< தமிழில் டேலி Tally.ERP9 >

May 17, 2011

*=Tally.ERP 9*= ல் கால்குலேட்டர் வசதி. (பகுதி 1) ( Tally )*=Tally.ERP 9*= ல் கால்குலேட்டர் வசதி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.
பரோட்டா கடையில் 50 பரோட்டா சாப்பிடும் போட்டி நடக்கும். போட்டியில் பங்கேற்பவர் பரோட்டா சாப்பிடுவதை சப்ளையர் கோடு போட்டு கணக்கிடுவார்கள்.
இதில் கடைக்காரர் கள்ள ஆட்டம் ஆட பங்கேற்பவர் அவரோட நண்பர் அப்புக்குட்டியை கூப்பிட்டு கோட்டை அழிக்க சொல்லி திரும்பவும் சாப்பிட துவங்குவார்.

முன்பெல்லாம் வீட்டிற்கு தயிர் கொண்டு வரும் பெண் எப்போதெல்லாம் தயிர் தருகிறாளோ அப்போதெல்லாம் வீட்டு வாசலில் கரியில் கோடு போட்டு செல்வார்களாம்.
மாத முடிவில் கரிகோட்டை எண்ணி சரி பார்ப்பார்கள்.
இதையே ஒரு பள்ளி செல்லும் குழந்தையை கூட்டவோ கழிக்கவோ சொன்னால் விரல் விட்டு சரிபார்க்கும்.
அதேபோல் தான் மாணவர்களை கண்ணன் அரிச்சுவடி வாய்பாடு புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்வார்கள்.

அதெல்லாம் இப்ப மாறிப் போச்சு. சிறுவர்சிறுமியரை " அபாஸ்கஸ்" வகுப்பிற்கு அனுப்பி விடுகிறார்கள்.

தற்போது பெரியவர்களே கால்குலேட்டர் இல்லாமல் எந்த கணக்கையும் போட முடியாமல் திணறுகிறார்கள்.இதற்காக எந்நேரமும் கால்குலேட்டரை நீங்கள் பாக்கெட்டில் வைத்திருக்க தேவையில்லை.
தற்போது அனைத்து செல்போனிலும் கால்குலேட்டர் வசதி இருக்கிறது. நீங்கள் கம்பியூட்டரில் ஏதாவது வேலை செய்யும்போது கால்குலேட்டர் வசதி தேவைப்பட்டால் என்ன செய்வீர்கள்..

( தொடரும்.. )