< தமிழில் டேலி Tally.ERP9 >

Aug 20, 2011

Tally.ERP9ல் புதிய இந்திய நாணய குறியீடு ( NEW INDIAN CURRENCY SYMBOL IN Tally.ERP9 )
*=Tally.ERP 9*=ன் புதிய அம்சங்கள்
( LATEST UPDATES )
( TALLY 9 )

அமெரிக்கா நாட்டின் பணத்தை டாலர் ( DOLLAR ) என்று அழைப்பார்கள்.

இங்கிலாந்தின் பணத்தை ( CURRENCY ) பவுண்டு ( POUND ) என்றும்

ஜப்பான் கரன்சியை யென் ( YEN ) என்றும்

ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் கரன்சியை யூரோ ( EURO ) என்றும் அழைப்பார்கள்.

டாலர்
( DOLLAR ) $

பவுண்டு
( POUND ) £

யூரோ
( EURO ) €


யென்
( YEN ) ¥இவற்றின் கரன்சி குறியீடுகள்
( CURRENCY SYMBOL )
உலக அளவில் பிரசித்தமானது.

அதேபோல் தான் நம் இந்திய நாட்டின்

பணத்தை
( CURRENCY )

ரூபாய்
(RUPPEES )


என்று அழைக்கிறோம்.
உதாரணத்திற்கு 1000 ரூபாய் என்பதை எப்படி எழுதுவோம்.
ரூ. ஆயிரம் மட்டும் என்று தமிழில் எழுதுவோம்.

ஆங்கிலத்தில் எழுதும்போது Rs.1000 only என எழுதுவோம்.

Rs என்ற இந்திய நாணய குறியீட்டை
( CURRENCY SYMBOL ) இந்திய அரசு சமீபத்தில் மாற்றி அமைத்தது அனைவருக்கும் தெரிந்ததே.

இதை வடிவமைத்த பெருமை தமிழகத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரை சேரும்.புதிய நாணய குறியீட்டுடன் கூடிய
1 ரூபாய்,
2 ரூபாய்,
5 ரூபாய்,
10 ரூபாய்
நாணயங்களை ரிசர்வ் வங்கி விரைவில் புழக்கத்திற்கு விட உள்ளது.இந்த புதிய நாணய குறியீட்டை டவுண்லோடு செய்து பலரும் MS WORD ,
EXCEL -லில் பயன்படுத்த துவங்கி விட்டனர்.

அப்ப ( TALLY ) டேலி மட்டும் என்ன சும்மாவா..

நாமும் காலத்திற்கேற்ப மாறணுமில்ல.

அதனால் Tally.ERP9 ம் தனது மென்பொருளில் புதிய மாற்றம் செய்துள்ளது.

RELEASE 3 ல் இதற்குரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் Rs என்பதற்கு பதிலாக புதிய நாணய குறியீட்டுடன் அனைத்து ரிப்போர்டும் நமக்கு கிடைக்கும்.

நாம் பிரிண்ட் எடுக்கும் எல்லா ரிப்போர்ட்களிலும், சேல்ஸ் இன்வாய்ஸ்களிலும் புதிய இந்திய நாணய குறியீடு தான் இருக்கும்.


இந்த நாணய குறியீட்டிற்கான புதிய சுருக்குவிசை
( ShortCut Key )

Ctrl + 4Ctrl+ N என்ற சார்ட்கட் கீயை அழுத்தி உங்கள்

Tallyன் கால்குலேட்டரை திறந்து கொள்ளுங்கள்.இப்போது

Ctrl +4
என்பதை ஒரு சேர அழுத்துங்கள்.

புதிய இந்திய நாணய குறியீடு தெரிகிறதா...?

5 comments:

ஆர்.சண்முகம் said...

நல்ல பயனுள்ள தங்கவல்கள் நண்பரே

shanmugam088@gmail.com

ஆர்.சண்முகம் said...

தொடர்ந்து எழுதுங்கள்

K.RAJA said...

நன்றி!

kumaran said...

சேர் உங்கள் பதிவுகளை பார்த்தவுடன் எனக்கும் டாலி கற்றுக்கொள்ள ஆசையக உள்ளது but தற்போது தொழில் காரணமாக Saudi Arabia ல் வசித்து வருகிறேன் உங்களிடம் டாலி சாப்ட்வார் இருந்தால் தந்துதவமுடியுமா?முடிந்தவரை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் or Freeware download தளமுகவரி இருந்தால் தெறியப்படுத்துங்கள் என்போன்றோருக்கு உதவியாக இருக்கும்.
kumaran
k.s.a

K.RAJA said...

தங்களின் கருத்துக்களுக்கும் ஆர்வத்திற்கும் நன்றி நண்பரே!


www.tallysolutions.com சென்று DOWNLOAD என்பதை அழுத்தினால் DOWNLOAD Tally.ERP9 RELEASE 3.2 என்ற பச்சைநிற கட்டம் தெரியும்.

அதை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து Tally ஐ 3 மாதத்திற்கு பயன்படுத்தலாம்.

ஆனால் 100 வவுச்சர் என்டிரிகளுக்கு மேல் அனுமதியில்லை.

நண்பர் சொன்னது முயன்று பாருங்கள்.

டவுன்லோடிற்கு முன் மின்னஞ்சல் மூலம் USER ID , PASSWORD தருவார்கள்.

இந்​த செய்தியையும் படியுங்கள்..

Tally in Arabic!


http://www.tallysolutions.com/website/html/tallyerp9/tallyerp9-whatsnew-tallyin-arabic.php

தங்களின் கருத்துக்களுக்கும் ஆர்வத்திற்கும் நன்றி நண்பரே!


www.tallysolutions.com சென்று DOWNLOAD என்பதை அழுத்தினால் DOWNLOAD Tally.ERP9 RELEASE 3.2 என்ற பச்சைநிற கட்டம் தெரியும்.

அதை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து Tally ஐ 3 மாதத்திற்கு பயன்படுத்தலாம்.

ஆனால் 100 வவுச்சர் என்டிரிகளுக்கு மேல் அனுமதியில்லை.

நண்பர் சொன்னது முயன்று பாருங்கள்.

டவுன்லோடிற்கு முன் மின்னஞ்சல் மூலம் USER ID , PASSWORD தருவார்கள்.

இந்​த செய்தியையும் படியுங்கள்..

Tally in Arabic!


http://www.tallysolutions.com/website/html/tallyerp9/tallyerp9-whatsnew-tallyin-arabic.php

Post a Comment