< தமிழில் டேலி Tally.ERP9 >

Mar 28, 2010

ரிபோர்ட்ஸ் வகை



அருண் என்பவர் 5 லட்சம் முதலீடு செய்து வீட்டு உபயோக பொ
ருள் கடையை துவங்குகிறார்.
1 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து மாதம் பத்தாயிரம் வாடகைக்கு கடையை பிடிக்கிறார்.
பின்பு கடைக்கு தேவையான தளவாட சாமான்களை 50,000 ரூபாய்க்கும், விற்பனைக்கு தேவையான டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை 3 லட்சம் ரூபாய்க்கும் வாங்குகிறார்.

வருட முடிவில் அருணுக்கு கீழ்கண்ட ரிபோர்ட் தேவைப்படும்.
பேங்க் பேலன்ஸ்
கையிருப்பு தொகை
லாபம்
மற்றவர்களுக்கு அருண் தர வேண்டிய தொகை.
மற்றவர்களிடம் இருந்து அருணுக்கு வர வேண்டிய தொகை.
மேற்கண்ட ரிபோர்ட்டை வருட முடிவில் மட்டுமல்ல காலாண்டுக்கு ஒருமுறையோ
அரையாண்டுக்கு ஒரு முறையோ ஏன் தேவைக்கேற்ப தினமும் கூட Tally மென்பொருள் மூலம் பெறலாம்.



அதுமட்டுமல்ல Trial balance, Trading profit & loss, Balance sheet, stock report ஆகிய ரிபோர்ட்களும் தேவைப்படும்.
ஸ்டாக்கில் எத்தனை டிவி எத்தனை பிரிட்ஜ் போன்றவையும் T.V என்றால் SONY-யில் எத்தனை SAMSUNG-ல் எத்தனை போன்ற ரிபோர்ட்டும் தேவைப்படும்.

இந்த கணக்கை நோட்புக்கில் எழுதி சரிபார்ப்பதை விட Tally மென்பொருளில் சரிபார்பதே எளிதாகும். காரணம் நேரத்தை வீணடிக்காமல் தெளிவான ரிபோர்ட்டை விரைவில் பெறலாம்.

No comments:

Post a Comment