< தமிழில் டேலி Tally.ERP9 >

Mar 1, 2016

என்ன ஆச்சு டேலிக்கு

லீப் வருட பிப்ரவரி கடைசி நாள்.

பிப்ரவரி 29.

டேலி உபயோகிப்பளர்கள் அனைவருக்கும் கண்ணைக்
கட்டி காட்டில் விட்டது போல் ஆகி விட்டது ( ஒரு சிலரைத் தவிர ).

பலரையும் அன்று டேலி குழப்பி எடுத்து விட்டது.


காரணம் டேலி EDUCATION VERSION ஆக மாறி விட்டது.


தங்களது கணினியின் தேதியை முன் தேதியாக ( BACK DATE )
  ( 28.2.2016 ) என்று
 மாற்றி பயன்படுத்தினாலும்
"எடுபடவில்லை மீண்டும் முயற்சிக்கவும்"
என்கிற ரீதியில் தான் அன்றைய நாள் சென்றது.

இறுதியில் அன்று இரவு நல்ல செய்தி கிடைத்தது.

ஆம்.

வந்த செய்தி டேலி நிறுவனத்திடம் இருந்து அல்ல.


தமிழக வணிகவரித் துறையிடம் இருந்து தான் செய்தி வந்தது.

பிப்ரவரி மாத ரிட்டனை பழைய தளத்தில் ( www.tnvat.gov.in ) தாக்கல் செய்யலாம் என்ற இன்ப அதிர்ச்சி செய்தி தான் அது.