< தமிழில் டேலி Tally.ERP9 >

Nov 7, 2020

டேலி வெர்சன்கள் கடந்து வந்த பாதை

  டேலி (Tally ) வெர்சன் மாற்றம்

டேலி பிரைம்  (  Tally Prime )


 டேலி (Tally )  என்பது ஒரே மென்பொருள் தான்.

ஆனால் 4.5ல் இருந்த டேலி வெர்சன் 

5.4 ஆக மாறியது.பின்பு  5.4 ல் இருந்து டேலியின் அடுத்த வெர்சன். ( VERSION )

 6.3.

அடுத்தது 7.2.இப்படி டேலி யின் வெர்சன்கள் மாறி மாறி தற்போது  டேலி பிரைம் ( Tally Prime )  என்ற புதிய வெர்சன் அறிமுகமாகிறது.

இப்படி வெர்சன்கள் மாறி வருவது எதனால்.


ஒன்றுமில்லை பாஸ்.

 வரி அமைப்பில் பெரிய  மாற்றம் ஏற்படும் போது நாம் டேலியில் பதிவிட  சில நடைமுறை மாற்றங்கள் தேவைப்படும். அப்போது புதிய வெர்சன்கள் ( Version ) வெளியாகும். அதே போல் வரி அமைப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்கள்  அடிக்கடி நிகழும்.

அதற்காக டேலி நிறுவனம்

 ரிலீஸ் ( Release ) என்பதை அவ்வப்போது  ஏற்படும்  தேவைக்கேற்ப  வெளியிடும்.

தற்போதைய டேலி ஈ.ஆர் பி 9 வெர்சனின் லேடஸ்ட் ரிலீஸ் 6.6.3


டேலி  (Tally ) நிறுவனம் அவ்வப்போது வெளியிடும்   வெர்சனும் , ரிலீசும் 

டேலி ( Tally )  மென்பொருளின்  மேம்படுத்தபட்ட பரிணாம வளர்ச்சி.


நடைமுறை யில் ஏற்படும் நடைமுறை மாற்றங்களுக்கு ஏற்ப டேலி மென்பொருளும் தன்னை புதுப்பித்து கொண்டே வருகிறது.


டேலி மென்பொருளின் மாற்றங்கள் தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.


உதாரணத்திற்கு ஹோண்டா ஆக்டிவா வண்டியை சாலையில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.இந்த பைக்கை ஆண்களும் , பெண்களும் எளிதில் பயன்படுத்துகிறார்கள். காரணம் User Friendly. . பயன்படுத்த எளிதாக உள்ளது.


ஹோண்டா நிறுவனம் ஹோண்டா ஆக்டிவா 6 ஜி 

( Honda Activa 6G )  என்ற புதிய வெர்சன் பைக்கை தற்போது வெளியிட்டு உள்ளது. 

ஆரம்பத்தில் ஹோண்டா ஆக்டிவா வாக அறிமுகமான பைக் 3G, 4G, 5G,  என வரிசையாக வெர்சன்கள் மாறி  தற்போது  ஹோண்டா ஆக்டிவா 6G ஆக சாலையில் வலம் வருகிறது.


யோசித்துப் பாருங்கள்.

வெர்சசன்கள் அடிக்கடி மாறுவது எதனால் என்று. 


 புதிய வசதிகள். புதிய வடிவமைப்பு. என்பது போன்ற கூடுதல் வசதிகளை பயன்பாட்டாளர்களுக்கு தருவதற்காக தான்.

தற்போதைய  அவசியத்திற்காக PS6 என்பதை கூடுதலாக இணைத்து வெளியாகி உள்ளது.வெறும் வெர்சனின் பெயர் மட்டும் மாறினால்  போதாது.விற்பனையில் நம்பர் ஒன்னாக இருக்க புதிய வசதி மாற்றங்களை அவ்வப்போது  தர வேண்டும்.

டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர். 

செல்போன் சார்ஜ் வசதி , பெட்ரோல் போட பின்புறம் வசதி, PS தொழில்நுட்பம்

இப்படி புதுப்புது வசதிகள் காலத்தின் தேவைக்கேற்ப  பயனாளர்களுக்கு தருவதற்காக  தான் வெர்சன்கள் மாறுகின்றன.


டேலி மென்பொருள் எளிமை புதுமை பயன்படுத்த எளிதானது என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் டேலி யின் வெர்சன்கள் மாறி வரும்  புதுமை. ஏன் என்பது இப்போது புரிந்திருக்கும்.



டேலி யின் வெர்சன்கள் கடந்து வந்த பாதை....


டேலி 4.5 ( Tally 4.5 )

டேலி 5.4 ( Tally 5.4 )

டேலி 6.3 ( Tally 6.3 )

டேலி 7.2 ( Tally 7.2 )

டேலி 8.1 ( Tally 8.1 )

டேலி 9  ( Tally 9 )

டேலி ஈ.ஆர்.பி 9 ( Tally.ERP 9 )


தற்போது

9.11.2020 அன்று 

டேலி பிரைம் ( TALLY PRIME )


ஒரே டேலி (  Tally )

வெவ்வேறு வெர்சன்கள் ( version )

அவ்வப்போது புதுப்புது  ரிலீஸ்கள்

இது தான் டேலி யின் பரிணாம வளர்ச்சி


டேலி யின் புதிய மாற்றம்

நம் வணிகத்தின் முன்னேற்றம்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் டேலி தரும் மாற்றங்களை பயன்படுத்தி  வணிகத்தை பெருக்கி வளர்ச்சியடைவோம்.


என்றும் அன்புடன்

டேலி ராஜா

Nov 5, 2020

ஐ எம் வெயிட்டிங் தீபாவளி ரிலீஸ்

 நீங்கள் ஆவலோடு காத்திருந்த தீபாவளி  ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டது.


ஆம் நண்பர்களே... 

தீபாவளிக்கு பட ரிலீஸ் திரையரங்கிலா அல்லது ஓடிடி தளத்திலா என விவாதம் நடக்கிறது.


இது ஒருபுறம் இருக்க

தீபாவளிக்கு ரிலீஸ்  ஆகப் போவது

விஜய் நடித்த மாஸ்டர் படமா

ரஜினி நடித்த அண்ணாத்த படமா

அதெல்லாம் ஒன்றுமில்லை பாஸ்.


டேலி ( TALLY ) நிறுவனத்தின் புதிய பதிப்பான டேலி பிரைம் ( TALLY PRIME ) நவம்பர் ஒன்பதாம் தேதி மதியம் வெளியாகப் போவதாக அறிவித்துள்ளார்கள்.


டேலி பிரைம் (TALLY PRIME )  வெர்சன் வெளியானதும்

தற்போது நீங்கள் பயன்படுத்தி வரும்  டேலி ஈ ஆர்பி9 ( Tally.ERP9 ) மென்பொருளை அப்படியே டேலி பிரைம் 

( TALLY PRIME )  வெர்சனுக்கு மாறி விட முடியுமா என்று கேட்பது தெரிகிறது


அதற்கு  முன் ஒரு செக் லிஸ்ட் உள்ளது. அதை கொஞ்சம் சரி பார்த்து கொள்ளுங்கள்.


முதலாவது தற்போது நீங்கள் பயன்படுத்தி வரும் டேலி மென்பொருளின் TSS லைசென்ஸ் நடைமுறை தேதியில் உள்ளதா என சரி பாருங்கள். TSS லைசென்ஸ்  நடைமுறையில் இல்லையென்றால் உடனே ரினிவல் செய்யுங்கள்.அப்போது தான் புது வெர்சனுக்கு மாற முடியும்.

அது மட்டுமல்ல நீங்கள் உபயோகப்படுத்தும் கம்பியூட்டர் விண்டோஸ் 7  அல்லது அதற்கு மேற்பட்ட விண்டோஸ் 10 வெர்சனாகவோ இருக்க வேண்டும். எல்லாம் சரியாக இருக்கிறது.

என்னுடைய கம்பியூட்டர் செயல்பாடு 32 பிட்டாக உள்ளது. இப்போது டேலி பிரைமுக்கு மாற முடியுமா என கேட்கிறீர்களா....

வாய்ப்பில்லை ராசா....


நன்றாக  நினைவில் வைத்து கொள்ளுங்கள்.உங்களது கம்பியூட்டர்

விண்டோஸ் 7 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்சனாக இருக்க வேண்டும்.

64 பிட் டில் இயங்குதளம் இருக்க வேண்டும்.


குறிப்பாக

தற்போது நீங்கள் பயன்படுத்தி வரும் டேலி மென்பொருளின் TSS நடைமுறையில் இருக்க வேண்டும்.


அவ்வளவுதான் நண்பர்களே

இந்த மூன்று விசயங்களையும் சரியாக வைத்து கொண்டால் நீங்கள்

டேலி யின் டேலி பிரைம் வெர்சனை இயக்க தயாராகி விட்டீர்கள்..



என்றும் அன்புடன்

Tally Raja

டேலி ராஜா

டேலி ( TALLY ) தீபாவளி

 டேலி ( TALLY) தீபாவளி

டேலி பிரைம் ( TALLY PRIME )

இந்த ஆண்டு டேலி மென்பொருளை பயன்படுத்தும்  வணிகர்களுக்கும் வரி பயிற்சியாளர்களுக்கும் அதிரடி 

சரவெடி தீபாவளியாக அமையப் போகிறது..


தீபாவளி பண்டிகை வந்தாலே

ஸ்வீட்ஸ், பலகாரம்,

புத்தாடைகள்

பட்டாசு வெடிகள்

இவை தானே முக்கியம்.


தீபாவளிக்கும் 

டேலி ( TALLY)  மென்பொருளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா...



இருக்குங்க...


உலகம் விரும்பும் உன்னதமான கணக்கியல் மென்பொருள் டேலி என்பது அனைவரும் அறிந்ததே..


வணிகர்கள், வரி ஆலோசகர்கள் , ஆடிட்டர்கள் என அனைவருக்கும் வியாபார  கணக்கை நிர்வகிக்கவும் , வரி தாக்கல் செய்யவும்  நிழல் போல தொடரும் பந்தம் தான் டேலி கணக்கியல் மென்பொருள்.


இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.


வரிச் சட்டடங்கள்

TNGST

VAT

GST


என காலப்போக்கில் மாறினாலும்

டேலி மென்பொருளும் காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்து கொண்டே வருகிறது.



ஜி எஸ் டி (GST ) என்ற சரக்கு சேவை வரிச் சட்டம்  2007ல் அறிமுகமானது முதல்  தினம்தினம் புதுப்புது மாற்றங்களை நாம் பார்த்து வருகிறோம்.


அக்டோபர் மாதம் கூட

 டி.சி.எஸ்(TCS),  ஈ இன்வாய்ஸ் (E INVOICE)  என 

ஜி.எஸ்.டி (GST ) யில் மாற்றம் வந்தது.


இப்படி 

ஜி.எஸ் டியில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் வரி பயிற்சியாளர்களும்

வணிகர்களும் சொல்லும் ஒரே வார்த்தை.

டேலி இருக்க பயமேன்

என்பது தான்...


ஜி.எஸ்‌.டி ( GST ) ல் மட்டுமல்ல

டேலி ( TALLY )  மென்பொருளிலும் தற்போது மாற்றம் வருகிறது.


ஆம் நண்பர்களே

டேலி (TALLY ) மென்பொருளில் ,

4.5

5.4

6.3

7.2

8.1

9

டேலி ஈ.ஆர்பி 9( Tally.ERP9 )


என பல பதிப்புகள் ( VERSION)  வந்துள்ளன.


அதில் நாம் தற்போது

டேலி ஈ.ஆர்.பி 9

  ( TALLY.ERP9 ) என்ற பதிப்பைத் தான் பயன்படுத்தி வருகிறோம்.இந்த பதிப்பு வெளிவந்து ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகிறது. 


மாறி வரும் வணிக சூழ்நிலைக்கேற்ப

வரி மாற்றத்திற்கேற்ப 

கணக்கு பதிவையும்

வரி தாக்கலையும்  எளிதாக்க

 டேலி (TALLY )  நிறுவனம் தனது மென்பொருளை மேம்படுத்தி புதிய வடிவமைப்புடன் , புதிய வண்ணத்துடன்  ஏராளமான புதிய வசதிகளை தாங்கி டேலி பிரைம் ( TALLY PRIME ) என்ற பெயரில் புதிய பதிப்பை (VERSiON)

 வெளியிட உள்ளது.


டேலி என்றாலே எளிமை  புதுமை தானே ...


 இந்த தீபாவளிக்கு  டேலி நிறுவனம்  டேலி ஈ ஆர்  பி (Tally.ERP9,) யிலிருந்து 

அடுத்த கட்டத்திற்கு உங்களை அழைத்துச்  செல்ல இருக்கும் புதிய பதிப்பு தான் (TALLY PRIME)

டேலி பிரைம். 



என்ன வரிபயிற்சியாளர்களே...

டேலி நிறுவனத்தின்

புதிய பதிப்பான

டேலி பிரைம் ( TALLY PRIME ) தரப் போகும்  புதிய 

  அனுபவத்தை  வரவேற்கத் தயாராகி விட்டீர்களா...




என்றும் அன்புடன்

டேலி (TALLY )  ராஜா

Nov 4, 2020

சும்மா கிழி .....2020

 சும்மா கிழி



20  20.

ஐ.பி.எல் மேட்சானு கேட்காதீங்க.


2020  புத்தாண்டு பிறந்தவுடன் பல ஆருடங்களை கூறினார்கள். ஆனால் நடந்தது என்ன..?


ஏறத்தாழ இந்த ஆண்டே முடியப் போகிறது.


இந்த ஆண்டின் காலண்டர் கூட வேகமாக கரைந்து போனது. 

நாட்கள் சும்மா கடந்து போனாலும் நடைமுறை வாழ்க்கை பலருக்கும் தடுமாற்றமாகவே அமைந்தது..


கொரொனா வகையைச் சேர்ந்த கோவிட் 19 வைரஸ் ஒட்டு மொத்த உலகையே புரட்டி போட்டு விட்டது.


உலக நாடுகள் விமான சேவையை நிறுத்தியதால் அனைத்து நாடுகளும் தற்போது தனித்தனி தீவாக உள்ளது.


இணையம் மட்டுமே இன்று உலகை இயக்க முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன உலகம் இன்று இணைய உலகமாக மாறி இயங்கி கொண்டிருக்கிறது.


பள்ளி,கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் இணையம் மூலம் ஆன்லைன் வகுப்பில் படிக்கிறார்கள்.

கணினி மென்பொறியாளர்கள் வீட்டிலிருந்தே  தங்கள் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

நடுத்தர வருமான குடும்பங்களின் வாழ்க்கையே தலைகீழாய் மாறிப்போனது.

கீழ்த்தட்டு வருமான குடும்பங்களின் வாழ்க்கையோ மிகவும் பாதிப்படைந்தது.


2020

நமக்கு கற்றுத் தந்த பாடம்..



லாக்டவுன்

144

ஊரடங்கு

போக்குவரத்து முடக்கம்

ஈ பாஸ்

ரேபிட் டெஸ்ட்

தனிமைப்படுத்தும்

குவாரைண்டன்

சமூக இடைவெளி

முக கவசம்

சானிடைசர்


மார்ச் 24ல்  ஊரடங்கில் துவங்கிய  வாழ்க்கை முறை இன்னமும் தொடர்கிறது.


கொரொனா வுடன்

 போராட துவங்கிய மக்கள் இன்று 

கொரொனாவுடன் வாழ பழகி கொண்டார்கள்.



திசைமாறி போன நடைமுறை வாழ்க்கை வணிகர்களை வெகுவாக பாதித்தது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நாள்

 புதுக் கணக்கு பூஜை போடாமலே  

வணிகர்களுக்கு போராட்டமாய் துவங்கியது.



இதுவரை நடந்தது கசந்தவையாகவே  இருக்கட்டும்.


இனி

2021 என்னும்  நாளைய விடியல் இனிதாய் துவங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன..



கடந்து போன காலங்கள் கசந்த காலங்களாக இருந்தாலும்


வருங்காலம் (2021)

அனைவருக்கும்

வசந்த காலமாய் அமையும் 


என்ற நம்பிக்கையுடன்

உங்கள் 

டேலி ராஜா...