டால் என்ன செய்யலாம்...? www.google.com என்கிற வலைத்தளத்தை ஓபன் செய்யுங்கள். அதில் தெரியும் SEARCH BOXஐ நீங்கள் கால்குலேட்டராக பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு 5* 5 = என SEARCH BOX - ல் டைப் செய்து ENTER கீயை அழுத்துங்கள் . விடை 25 என்று தெரிகிறதா. இது தான் GOOGLE CALCULATOR. எல்லாம் சரி..

Tally ல் கால்குலேட்டர் வசதி எப்படி வேலை செய்கிறது தெரியுமா...? Tally கால்குலேட்டருக்கு 2 சுருக்கு விசைகள் ( Shortcut keys) உள்ளன.
1) Ctrl + N கால்குலேட்டரை திறக்க
2) Ctrl+M கால்குலேட்டரை மூட Esc பட்டனை அழுத்தியும் கால்குலேட்டரிலிருந்துவெளியேறலாம்.

நீங்கள் Ctrl+ N என்ற சார்ட் கட் கீயை அழுத்தியவுடன் திரையின் அடிப்பகுதியில் படுக்கைவாட்டமாக டேலி கால்குலேட்டர் திறக்கும். இதில் உங்களுக்கு தேவையான கூட்டல் , கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் போன்ற கணக்குகளை தேவைப்படும்போது தனியாக போட்டு பார்க்கலாம்.
VOUCHER ENTRY ன் போது ஒரு கணக்கை டேலி கால்குலேட்டரில் நீங்கள் போட்டு பாருங்கள்.அதில் வரும் கணக்குகளின் விடைகளை ALT+CTRL+C என்ற சார்ட்கட் கீ மூலம் COPY செய்யுங்கள். இப்போது Esc பட்டனை அழுத்துங்கள். வவுச்சர் என்டிரியின் AMOUNT பகுதிக்கு செல்லுங்கள். இப்போது Alt+Ctrl+V என்ற சார்ட் கட் கீயை பயன்படுத்தி PASTE செய்யுங்கள். என்ன வேலை சுலபமாக முடிந்ததா. இது சாதாரண கால்குலேட்டரை டேலியில் அவசரத்திற்கு பயன்படுத்தும் முறை.
Tallyயில் இன்னுமொரு கால்குலேட்டர் வசதி உள்ளது. அது தான் AUTO VALUE CALCULATOR. உதாரணத்திற்கு ஒரு கம்பெனியில் நீங்கள் தினமும் WAGES ( கூலி ) கொடுப்பதை VOUCHER ENTRY மூலம் அடிக்க வேண்டியுள்ளது என வைத்து கொள்வோம். மொத்தம் 45 வேலையாட்கள் இருக்கிறார்கள். ஒருவருக்கு கூலி 350 ரூபாய். ஆனால் தினமும் 45 பேரும் வேலை செய்ய மாட்டார்கள்.

ஒரு சில நாள் 42 பேர் வேலை செய்வார்கள். ஒரு சில நாள் 40 பேர் வேலை செய்வார்கள். இப்போது F5ஐ அழுத்தி PAYMENT VOUCHER ENTRYஐ பகுதிக்கு செல்லுங்கள். F2ஐ அழுத்தி உங்களுக்கு தேவையான தேதியையும் மாற்றிக் கொள்ளுங்கள். (அன்றைய தேதிக்கு 45 பேருக்கு கூலி கொடுக்க வேண்டும்.) WAGES என்கிற LEDGERஐ செலக்ட் செய்யுங்கள். இப்போது AMOUNT என்ற கட்டத்தில் எவ்வளவு தொகையை என டைப் செய்யாமல் Alt+C என்ற சார்ட்கட் கீயை அழுத்துங்கள். கால்குலேட்டர் ஒபன் ஆகி விட்டதா. 45*350 என்று டைப் செய்து ENTER கீயை அழுத்துங்கள். இப்போது AMOUNT கட்டத்தில் 15750 என்பது வந்து விழுந்து விட்டதா. இது தான் AUTO VALUE CALCULATOR . நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள். VOUCHER ENTRYன் போது AMOUNT கட்டத்தில் நேரடியாக தொகையை டைப் செய்யாமல் ALT+C என்ற சார்ட்கட் கீயை அழுத்தி நீங்கள் கணக்கிடும் தொகைக்கான விடை AMOUNT கட்டத்திடும் வந்து விடும். இந்த முறையில் நிறைய நேரம் மிச்சமாகும்.

May 17, 2011

*=Tally.ERP 9*= ல் கால்குலேட்டர் வசதி. (பகுதி 1) ( Tally )



*=Tally.ERP 9*= ல் கால்குலேட்டர் வசதி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.
பரோட்டா கடையில் 50 பரோட்டா சாப்பிடும் போட்டி நடக்கும். போட்டியில் பங்கேற்பவர் பரோட்டா சாப்பிடுவதை சப்ளையர் கோடு போட்டு கணக்கிடுவார்கள்.
இதில் கடைக்காரர் கள்ள ஆட்டம் ஆட பங்கேற்பவர் அவரோட நண்பர் அப்புக்குட்டியை கூப்பிட்டு கோட்டை அழிக்க சொல்லி திரும்பவும் சாப்பிட துவங்குவார்.

முன்பெல்லாம் வீட்டிற்கு தயிர் கொண்டு வரும் பெண் எப்போதெல்லாம் தயிர் தருகிறாளோ அப்போதெல்லாம் வீட்டு வாசலில் கரியில் கோடு போட்டு செல்வார்களாம்.
மாத முடிவில் கரிகோட்டை எண்ணி சரி பார்ப்பார்கள்.
இதையே ஒரு பள்ளி செல்லும் குழந்தையை கூட்டவோ கழிக்கவோ சொன்னால் விரல் விட்டு சரிபார்க்கும்.
அதேபோல் தான் மாணவர்களை கண்ணன் அரிச்சுவடி வாய்பாடு புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்வார்கள்.

அதெல்லாம் இப்ப மாறிப் போச்சு. சிறுவர்சிறுமியரை " அபாஸ்கஸ்" வகுப்பிற்கு அனுப்பி விடுகிறார்கள்.

தற்போது பெரியவர்களே கால்குலேட்டர் இல்லாமல் எந்த கணக்கையும் போட முடியாமல் திணறுகிறார்கள்.



இதற்காக எந்நேரமும் கால்குலேட்டரை நீங்கள் பாக்கெட்டில் வைத்திருக்க தேவையில்லை.
தற்போது அனைத்து செல்போனிலும் கால்குலேட்டர் வசதி இருக்கிறது. நீங்கள் கம்பியூட்டரில் ஏதாவது வேலை செய்யும்போது கால்குலேட்டர் வசதி தேவைப்பட்டால் என்ன செய்வீர்கள்..

( தொடரும்.. )

Apr 26, 2011

*=Tally.ERP9=* ல் POS ஆப்ஷன் கொண்டுவர* [ PART 2 ]




*=Tally.ERP 9*= ல் POS இன்வாய்ஸ் ஆப்ஷனை கொண்டு வருவதற்கான வழிமுறை.
( பகுதி 2 )

இப்போது F9ஐ அழுத்தி எப்போதும் போல் கொள்முதல்
( PURCHASE ) விபரங்களை பதிந்து ( ENTRY) கொள்ளுங்கள்.
பிறகு F8ஐ அழுத்துங்கள்.

இப்போது SALES ( விற்பனை ) விபரங்களை பதிவு செய்ய 2 ஆப்ஷன்கள் திரையில் தெரியும்.

SALES மற்றும் POS SALES என 2வித ஆப்ஷன்கள்.
அதில் POS SALES என்பதை தேர்வு செய்யுங்கள்.

இப்போது திரையில் POS SALESக்கான VOUCHER ENTRY SCREEN திரையில் தெரியும்.

வழக்கமான SALES ENTRYக்கான ஆப்ஷன் போல தான் இருக்கும்.

ஆனால் திரையின் கீழ்பகுதியில் Narration பகுதி இருக்காது.

அதற்கு பதில் CASH PAYMENTஆ அல்லது CARD PAYMENTஆ அல்லது GIFT COUPONஆ என கேட்டிருக்கும்.

POS VOUCHER ENTRYல் நீங்கள் எப்போதும் போல் SALES குறித்த தகவல்களை பதிவு செய்யுங்கள்.

POS sales என்பது CREDIT SALES மாதிரி இல்லை.

ஒவ்வொரு பில்லிற்குரிய தொகை ரொக்கமாகவோ ( CASH). அல்லது CREDIT CARD மூலமாகவோ அல்லது DEBIT CARD மூலமாகவோ அல்லது GIFT COUPON மூலமாகவோ பெறப்படும்.

மொத்தத்தில் இந்த விற்பனை உடனடி செட்டில்மெண்ட் என்ற முறையில் நடைபெறும். கிரெடிட் கார்டு , டெபிட் கார்டு தெரியும்.

அதென்ன கிப்ட் வவுச்சர் என கேட்கிறீர்களா. BPO , CALL CENTER மற்றும் SOFTWARE போன்ற கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் SODEXA என்ற கிப்ட் கூப்பனை குறிப்பிட்ட தொகைக்கு தருவார்கள்.

SODEXA கூப்பனை ரிலையன்ஸ் மற்றும் பிரபல உணவகங்களில் கொடுத்து நமக்குரிய பில்லை கிரெடிட் கார்டு போல் பயன்படுத்தி பில் தொகையை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்.

Mar 28, 2011

Tally.ERP9-ல் POS INVOICE ஆப்ஷன் - PART 1



*=Tally.ERP 9=* ல் POS இன்வாய்ஸ் ஆப்ஷனை கொண்டு வருவதற்கான வழிமுறை.


முதலில் புதிதாக கம்பெனி ஒன்றை
Tally.ERP 9 ல்
( Accounts with inventory ) முறையில் துவக்குங்கள்.

இப்போது GATEWAY OF TALLYல் உள்ள ACCOUNTS INFOவிற்கு செல்லுங்கள்.

பிறகு VOUCHER TYPEஐ செலக்ட் செய்து அதில் CREATE என்பதை அழுத்துங்கள்.

இப்போது திரையில் தெரியும் VOUCHER CREATIONஐ பின்வருமாறு புதிதாக துவக்குங்கள்.

NAMEல் POS INVOICE என்றோ
RETAIL SALES என்றோ டைப் செய்யுங்கள்.

TYPE OF VOUCHER என்பதற்கு
SALES என்றும் Abbr என்பதற்கு POS என்றும் டைப் செய்யுங்கள்.


இப்போது Printing பகுதியில்
Print after saving Voucher என்பதற்கு YES என்றும் Use for POS invoicing என்பதற்கு YES என்றும் டைப் செய்யவும்.

Print Message 1 என்பதற்கு Thank You என்றும்
Print Message 2 என்பதற்கு
Visit Again என்றும்
Default Print Title என்பதற்கு INVOICE என்றும் டைப் செய்யுங்கள்.

கடைசியாக Declaration என்பதற்கு
Goods once sold cannot taken back என்று டைப் செய்து Accept என்பதற்கு YES என ENTER செய்யுங்கள்.


சரி.
இப்போது நமக்கு POS INVOICE Option ரெடி..

நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள்..

புதிதாக ஒரு கம்பெனியை வழக்கம் போல் துவக்கி இருக்கிறீர்கள்.
அதில் புதிதாக ஒரு POS INVOICE என்ற VOUCHER TYPEஐ SALES என்ற பிரிவின் கீழ் துவக்கியுள்ளீர்கள்.

Mar 5, 2011

POS இன்வாய்ஸும் பார் கோடின் பயன்பாடும்




எங்கேயோ எப்போதோ பார்த்த கார்ட்டூன் ஒன்று. சென்னையில் ஒரு மாலைவேளையில் கணவன் துணிக்கடை வாசலில் சோர்வோடு உட்கார்ந்திருப்பார். கைக்குழந்தை அவர் மடியில் தூங்கி கொண்டிருக்கும். எதிரே வரும் நண்பர் விசாரிப்பார். அதற்கு காலையிலே என் பொண்டாட்டி கடைக்குள்ளே போனா . ஆனா இன்னும் பர்சேஸ் முடிஞ்சி வெளியே வரலை என்பார். இதை படித்துவிட்டு நகைச்சுவையாக நினைக்காதீர்கள். நம்மில் பலர் துணிக்கடைக்கோ , டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கோ , சூப்பர் மார்கெட்டுக்கோ ஷாப்பிங் மாலுக்கோ சென்றால் நேரம் பார்ப்பதில்லை. நம்முடைய ரசனைக்கேற்ப தேவையான பொருளை தேர்வு செய்ய ( SELECTION செய்ய) மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவோம். அதற்காக எவ்வளவு நேரம் செலவழித்தாலும் பரவாயில்லை , ஆனால் பில் கவுண்டரில் 5 நிமிடத்திற்குமேல் நிற்க நம் மனம் இடம் தராது. நம்முடைய மனநிலை இப்படி இருக்கிறது. அங்கேயிருக்கும் கடைக்காரர்களை ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். உதாரணத்திற்கு சென்னையின் பிரபலமான துணிக்கடை ஒன்றை நினைத்து பாருங்கள். ஜவுளிக்கடையா அல்லது ஜவுளிக் கடலா என்பது போல் பிரமாண்டமாய் உங்களை வரவேற்கும்.
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைத்துவகையான ரெடிமேட் , சூட்டிங் , சர்டிங் , சேலைகள் , சுடிதார் மெட்டிரீயல்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்ய பல ஊழியர்கள் உதவுவார்கள். நீங்கள் தேர்வு செய்தவற்றை கேஷ் கவுண்டருக்கு ஒருவர் கொண்டுவருவார். அதை சரிபார்த்து பில் போடுவார் மற்றொருவர். பில்லுக்குரிய பணத்தை நாம் கேஷியரிடம் கொடுத்தவுடன் பில்லுக்குரிய பொருட்களை டெலிவரி செக்சனுக்கு அனுப்பி வைப்பார். டெலிவரி செக்சனில் பில்லை சரிபார்த்து பொருட்களை தருவார்கள். இந்த தொடர்ச்சியான பணியில் எங்காவது சிறு தவறு நடந்தாலும் சிக்கல் தான். விற்பனை முடிந்தவுடன் இறுதியாக கையிறுப்பு பணமும் ( cash in hand ) அன்றைக்கு பில் போட்ட தொகையும் கேஷியருக்கு சரியாக இருக்க வேண்டும். CASH இருப்பு பார்த்தாச்சு.OK சரக்கு இருப்பை எப்படி சரிபார்ப்பார்கள்.
ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் சரக்கு இருப்போடு ( OPENING STOCK ) அன்றைக்கு வந்த சரக்கையும் ( PURCHASE ) சேர்ந்துள்ள இருப்பில் அன்றைய விற்பனையை ( SALES ) கழித்தால் இறுதி இருப்பு சரக்கு ( CLOSING STOCK ) கிடைக்கும். CLOSING STOCKஐ சரிபார்க்க தினமும் விற்பனை முடிந்ததும் ஒவ்வொரு ரேக்கையும் எண்ணி சரி பார்க்க முடியாது. அதே சமயம் கடையிலுள்ள ஒவ்வொரு பொருளையும் BATCH WISE பிரித்து BAR CODE ஸ்டிக்கர் ஒட்டி Tally.ERP 9 மூலம் POS இன்வாய்ஸ் மூலம் பில் போட்டிருந்தால் தினசரி தெளிவான ITEM WISE இறுதி இருப்புச் சரக்கு ( CLOSING STOCK ) கிடைக்கும்.

Feb 26, 2011

POS INVOICE ஒரு அறிமுகம்




சமீபத்தில் பீச் ரயில் நிலையம் சென்றேன். அங்கேயுள்ள சரவண பவனில் காபி அருந்தி விலை கேட்டேன். 19 ரூபாய் கொடுத்தவுடன் ஒரு சிறிய பில்லைத் தந்தார்கள் . அந்த பில் POS ( POINT OF SALES ) INVOICE தான். அந்த சிறிய பில்லில் கடையின் பெயர் , முகவரி , தொலைபேசி எண் , வாட் வரி பதிவு எண், பில் தேதி , பில் நம்பர் , சேல்ஸ் மேன் பெயர் , எந்த பொருள் , எத்தனை விற்கப்பட்டது , வாட் விற்பனைவரி என எல்லாமும் இருந்தது. சரவண பவன் மட்டுமல்ல ஹாட் சிப்ஸ் , ஆனந்த பவன் என எங்கும் POS INVOICE மயம் தான். இப்போதெல்லாம் சிறிய டிபார்மெண்ட் ஸ்டோர் முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை எங்கும் இதே நிலை தான். RETAIL வணிகம் எனப்படும் சில்லறை வணிகம் செய்யும் ஜவுளிகடைகள் எல்லாம் தற்போது பார் கோடு மூலம் POS INVOICE தருகிறார்கள். கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில் கார்பன் பேப்பர் வைத்து பில் போட்டு வியாபாரம் செய்வது கடினம். அதிலும் பொருட்களை சரிபார்த்து பில் போட்டு அதற்குரிய பணம் வாங்குவது சவாலான விஷயம்.
அதனால் தான் கூட்ட நெரிசல் உள்ள புத்தக கடை , செருப்பு கடை, பேக்கரி , ஸ்வீட் ஸ்டால் , துணிக்கடை , மெடிக்கல் ஷாப் போன்ற இடங்களில் POS INVOICE மூலம் பில் தருகிறார்கள். POS INVOICE பயன்படுத்துவதால் நேரம் மிச்சமாகிறது. ஏராளமான பொருட்களை வைத்து விற்பனை செய்யும் கடைகளில் கூட தெளிவான ஸ்டாக் நிலவரத்தை தெரிந்து கொள்ளமுடிகிறது. ( சில்லறை வியாபாரிகளுக்கென்றே Tally நிறுவனம் Tally Shopper 9 என்ற தனி மென்பொருளை வெளியிட்டுள்ளது). அவ்வளவு ஏன் சரக்கு இருப்பு ( CLOSING STOCK ) முதல் கையிருப்பு ( CASH BALANCE ) வரை எளிதில் தெரிந்து கொள்ளலாம். எந்தெந்த பொருள் அதிகம் விற்பனையாகிறது. எந்த பொருள் விற்காமல் தேங்கியுள்ளது என நாம் தெரிந்து கொள்ள முடிவதால் PURCHASE MANAGEMENT எளிதாகிறது.

Jan 12, 2011

சென்னை புத்தகக் கண்காட்சியில் Tally.ERP9 மூலம் பில்.




சமீபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன்.
அங்கிருந்தவை புத்தகக் கடைகள் அல்ல !
புத்தகக் கடல் !!

ஆம் பல இலட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்து கிடந்தன.

அறிவு தேடலின் புதிய திருவிழா இக் கண்காட்சி.

அலைமோதும் கூட்டத்தில் புத்தகத் தேடலில் இருந்த போது என்னுடன் வந்த நண்பர் கேட்டார்..
பல்வேறு தலைப்புகள்,
வெவ்வேறு ஆசிரியர்கள்,
எண்ணிலடங்கா புத்தகங்கள் எப்படி இவற்றை விற்று ஸ்டாக்கை எவ்வாறு சரிபார்ப்பார்கள் எனறு..

நானும் யோசனையோடு கவனித்தேன்..

ஒரு சில கடைகள் தவிர பெரும்பாலான கடைகளில் கம்பியூட்டரில் பில் போட்டு விற்பனை செய்தார்கள்.
அதிலும் குறிப்பாக 2 கடைகளில் மட்டுமே Tally.ERP9 மூலம் பில் போட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.
ஒரு வட இந்திய கடையில் Tally.ERP9 ல் POS இன்வாய்ஸ் மூலம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அதேபோலத்தான் உயிர்மை பதிப்பகத்திலும் Tally.ERP9 மூலம் பில் போட்டு கொண்டிருந்தனர்.

ஒரே வித்தியாசம் உயிர்மை புத்தகக் கடையில் விற்பனை செய்த புத்தகத்தின் மேலுள்ள பார் கோடு
(BAR CODE) மீது
ஸ்கேனர்
(SCANER) வைத்து அழுத்துகிறார்கள்.






உடனே திரையில் அந்த புத்தகத்தின் பெயர் (தமிழில்) மற்றும் விலை கம்பியூட்டரில் பதிவாகிறது.

மொத்த பில் தொகையை ரொக்கமாகவோ CREDIT CARD மூலமாகவோ பெற்று கொள்கிறார்கள்.
பிறகு அந்த POS இன்வாய்ஸை பிரிண்ட் எடுத்து புத்தகத்தோடு தருகிறார்கள்.

தமிழில் புத்தகத்தின் பெயர் போட்டு தந்தது ஆச்சர்யம்.


எல்லாம் சரி.

Tally.ERP9 இல்
"POS INVOICE"
என்றால் என்ன.? என்று கேட்கிறீர்களா..


சாதாரண இன்வாய்ஸ்க்கும் POS இன்வாய்ஸ்க்கும் என்ன வித்தியாசம்..?

விபரம் அடுத்த பதிவில்..

Jan 6, 2011

Tally.ERP9இல் PDF வசதி [Part-2]




இப்போது Tally.ERP9 மூலம் எந்த ஒரு ரிப்போர்ட்டையும் நீங்கள் PDF
(Portable Document Format)
ஆக மாற்றி கொள்ளலாம்.
PDF என்பது ஜெராக்ஸ் காபி போன்றது என்றாலும் அதில் யாரும் எந்த வித மாற்றமோ திருத்தமோ செய்ய இயலாது.
பாஸ்வேர்டு போட்டு மற்ற யாரும் பார்க்காதபடி யாருக்கும் நீங்கள் தைரியமாக மின்னஞ்சல் அனுப்பலாம்.
அவ்வளவு ஏன் உங்களுக்கு தேவையான கம்பெனியின் முக்கிய ரிபோர்ட்களை நீங்கள் PDF ஆக மாற்றி பென் டிரைவில்
( PEN DRIVE ) COPY செய்து வைத்து கொண்டால் அந்த PDF பைலை நாம் எங்கேயும் எப்போதும் பயன்படுத்தலாம்.

பிரபல வெளிநாட்டு வங்கிகளான CITI BANK , HDFC BANK போன்றவை கூட தனது வாடிக்கையார்களுக்கு மாதந்திர ஸ்டேட்மெண்டை வேறு யாரும் திறந்து பார்க்காதபடி பாஸ்வேர்டு போட்டு தான் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்.
OK நண்பர்களே.
Tally.ERP9 மூலம் எப்படி இன்வாயிஸ் காபி மற்றும் வேறு ரிப்போர்ட்ககளை மின்னஞ்சலில் PDF பைலாக அனுப்புவது என்று பார்ப்போம்.


வழக்கமாக நம்முடைய வெளிமாநில வியாபாரிகள் திடீரென பில் காபி கேட்டால் என்ன செய்வோம்.
1) பில்லை ஜெராக்ஸ் எடுத்து கொரியரிலோ தபாலிலோ அனுப்புவோம்.

அல்லது

2) பில்லை ஜெராக்ஸ் எடுத்து FAX அனுப்புவோம்.

அல்லது

3) பில்லை SCAN செய்து மின்னஞ்சலில் அனுப்புவோம்.

XEROX , FAX , SCANNER எதுவும் தேவையில்லை.
Tally.ERP9 உங்களிடம் இருந்தால் போதும்.
வேலை சுலபமாகி விடும்.
நீங்கள் Tally.ERP9 மென்பொருளை பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் வெளிமாநில வாடிக்கையாளர்க்கு BILL COPY அனுப்புவது மிகவும் எளிதாகிவிடும்.

இந்த முறையில் அனுப்புவதால் நமது நேரமும் செலவும் மிச்சமாகும்.
உதாரணத்திற்கு டேலி.ஈஆர்பி9 மூலம் இன்வாய்ஸ் பில் காபியை
( INVOICE BILL COPY ) எப்படி PDF பைலாக மாற்றி வெளிமாநில வியாபாரிக்கு மின்னஞ்சல் அனுப்புவது என்று பார்ப்போம்.


உங்கள் Tally.ERP9இல் ஏதாவது ஒரு கம்பெனியை ஓபன் செய்யுங்கள்.


டிஸ்பிளே மெனுவில் Account Bookஇல்
Sales Registerஐ ஒபன் செய்யுங்கள்.


F2ஐ அழுத்தி குறிப்பிட்ட தேதியில் ஏதாவது ஒரு சேல்ஸ் இன்வாய்ஸ் வவுச்சரை செலக்ட் செய்யுங்கள்.


இப்போது
ALT+E என்ற சார்ட்கட் கீயை அழுத்துங்கள்.

OK.

இப்போது
Esc பட்டனை அழுத்துங்கள்.


FORMAT என்ற வரிக்கு சென்றால் 6 விதமான FORMAT இருக்கும்.
அதில் PDF என்ற பார்மெட்டை தேர்வு செய்துவிட்டு மற்றவற்றிற்கு
OK செய்து பாருங்கள்.


இப்போது TALLY திரையை மினிமைஸ் செய்து டெஸ்க்டாப்பிற்கு வாருங்கள்.

Tally.ERP9 என்ற ஐகானை ( ICON ) ரைட்கிளிக் செய்யுங்கள்.


கடைசியாக இருக்கும் PROPERTIES என்பதை அழுத்துங்கள்.

இப்போது PROPERTIES கட்டத்தின் கீழே
FIND TARGET என்பதை அழுத்துங்கள்.


உங்களுக்கு தேவையான பில் காபி PDF பார்மெட்டில் இருக்கும்.


அதை மின்னஞ்சலில் இணைத்து பார்ட்டிக்கு அனுப்பலாம்.


பில் காபி மட்டுமல்ல
PROFIT& LOSS,
TRIAL BALANCE,
BALANCE SHEET
என அனைத்து வித ரிப்போர்ட்களையும் PDF ஆக மாற்றி பயன்படுத்தலாம்.

Tally.ERP9இல் PDF வசதி [Part-1]




இப்போதெல்லாம் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் யாரும் பணம் எடுக்க பெரும்பாலும் வங்கிக்கு சென்று டோக்கன் வாங்கி மணிக்கணக்கில் காத்திருப்பதில்லை.

சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் பேங்கில் DEBIT CARD கொடுத்து விடுகிறார்கள்.

அதனால் நீங்கள் பணம் எடுக்க பேங்கிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
ATM சென்டருக்கு சென்று உங்கள் சேமிப்பு கணக்கில் பேலன்ஸ் பார்த்து பணம் எடுத்து கொள்ளலாம்.
ATMக்கு சென்றவுடன் நமது கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறது என்பதை பார்க்க மினி ஸ்டேட்மெண்ட் எடுப்போம்.
அதன்பிறகே நமக்கு தேவையான பணத்தை பெறுவோம்.
ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் நாம் அந்த மினி ஸ்டேட்மெண்ட் சிலிப்பை பத்திரபடுத்தி கொள்வோம்.
ஆனால் அந்த சிலிப்பில் உள்ள எழுத்துக்கள் அடுத்தமுறை பார்க்கும்போது அழிந்திருக்கும்!

சமீபத்தில் நண்பர் ஒருவர் சென்ற வருடம் மாநகராட்சிக்கு சொத்துவரி கட்டிய ரசீதை ஜெராக்ஸ் எடுக்க பைலில் தேடினார்.
வெற்று பேப்பர் தான் இருந்தது!
காரணம் வழக்கமாக கார்பன் வைத்து பில் போடும் அதிகாரி கடந்த முறை கையடக்க கருவி மூலம் பில் போட்டு தந்தார்.
அந்த பில் ATM மினி ஸ்டேட்மெண்ட் அளவிற்கு தான் இருந்தது.

அதேபோன்ற கையடக்க கருவியின் மூலம் தான் மாநகராட்சி பேருந்துகளில் பயணச்சீட்டு தருகிறார்கள்.
சமீப காலமாக பிரபல கொரியர் நிறுவனங்கள் இது போன்ற கையடக்க கருவியில் நமது கையெழுத்தை பெற்று தபால்களை தருகிறார்கள்.
ஒரு சில பைனான்ஸ் கம்பெனிகாரர்கள் தினசரி பணம் வசூல் செய்து கையடக்க கருவி மூலம் தான் பில் தருகிறார்கள்.
ஏன் இன்னும் கொஞ்சம்நாள் போனால் மாத பணத்தை வசூல் செய்ய உங்கள் வீட்டு பால்காரர் , பேப்பர்காரர் , கேபிள் டிவிகாரர் என எல்லோரும் கையடக்க கருவியோடு பில் போட வந்தால் ஆச்சர்யப்பட தேவையில்லை.
இதேபோலத் தான் வியாபாரி ஒருவர் தான் கொள்முதல் செய்த வெளிமாநில பார்ட்டிகளுக்கு அவசரமாக
"சி" பாரம் தர வேண்டி இருந்தது.
அதற்காக அந்த பார்ட்டிகளிடம் கொள்முதல் செய்த பில்களை வணிகவரி அலுவலகத்தில் கொடுக்க ஜெராக்ஸ் எடுத்தார்.
தேவைப்பட்ட பில்களில் 2 பார்ட்டிகளின் சில பில்கள் பைலில் இல்லை.
அதனால் அந்த பார்ட்டிகளுக்கு போன் செய்து தொலைந்து போன பில் காபியை உடனடியாக FAX
( தொலைநகல் ) மூலம் அனுப்ப சொல்லியிருந்தார்.

கொரியர் தபால் மூலம் அனுப்பினால் தாமதமாகும் என்பதற்காகவும் பில்காபி உடனடியாக தேவை என்பதற்காகவும் தான் FAX அனுப்ப சொல்லியிருந்தார்.
ஒரு பார்ட்டி பில்காபியை FAX அனுப்பி இருந்தார்.
மற்றொரு பார்ட்டி பில்காபியை ஸ்கேன் செய்து மெயில் அட்டாசமெண்டாக மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.
அவரிடம் FAX கருவி இருந்தது. அதனால் இது சாத்தியமானது.
இல்லாவிட்டால் அருகிலுள்ள PCO வின் FAX நம்பருக்கு பில்காபியை அனுப்ப சொல்ல வேண்டியிருக்கும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது FAX காபி , ATM மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் கையடக்ககருவிகள் தரும் பில்கள் எல்லாம் என்றைக்கு பிரிண்ட் ஆகிறதோ அன்று மட்டும் தான் உபயோகபடுத்தும் அளவிற்கு பிரிண்ட்அவுட் இருக்கும்.
ஆகவே இதுபோன்ற பிரிண்ட்அவுட்களை உடனடியாக ஜெராக்ஸ் எடுத்து கொள்வது பிற்பாடு நமக்கு எப்போதும் உதவும்.
இல்லாவிட்டால் அந்த பிரிண்ட்அவுட் அழிந்து விரைவில் வெற்றுதாளாக மாறிவிடும்.

பேக்ஸ் தாளில் எடுக்கப்படும் பிரிண்ட்டில் உள்ள எழுத்துக்கள் சீக்கிரத்தில் மறைந்துவிடுவதால் நாம் நிரந்தர ரெக்கார்டாக பயன்படுத்த முடிவதில்லை என்பதே உண்மை!

எல்லாம் சரி.
Tally.ERP9 என்ற மென்பொருளுக்கும் இந்த பேக்ஸ் பிரிண்ட்அவுட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா..?
கட்டாயம் இருக்கிறது.
ஆம் இப்போது Tally.ERP9 மூலம் எந்த ஒரு ரிபோர்ட்டையும் நீங்கள்
PDF (Portable Document Format) ஆக மாற்றி கொள்ளலாம்..


>> தொடர்ச்சி அடுத்த பதிவில்..>>