< தமிழில் டேலி Tally.ERP9 >

Dec 4, 2010

டேலி பேசிக் டிப்ஸ்..¤ பேசிக் டேலி டிப்ஸ் ¤

புதிதாக டேலி கோர்ஸ் படித்துவிட்டு வருபவர்கள் டேலியை பயன்படுத்தும்போது துவக்க காலத்தில் சில தவறுகள் செய்ய நேரிடும்.
தவறிற்கு காரணம் புரிந்து கொள்ளாதது அல்ல. தயக்கம் தான் அவர்கள் கவனத்தை திசை திருப்புகிறது.

உதாரணத்திற்கு புதிதாக டேலி கற்றவர் டேலியில் ஒரு கம்பெனியை

( CREATE ) துவக்குகிறார் என்று வைத்து கொள்வோம்.
இப்போது அந்த கம்பெனியின் முந்தைய வருட
( BALANCE SHEET ) பேலன்ஸ் சீட்டைப் பார்த்து ஒவ்வொரு பார்ட்டி லெட்ஜரையும் துவக்குவார்.
பார்ட்டி லெட்ஜெரை புதிதாக
( CREATE ) துவக்கும் போதே அந்த பார்ட்டியின் ஆரம்ப இருப்பையும்
( OPENING BALANCE ) என்ட்ரி செய்வார்.
இப்படி பேலன்ஸ் சீட்டைப் பார்த்து ஒவ்வொரு லெட்ஜராக துவக்கி கொண்டே வருவார்கள்.
குறிப்பிட்ட 2 லெட்ஜரை புதிதாக துவக்கும் போது தான் குழப்பி கொள்வார்கள்.அந்த 2 லெட்ஜெர்கள் என்ன தெரியுமா...?

1 ) Cash in hand

2 ) Opening Stock

முதலில் Cash in hand என்ற லெட்ஜரில் என்ன பிரச்சினை என்று பார்ப்போம்.
அதற்கு முன் டேலியில் எத்தனை Pre Defined Ledgers இருக்கிறது என்று தெரியுமா..?
இரண்டு..

1 ) Cash

2 ) Profit & Loss

நீங்கள் புதிதாக டேலியில் ஒரு கம்பெனி துவக்கி
( CREATE ) விட்டு எந்த என்டிரியும்
( ENTRY ) போடாமல் Accounts infoவில் உள்ள Ledgersல் Displayவை அழுத்தி பாருங்கள்.

Cash மற்றும் Profit & loss என்ற 2 Ledgerகள் இருக்கும்.
நன்றாக நினைத்து பாருங்கள்.
நீங்கள் எந்த லெட்ஜரையும் துவக்கவில்லை.
ஆனால் 2 லெட்ஜர்கள் ஏற்கனவே துவங்கி உள்ளது.
இப்படி டேலியே முன்கூட்டியே துவக்கி கொள்ளும் LEDGERஐ தான் Predefined Ledgers என்று சொல்கிறோம்.
ஏற்கனவே Predefind Ledgerகள் இருப்பதால்
Cash in hand என்ற Ledgerஐ நீங்கள் துவக்க தேவையில்லை.
Accounts infoல் Ledgers சென்று Cash ledgerஐ எடிட் ( EDIT ) என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது ஒபனிங் பேலன்சை என்டிரி செய்யுங்கள். எல்லாம் சரி..
இன்னும் சுலபமாக புரிந்து கொள்ள புதிதாக ஒரு வழி இருக்கிறது.
லெட்ஜர் துவக்கும்போது
Cash in hand என்பதற்கு பதிலாக Cash என்று லெட்ஜரை துவக்கி பாருங்கள்.
துவக்க முடியாது!
காரணம்
Duplicate entry என்று திரையில் தெரியும்.
Predefined ledgers பற்றி இப்போது புரிகிறதா..

அடுத்து
Opening Stock என்ற லெட்ஜரை துவக்குவதில் என்ன பிரச்சினை என்று பார்ப்போம்..

நீங்கள்
Opening stock என்ற லெட்ஜரை
stock in hand என்ற குரூப்பின்
( GROUP ) கீழ் துவக்கியிருப்பீர்கள்.
இப்போது
OPENING STOCK என்பதிற்கு பதிலாக STOCK என்ற பெயரில் லெட்ஜரை
STOCK IN HAND என்ற குரூப்பின் கீழ் துவக்கி அதில் பேலன்ஸ் சீட்டிலுள்ள
OPENING STOCKன் ஆரம்ப இருப்பை என்டிரி செய்யுங்கள்.
இப்போது
PROFIT & LOSSஐ ஓபன் செய்யுங்கள்.

Opening Stock மற்றும்
Closing Stock என இரண்டும்
Profit & Lossல் இருக்கும்.

இப்போது நீங்கள் கிரிக்கெட் மேட்ச்சில் வரும் ஒபனிங் பேட்ஸ்மேன் போல..
ஆகையால் தைரியமாக தயக்கமின்றி களம் இறங்குங்கள்.

Nov 5, 2010

Tally.ERP9இல் பிரிண்ட் வியூவை ஜும் செய்ய..

¤ Tally.ERP9இல் பிரிண்ட் செய்ய ¤
நாம் வழக்கமாக டேலியில் பிரிண்ட் எடுக்க என்ன செய்வோம்..
ALT+P என்ற சார்ட்கட் கீயை பயன்படுத்துவோம்.

டேலியில் DISPLAY MENU விற்கு சென்று ஏதாவது ஒரு பக்கத்தை ஒபன் செய்யுங்கள்.
இப்போது
ALT+P என்ற சார்ட் கீயை அழுத்துங்கள்.

இப்போது திரையின் நடுவில் பிரிண்ட் செய்ய வேண்டிய பக்கத்தின் மாதிரி பக்கம்
( PRINT PREVIEW ) தெரியும். சரி..

பிரிண்ட் பிரிவியூ வை முழு திரையில் பார்க்க என்ன செய்வீர்கள்..MOUSE உதவியோடு ZOOM என்ற எழுத்தை கிளிக் செய்து சிறிய திரையில் இருக்கும்
PRINT PREVIEWஐ முழு திரைக்கு கொண்டு வருவீர்கள்.

MOUSEஐ பயன்படுத்தாமலே நீங்கள் பிரிண்ட் பிரிவியூ வை பெரிதாக்கி பார்க்க ஒரு சார்ட் கட் கீ இருக்கிறது..!

நீங்கள் பிரிண்ட் செய்ய
ALT+P ஐ அழுத்தியவுடன் சிறிதாக பிரிண்ட் வியூ தெரியும்.

இப்போது
ALT+Z என்ற சார்ட்கட் கீயை பயன்படுத்துங்கள்.

இப்போது
PRINT VIEW முழு திரையில் தெரியும்.

பிரிண்ட் பிரீவியூ பார்க்காமல் பிரிண்ட் செய்ய விரும்பினால் டேலியின் வலது ஓரத்தில்
NO PREVIEW என்ற எழுத்தை கிளிக் செய்யுங்கள்.


இந்த வலைப்பதிவை உலகின் எந்த நாட்டிலிருந்து படித்து கொண்டிருந்தாலும் உங்களுக்கு எனது உளங்கனிந்த "தீபாவளி " நல்வாழ்த்துகள்.

தொலைதூர கைகுலுக்கலுடன் K.ராஜா..

Nov 1, 2010

Tally.ERP9இல் COPY & PASTE வசதி.
¤ Tally.ERP9 ¤Tally-யில் COPY & PASTE வசதி இருக்கிறதா?!
Tally உபயோகபடுத்துகிற யார்கிட்டேயாவது கேட்டு பாருங்க..
பெரும்பாலும் நிறைய பேர் இல்லை என்று தான் சொல்வார்கள்..!

ஆனால் WORD, EXCEL-ல் COPY & PASTE வசதி இருப்பது போல் Tally-யிலும் இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றீங்களா..OK.

MS WORD & EXCELலில் COPY & PASTE எப்படி பண்ணுவீங்க..?

COPY செய்வதற்கு CTRL+C என்ற ஷார்ட் கட் கீயையும்,
PASTE செய்வதற்கு CTRL+V என்ற ஷார்ட் கட் கீயையும் பயன்படுத்துவீர்கள்.

அப்ப Tallyயில் COPY & PASTE செய்ய ஷார்ட்கட் கீ என்னன்னு கேட்கிறீங்களா..?

Tallyயில் COPY செய்ய
CTRL + ALT + C
என்ற ஷார்ட் கட் கீயையும்,
PASTE செய்ய
CTRL + ALT + V
என்ற ஷார்ட் கட் கீயையும் பயன்படுத்துங்கள்.

Tallyயில் இருந்து பார்ட்டி பெயரையும்,
ஏன் எழுத்துக்களையும் எண்களையும் கூட COPY செய்து
WORD & EXCELலில் PASTE செய்யலாம்.


உதாரணத்திற்கு DISPLAY MENUவிற்கு சென்று ஏதாவது வவுச்சரை ஓபன் செய்யுங்கள்..

அந்த வவுச்சரில் கடைசியாக உள்ள NARRATION BOXஇல் உள்ள எழுத்துகளை
(TEXT ஐ)
CTRL + ALT + C
என்ற ஷார்ட் கட் கீயை பயன்படுத்தி COPY செய்யுங்கள்.

இப்போது
CTRL + ALT + V
என்ற ஷார்ட் கட் கீயை பயன்படுத்தி
MS WORDஇல் PASTE செய்யுங்கள்.
¤ டேலி டிப்ஸ் ¤பொதுவாக SHORTCUT KEYS என்பது சுருக்கு விசை என அழைக்கப்படுகிறது.
மவுசை ( MOUSE ) தொடாமலேயே KEY BOARD
(விசைப்பலகை) மூலமாகவே வேகமாக என்ட்ரி செய்ய உதவுவதே ஷார்ட் கட் கீ ஆகும்.
ஷார்ட் கட் கீயை பயன்படுத்துவதன் மூலம் என்டிரிகளை வேகமாக பதிவு செய்வதால் நிறைய நேரம் மிச்சமாகும்.[ இந்த டேலி தளத்திற்கு வருகை தந்து படித்த, ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!

இடுகை பற்றிய தங்களின் எண்ணக் கருத்துக்களை,
ஓரிரு வரியாயினும் பின்னூட்டத்தில் தெரிவித்தால்,
தளம் மற்றும் இடுகை பற்றிய சுய மதிப்பீடு அறிய உதவும். ]

Oct 29, 2010

Tally.ERP9இன் புதிய ரிலீஸ் 2.1
சென்ற வாரம் Tally.ERP9இன் புதிய ரிலீஸ்
( RELEASE ) 2.1 வெளியானது.
சரி... Tally நிறுவனம் எதற்கு அடிக்கடி புதிய RELEASEஐ வெளியிடுகிறது தெரியுமா...?

இந்தியாவெங்கும் VAT வரிவிதிப்பு முறை இருந்தாலும் மாநிலத்திற்கு மாநிலம் வரி விகிதம்
(RATE OF TAX ) மாறுபடுகிறது.
திடீரென ஒரு சில மாநிலங்களில் வரி விகிதங்களை மாற்றி விடுகிறார்கள்.
அந்த மாதிரி சமயங்களில் Tally மூலம் பில் போடுவது முதல், கணக்குகளை நிர்வகிப்பது வரை சிரமமாகி விடும்.
அதே நேரம் மாதாந்திர VAT ரிட்டனை E filing செய்வது மேலும் சிரமமாகி விடும்.
இதுபோன்ற நேரங்களில் Tally மட்டுமல்ல மற்ற அக்கவுண்ட்ஸ் சாப்ட்வேரை பயன்படுத்துவோரும் தங்கள் மென்பொருளை மேம்படுத்த வேண்டியது
( UPDATE ) கட்டாயமாகி விடும்.

Tally நிறுவனம் தேவைப்படும் போதெல்லாம் தனது புதிய RELEASE களை நன்கு சரிபார்த்தே வெளியிடுகிறது.
ஆனால் அந்த மென்பொருளை பயன்படுத்தும் போது ஒரு சில OPTION கள் சரிவர செயல்படாது.
சில ஆப்ஷன்களை பயன்படுத்தும்போது நடைமுறையில் சில சிரமம் தரும்.
அந்த குறைகளையும் சரி செய்து மீண்டும் புது RELEASEகள் வெளியிடும்.

அதே போல் மேலும் புதிய ஆப்ஷன்களை சேர்க்கும் போதும் Tally புது ரிலீஸ்களை வெளியிடும்.

நீங்கள் புதிதாக Tally.ERP9 வாங்கி பயன்படுத்துகிறீர்களா..? அல்லது ஏற்கனவே பயன்படுத்திய Tally 9 மென்பொருளை மேம்படுத்தி
( UPDATE செய்து ) Tally.ERP9ஆக உபயோக படுத்துகிறீர்களா..?

எப்படி இருந்தாலும் உங்களுக்கு ஒரு வருடத்திற்கு Tally நிறுவனம் வெளியிடும் அனைத்து RELEASEகளையும் நீங்கள் இலவசமாக டவுன்லோடு செய்து TALLYஐ அப்டேட் செய்து கொள்ளலாம் என்பது தெரிந்திருக்கும்.

ஒரு வருடத்திற்கு இலவசம் என்பதால் எல்லா ரீலீஸ்களேயும் உடனே அப்டேட் செய்ய நினைக்காதீர்கள்.
புது ரிலீஸ்கள் வெளியானதும்

www.tallysolutions.com

என்ற தளத்திற்கு சென்று புதிய ரிலீஸில் என்னென்ன மாற்றங்கள், சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை நிதானமாக படித்து பாருங்கள்.

அந்த மாற்றங்கள் தேவையென்றால் மட்டுமே அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
இல்லையென்றால் பழைய நிலையிலேயே உபயோகபடுத்துங்கள்.


¤ டேலி டிப்ஸ் ¤
எல்லாம் சரி..
தற்போது நீங்கள் பயன்படுத்தி வரும் Tallyயின் VERSION என்ன என்ற விபரம் தெரிந்து கொள்ள வேண்டுமா..?

உங்கள் Tally 9 அல்லது Tally.ERP9 ஐ ஓபன் செய்யுங்கள்..


ALT+CTRL+B என்ற ஷார்ட் கட் கீயை உபயோகித்து பாருங்கள்..


இப்போது உங்கள் Tally திரையில் நீங்கள் பயன்படுத்தும் VERSION மற்றும் RELEASE விபரங்கள் தெளிவாக தெரியும்.

Oct 24, 2010

Tally.ERP9ல் NEGATIVE CASH BALANCEஐ கண்டுபிடித்து சரி செய்வது எப்படி?
Tally.ERP9ல் கேஷ் பேலன்ஸ் குறைவை கண்டுபிடித்து சரி செய்ய புது வசதி தரப்பட்டுள்ளது.

இன்றைய இறுதி இருப்பு
( CLOSING BALANCE ) தான் நாளைய ஆரம்ப இருப்பு
( OPENING BALANCE ).
இது CASH BOOKக்கு மட்டுமல்ல
STOCK BOOK , BANK BOOK, PARTY LEDGERக்கும் தான்.

உதாரணத்திற்கு சங்கர் என்பவருடைய பேங்க் இருப்பை பார்ப்போம்.

சங்கரோட 5ம் தேதி பேங்க் இறுதி இருப்பு 54,000 ரூபாய்,
6ம் தேதி பேங்கில் 16,000 ரூபாய் செலுத்துகிறார்.
6ம் தேதி இருப்பு 70,000 ரூபாய்.
மீண்டும் 10ம் தேதி பேங்கிலிருந்து 50,000 ரூபாய் எடுக்கிறார்.
இப்போது 10ம் தேதி இருப்பு 20,000 ரூபாய்.
இது போலத்தான் பேங்கில் ஒவ்வொரு வரவு செலவிற்கும் ஒரு CLOSING BALANCE இருக்கும்.
இதுபோல் ஒவ்வொரு என்டிரிக்கும் பேலன்ஸ் பார்ப்பது ACCUMULATIVE BALANCE.

சாதாரணமாக நாம் MANUAL ACCOUNTஐ நோட்புக்கில் எழுதும் போது என்ன செய்வோம்..
ஒரு நாளுடைய வரவு செலவை எழுதி ஆரம்ப இருப்போடு கூட்டி கிடைப்பது தான் அன்றைய பேலன்ஸ்.
ஆக மொத்தம் நாம் எழுதி பார்த்து கணக்கிடுவது ஒரு நாளுடைய பேலன்ஸ்.
ஓவ்வொரு என்ட்டிரிக்கும் பேலன்ஸ் பார்ப்பதில்லை.


Tally யில் எப்படி கேஷ் பேலன்ஸ் பார்ப்பது..?

முதலில் Tallyயில் ஏதாவது ஒரு கம்பெனி அக்கவுன்டை ஒபன் செய்யுங்கள்.

DISPLAY MENU OK செய்து ACCOUNT BOOKஐ ஒபன் செய்யுங்கள்.

இப்போது BANK BOOK மற்றும் CASH BOOK இருக்கும்.

இப்போது CASH BOOKஐ ஒபன் செய்யுங்கள்.

அடுத்து F2ஐ அழுத்தி உங்களுக்கு தேவையான தேதியை
( PERIOD ) மாற்றம் செய்யுங்கள்.

இப்போது உங்களுக்கு தேவையான கேஷ் புக் திரையில் தோன்றும்.

பிறகு F6ஐ அழுத்துங்கள். உங்கள் கேஷ் புக்கின் தினசரி பேலன்ஸ் (DAILY BREAKUP ) திரையில் தெரியும்.

இப்போது PAGE DOWN பட்டனை தொடர்ந்து அழுத்துங்கள்.
எந்த தேதியின் இறுதியில் Cr என்று தெரிகிறது என்று பாருங்கள்.
அந்த குறிப்பிட்ட தேதியில் NEGATIVE BALANCE ல் (கையிருப்பு குறைவு ) இருக்கிறது என்று அர்த்தம்.
அந்த தேதியில் கேஷ் பேலன்ஸ் சரி செய்வது கட்டாயம்.

சரி ஒவ்வொரு தேதியாக NEGATIVE BALANCEஐ
PAGE DOWN செய்து தேடி பார்ப்பது கடினமாக இருக்கிறதா..?

இப்போது F12 ஐ அழுத்துங்கள்.

SHOW HIGH LOW LEVELS என்ற ஆப்ஷனுக்கு OK செய்யுங்கள்.

எந்த தேதியில் அதிக கையிருப்பு இருக்கிறது எந்த தேதியில் குறைவான கையிருப்பு என எளிதில் திரையில் தெரியும்.

இதெல்லாம் பழைய மெதட் புதுசா ஏதாவது இருக்கா என்று கேட்கிறீர்களா..?

Tally.ERP9 ல் கேஷ் பேலன்ஸ் சரி பார்க்க புது வசதிகள் செய்து தந்திருக்கிறார்கள்.. எப்படி தெரியுமா..?

Tally.ERP9ல் ஏதாவது ஒரு கம்பெனியை ஓப்பன் செய்யுங்கள்.

DISPLAY சென்று கேஷ் புக்கை ஓப்பன் செய்யுங்கள்.

பிறகு F12 ஐ அழுத்துங்கள்.

இப்போது கடைசியாக RUNNING BALANCE என்ற ஆப்ஷனுக்கு
YES என்று OK செய்யுங்கள்.

இப்போ கேஷ் புக்கை பார்த்தீங்கன்னா ஒவ்வொரு என்டிரிக்கும் பேங்க் பேலன்ஸ் போல ஒரு பேலன்ஸ் இருக்கும்.

நீங்கள் இன்னும் எளிதாக நெகவடிங் பேலன்ஸை
PAGE DOWN செய்து தெரிந்து சரி செய்யலாம்.

அட! இவ்வளவு தானா அப்படினு கேட்கிறீங்களா..?

Tally.ERP 9ன் RELEASE 2வில் இன்னும் ஒரு சிறப்பு ஆப்ஷன் தந்திருக்கிறார்கள்.

அதாவது RUNNING BALANCEல் ஏதாவது நெகடிவ் பேலன்ஸ் இருந்தால் அந்த என்டிரி
(RED COLOR) சிகப்பு நிறத்தில் தெரியும்படி வசதி தந்திருக்கிறார்கள்.

இதனால் உங்கள் நேரம் நிறைய மிச்சமாகும்.

DISPLAY MENU சென்று நாம் பார்ட்டி லெட்ஜர் பேங்க் புக் கேஷ் புக் என எல்லாவற்றிற்கும் F12 அழுத்தி RUNNING BALANCE பார்க்கலாம்.

Tally.ERP9 ல் MARK செய்வதன் கூடுதல் பலன்கள்..
Tally.ERP9 CTRL+SPACEBAR மற்றும் SPACEBAR என்ற இரு SHORTCUT KEY மூலம் மேலும் சில நன்மைகள் பெறலாம்.

பெரும்பாலும் நாம் அதிக அளவு TRANSTACTIONS உள்ள கணக்குகளுக்கு மட்டுமே BILLWISE DETAILS OPTIONSனுக்கு YES கொடுத்திருப்போம். ஆனால் அப்படி நாம் BILLWISE DETAILS கொடுக்காத கம்பெனியில் பார்ட்டி பேலன்ஸ் சரி பார்ப்பது கஷ்டமாக இருக்கும். அதற்கு ஒரு பார்ட்டி அக்கவுன்ட்சை திறந்து பாருங்கள்.
எந்த பில்லுக்கு எந்த தேதியில் வந்த AMOUNT டேலி ஆகிறதென்று பார்த்தால் குழப்பாக இருக்கும். அதனால் அந்த பார்ட்டி லெட்ஜர் காப்பியை பிரிண்ட் எடுத்து டேலி செய்து பார்ப்பீர்கள்.

டேலி ERP9 ல் ஏதாவது ஒரு பார்ட்டி லெட்ஜரை திறந்தவுடன் எந்த பில்லுக்கு எந்த AMOUNT டேலி ஆகிறது என SPACEBARஐ அழுத்தி மார்க் செய்து சரிபார்த்து கொள்ளலாம். மார்க் செய்யப்படாமல் விடுபட்ட என்டரிகளை எளிதில் கண்டுபிடித்து பார்ட்டி லெட்ஜரை சரி செய்யலாம்.
அதேபோல் நாம் தினந்தோறும் பேங்க் என்டிரியை தொடர்ந்து TALLYயில் பதிந்து கொண்டே வருவோம். ஆனால் நமக்கு பேங்க் ஸ்டேட்மெண்ட் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தான் கிடைக்கும்.
நாம் பேங்க் ஸ்டேட்மெண்டில் உள்ள ஒவ்வொரு என்டிரியையும் பார்த்து TALLY.ERP 9 யிலுள்ள நமது பேங்க் லெட்ஜரிலுள்ள என்டிரியை SPACEBARஐ அழுத்தி மார்க் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.சாதாரணமாக மளிகைக்கடைக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களின் லிஸ்டை கொடுத்து விட்டு வருவோம்.
கடைக்காரரும் பொருட்களை எடுத்து வைத்து விட்டு அந்த பொருட்களின் விலையையும் எழுதி வைத்திருப்பார்.
நீங்கள் பில்லுக்குரிய தொகையை கொடுத்தவுடன் கடைக்காரர் எடுத்து வைத்திருக்கும் பொருளை உடனே தர மாட்டார். மாறாக லிஸ்டில் உள்ள ஒவ்வொரு பொருளையும் டிக் அடித்த பிறகு தான் எடுத்து வைப்பார். இது ஒரு CHECK & VERIFY தான்.

இதைப்போல் தான் Tally.ERP9 லிலும் SPACE BARஐ அழுத்தி MARK செய்து கணக்குகளை சரி பார்த்து கொள்ளலாம்.

Oct 13, 2010

டேலி: MARK செய்து DELETE செய்ய..Tally.ERP9


* புதுசு கண்ணா புதுசு *


இப்பெல்லாம் யாரை பார்த்தாலும் கேமிரா போனைத் தான் வச்சிருங்காங்க.
யாரையாவது பார்த்தா முதலில் லேட்டஸ்ட் பாட்டு இருந்தா புளுடூத்துல அனுப்புங்க தான் கேட்பாங்க. நீங்க உங்களோட செல்போனில் பாடல்களை உங்க விருப்பபடி வெவ்வேறு போல்டரில் சேமிச்சி வச்சிருப்பீங்க. அப்ப உங்க பிரண்ட் எல்லா பாடலையும் அனுப்ப வேண்டாம். குறிப்பிட்ட சில பாடல்களை மார்க் ( MARK ) செய்து அனுப்ப சொல்வார். இப்ப நீங்க ஆப்ஷனுக்கு
( OPTION ) போய் மார்க் செய்து புளூடூத் மூலம் அனுப்புவீங்க. MOVE MARKED என்ற ஆப்ஷன் மூலம் ஒரு போல்டரிலுள்ள டேட்டாவை மற்றொரு போல்டருக்கு மாற்றம் செய்ய முடியும். அதே போல் தான் உங்கள் செல்போனிலோ அல்லது உங்கள் E-mail லிலோ இன்பாக்ஸில் உள்ள தேவையில்லாத மெஜேஜை MARK செய்து தானே DELETE செய்வீர்கள். இந்த MARK என்ற முறையில் தான் Tally.ERP9 என்ற VERSION-ல் SELECT , SELECT ALL என்ற இரு ஆப்ஷன் தந்திருக்கிறார்கள். இதற்கு SHORTCUT KEY என்ன தெரியுமா..?


Tally.ERP9ல் DISPLAY MENU கிளிக் செய்த பிறகு எந்த பக்கத்திற்கு சென்றாலும் SCREEN ன் வலது ஓரத்தில்
S=SELECT
S-_SELECT ALL
என்ற ஆப்ஷன் இருக்கும்.
DISPLAY MENU வில் குறிப்பிட்ட ஒரு VOUCHER ENTRY ஐ செலக்ட் செய்ய உங்கள்
KEY BOARD-ல் SPACE BARஐ அழுத்தவும்.
SELECT ALL செய்ய
SHORTCUT KEY
CTRL+SPACE BAR.

சில சமயம் தொடர்ச்சியாக பல வவுச்சர் என்டிரிகளை DELETE செய்ய வேண்டியிருக்கும்.
அப்போது திரையின் கீழே வலது ஓரத்தில் தெரியும்
SELECT ALL என்ற OPTIONSஐ கிளிக் செய்தால் அனைத்து வவுச்சர்களும் கரும்பச்சை நிறத்தில் மார்க் செய்யபட்டு இருக்கும்.

இப்போது
ALT+ D என்ற ஆப்ஷனை OK செய்து DELETE செய்யலாம்.
குறிப்பிட்ட ஒரு சில வவுச்சர்களை மட்டும் MARK செய்ய KEY BOARDல் உள்ள SPACEBARஐ அழுத்தி தேர்வு செய்து DELETE செய்யலாம்.

Oct 10, 2010

தள்ளுபடி , SAMPLES எப்படி கணக்கிடுவது..


Tally ERP9


உதாரணத்திற்கு ஒரு வியாபாரி 50 SAMSUNG TV வாங்கிறார் என்று வைத்து கொள்வோம்.அவருக்கு ஆபரில் 2 TV கிடைத்தால் மொத்தம் 52 TV சப்ளை ஆகியிருக்கும்.ஆனால் அவருக்கு வந்த இன்வாஸ்இல் 52 TV க்கு பதிலாக 50 TV தான் விலை மதிப்பிட்டு பில் போட்டிருப்பார்கள்.

TALLY -இல் எப்படி இந்த பில்லை போட்டிருப்பார்கள் தெரியுமா...? TALLY.-யில் உங்கள் கம்பெனியை திறந்தவுடன் F11 ஐ அழுத்துங்கள். இப்போது USE DIFFERENT ACTUALS & BILLED QUANTITY என்பதற்கு YES என்று OK செய்யவும். இப்போது ACTUAL QUANTITY 52 ஆகவும் BILLED QUANTITY 5O ஆகவும் என்ட்ரி அடித்து பில் அனுப்பி இருப்பார்கள். அதே போல் தான் சில சமயம் பர்சேஸ் ஆர்டர் பெற இலவசமாக உங்களது விற்பனை பொருளை FREE SAMPLESஆக எந்த பணமும் வாங்காமல் பில் போட்டு அனுப்ப வேண்டியிருக்கும். அப்போது F11 பட்டனை அழுத்தி ZERO VALUES என்பதற்கு YES என்று OK செய்யவும். இந்த முறையில் பில் போட்டால் ஸ்டாக் இன்வன்டரி சரியாக இருக்கும்.

FREE ITEM கொடுப்பதை இன்வன்டரி புக்கில் என்ட்ரி செய்ய..
இப்ப எல்லாம் ஆபர் , தள்ளுபடி என ஏதாவது ஒன்றை அறிவித்தால் தான் மக்களிடம் அந்த பொருள் வேகமாக சென்றடைகிறது. இது மக்களுக்கு மட்டுமல்ல வியாபாரிகளுக்கும் தான். பொதுவா பார்த்தீங்கன்னா வியாபாரிகளுக்கு ஒரு ஸ்கீம் கிடைக்கும். அதாவது 12 ( 1 டஜன் ) சோப் வாங்கி விற்றால் ஒரு சோப் இலவசம். அரை கிலோ பருப்பு பாக்கெட் 100 வாங்கினா 5 பாக்கெட் இலவசம் . இது போன்ற சலுகைகளை தந்து தங்களது வியாபாரத்தை பெருக்கி கொள்ள நினைப்பார்கள் . காரணம் எந்த ஒரு பொருளையும் மக்களிடையே சென்று சேர்க்க விளம்பரபடுத்துவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவு அப்பொருளை ஆபர் மற்றும் ஸ்கீம் போன்ற சலுகைகளை வியாபாரிகளுக்கு தந்தால் தான் வியாபாரத்தை பெருக்கி கொள்ளமுடியும்.இது ஒரு வியாபார டிரிக்ஸ்.

Sep 15, 2010

SMS in Tally.ERP9 இருப்பிடம் தேடி தகவல் தரும் எந்திரன் ரிலீஸ் BETA 2.0

Tally ERP9

Tally.ERP9 டேலியில் SMS வசதி ( SMS IN TALLY.ERP9 )

முன்பெல்லாம் SSLC மற்றும் பிளஸ் 2 ரிசல்ட்களை பேப்பரில் தான் பார்க்க முடியும்.
காலை பத்து மணிக்கு வரும் ஸ்பெஷல் எடிசன் ( SPECIAL EDITION ) பேப்பரில் தேர்ச்சியடைந்த எண்கள் மட்டுமே பிரசுரமாயிருக்கும்.
இப்ப காலம் மாறி போச்சு.. இன்டர்நெட்டில் ரிசல்ட் பார்த்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம். ரிசல்ட் வெளியாகிற அன்றைக்கு காலையில் 10 மணிக்கு குறிப்பிட்ட 5 இலக்க எண்ணிற்கு உங்கள் ரிஜிஸ்டர் நம்பரை SMS அனுப்பினால் அடுத்த சில நொடிகளில் ரிசல்ட் உங்கள் செல் போனுக்கு வந்து விடும். அந்த SMS-ல் உங்கள் பெயர் , சப்ஜெட் வாரியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்ட தகவல் இருக்கும்.

SMS என்றாலே வேகம் விரைவு தெளிவு தகவல் தானே.
விரல் நுனியில் விபரம் நீங்கள் எங்கே இருந்தாலும் தகவல் உங்களை நிழல் போல தேடி வரும்.

SMS மூலம் எப்படி தகவல் நம்மை வந்தடைகிறது தெரியுமா...
சமீபத்தில் தமிழக தேர்தல் ஆணையம் வாக்காளர் பணி சரிபார்க்கும் பணியை நடத்தியது. இந்த கள ஆய்வு மூலம் புதிய வாக்காளர்களை சேர்க்கவும், தகுதியில்லா வாக்காளர்கள் பெயர் நீக்கவும் , வாக்காளர்களின் தகவல் மாறியிருந்தால் திருத்தம் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தது. சரி பார்க்க பட்ட பட்டியல் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டது. இன்டர்நெட்டில் பார்க்க நேரமில்லையா.. நீங்கள் இருந்த இடத்திலேயே தகவல் பெற ஏற்பாடு செய்திருந்தது. நாம் குறிப்பிட்ட எண்ணிற்கு
( 51913 ) VOTE என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் வோட்டர் ஜடி ( VOTER ID ) எண்ணை பதிவு செய்து என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் உடனடி AUTO REPLY யாக ஒரு SMS வரும்.
அதில் உங்கள் வோட்டர் ஐடி எண் நீங்கள் வோட்டு போட வேண்டிய பூத் உங்கள் முகவரி வயது என்று எல்லாமே இருக்கும்.
இதே முறையில் தகவல் பெறும் முறையை தான் ரேஷன் கார்டுகளை பற்றிய தகவல்களை வீடு வீடாக வெரிபிகேசன் செய்து முடிந்த பின் சரி பார்க்கப்பட்ட புதிய பட்டியல் பற்றி தகவல் பெற இணையத்திலும் SMS மூலமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. SMS மூலம் தகவல் எப்படி உடனடியாக பெற முடிகிறது.
நீங்கள் தொடர்பு கொள்ளும் 5 இலக்க SMS எண் குறிப்பிட்ட தகவல் ( DATA BASE ) அடங்கிய கம்பியூட்டருடன் தொடர்பில் இருக்கும். அதே போல் அந்த கம்பியூட்டரும் இன்டர்நெட் இணைப்பில் தொடர்பு இருக்கும். அதனால் தான் நீங்கள் SMS அனுப்பிய மறுகணமே நீங்கள் கேட்ட தகவல் AUTO REPLAY ஆக வந்து விடுகிறது.

டேலி Tally.ERP9 BETA 2.0 வெளீயீட்டிலும் ( RELEASE ) இந்த SMS முறை தான் பின்பற்ற படுகிறது. இதற்கு உங்கள் டேலி Tally.ERP9 அடங்கிய கம்பியூட்டர் இன்டர்நெட் இணைப்பிலும் குறிப்பிட்ட SMS எண் இணைப்பிலும் தொடர்பில் இருக்க வேண்டும். இப்போது குறிப்பிட்ட அந்த 5 இலக்க எண்ணுக்கு நீங்கள் SMS செய்து பேங்க் பேலன்ஸ் முதல் பார்ட்டி பேலன்ஸ் வரை இருந்த இடத்திலிருந்தே பெறலாம். நிழல் போல் தொடரும் தகவல் சேவை SMS வழி உங்கள் இருப்பிடம் தேடி வருகிறது. Tally என்றாலே எளிமை ( SIMPLICITY ) மட்டுமல்ல புதுமையும் கூட என்பதை இந்த SMS வசதி மூலம் மீண்டும் Tally.ERP9 நிருபித்திருக்கிறது. இந்த விரல் நுனியில் தகவல் பெறும் உத்தியால் நேரம் மிச்சமாகிறது. வீண் அலைச்சல் இல்லை. போக்குவரத்து செலவும் மிச்சமாகும்.Tally ERP9

Sep 11, 2010

கன்பர்மேசன் லெட்டர் Tally ERP9

Tally ERP9

¤ கன்பர்மேசன் லட்டர் ¤ ஒரு ஆண்டிற்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்றுவரவு ( SALES ) கொண்ட வியாபாரிகள் தங்கள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30ம் தேதி. ( 2010-2011 ) ஆண்டிற்கு 60 லட்சம் என லிமிட் கூடுதலாக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டின் கணக்கை ஆடிட்டரிடம் கொடுத்திருப்பீர்கள். உங்களது பேலன்ஸ்சீட்டில் அதிக பாக்கி தொகை கொண்ட (SUNDRY DEBTOR) பார்டியிடம் இருந்து CLOSING BALANCE ஜ உறுதி செய்ய CONFIRMATION LETTER வாங்கி தர சொல்லியிருப்பார். இதற்காக ஒரு ஆண்டிற்கான தகவலை லட்டராக MS WORD , EXCELலிலோ டைப் செய்ய தேவையில்லை. உங்கள் TALLY யில் குறிப்பிட்ட அந்த பார்ட்டியின் லெட்ஜர் ஓபன் செய்யுங்கள். இப்போது ALT+P என்ற SHORTCUT KEYஐ பயன்படுத்தி பிரிண்டிங் மெனுவுக்கு செல்லுங்கள்.இப்போது (ESC) பட்டனை அழுத்துங்கள். NORMAL LEDGER அல்லது CONFIRMATION OF A/C என இரண்டு OPTION வரும். அதில் CONFIRMATION OF A/C என்பதை செலக்ட் செய்து பிரிண்டிங் OK செய்யவும். TALLY பிரிண்ட் அவுட்டில் FROM , TO அட்ரஸீடன் CONFIRMATION LETTER இருக்கும்.
அதில் எங்கள் கணக்கில் உங்கள் பாக்கி தொகை இவ்வளவு. நீங்கள் சரக்கு அனுப்பிய தேதி , பில் நம்பர் , பில் தொகை ஆகியவையும் பார்ட்டியிடம் நீங்கள் பெற்ற தொகை ,தேதியும் தெளிவாக இருக்கும். பார்ட்டிக்கு நேரடியாக CONFIRMATION LETTER அனுப்பச் சொல்லி நீங்கள் விண்ணப்பிபது போல் இருக்கும்.


Tally ERP9

Sep 3, 2010

30 நாட்களில் டேலி 9 Tally ERP9

Tally ERP9"30 நாளில் டேலி 9"
இப்படி டேலி பற்றி தமிழில் ஏதாவது புத்தகம் கிடைக்குமா என்று தேடுபவர்கள் ஏராளம்.
கண்ணதாசன் பதிப்பகமும் தமிழ் கம்பியூட்டர் நிறுவனமும் தான் தமிழில் டேலி பற்றிய புத்தகம் வெளியிட்டுள்ளனர்.

சரி விஷயத்திற்கு வருவோம். புத்தகத்தை படித்து வீட்டிலிருந்தே டேலியில் தெளிவாக முடியுமா..?

ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
படிப்பது வேறு. படித்ததை நம் அன்றாட வாழ்வோடு பயன்படுத்தி முன்னேறுவது வேறு.


Tally ERP9நகைச்சுவை ஒன்று படித்தேன்..
ஒருவர் சொன்னாராம் ஆங்கிலத்தில் எந்த வார்த்தைக்கும் என்னால் அர்த்தம் சொல்லமுடியும்.அதற்கு அவருடைய நண்பர் நீ ஆங்கிலத்தில் எவ்வளவு மதிப்பெண் எடுப்பேன்னு கூட படிச்ச எனக்கு தெரியாதா என்றாராம்!
ஹலோ நாங்கள் எல்லாம் தெளிவா இருக்கிறோம். வீட்டில 2 டிக்கசனரி வாங்கி இருக்கிறேன்.
ஒன்னு LIFCO
இன்னொன்னு OXFORD.

இப்ப கேளு எந்த வார்த்தைக்கு அர்த்தம் வேணும்ன்னு.

கடினமான ஆங்கில வார்த்தைக்கு OXFORD மத்தெதுக்கெல்லாம் LIFCO எப்புடி
டிக்சனெரி போல தான் டேலி புக்கும் உங்களுக்கு எப்போதாவது சந்தேகம் வந்தால் புக்கை படித்து தெளிவுபடுத்தி கொள்ளலாம்.
சுருக்கமா சொன்னா ரிபரென்ஸ் புத்தகமா தான் பயன்படுத்த முடியும்.


Tally ERP9

Sep 1, 2010

டேலி எங்கே படிக்கலாம் ?!டேலி எங்கே படிக்கலாம்..?!
சில நாட்களுக்கு முன்பு நண்பருடைய அலுவலகத்திற்கு போயிருந்தேன்.

அது ஒரு டாக்ஸ் கன்சல்டன்ட் அலுவலகம்.

அந்த அலுவலகத்திற்கு ஒரு பெண் டேலி ஆபரேட்டர் தேவை என நாளிதழில் விளம்பரம் செய்த அனுபவத்தை கூறினார்.

அந்த ஞாயிற்றுகிழமை விளம்பரம் தேவை பகுதியில் பார்த்து ஏராளமான பெண்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.

நண்பர் விளம்பரத்தில் அந்த பகுதியில் வசிக்கும் கணக்கு எழுத தெரிந்த டேலி மென்பொருளை இயக்க தெரிந்த பெண் தேவை என தெளிவாக விளம்பரம் கொடுத்திருந்தார்.

நேர்முக தேர்விற்கு வந்த பெண்கள் அனைவரும் குறைந்தபட்சம் 7000 ரூபாய் சம்பளத்தை கேட்டிருக்கிறார்கள்.

பெரும்பாலும் அனைவரும் பல்வேறு கடைகளில் விற்பனை பிரிவில் வேலை செய்த அனுபவம் பெற்றிருந்தனர்.

ஆனால் டேலி கோர்சை
CSC-யில் படித்தேன்.

APPOLO-வில் படித்தேன்.

மக்கள் கல்வி இயக்கத்தில் படித்தேன் என்று சொன்னார்களாம்!

சரி , அப்போ டேலி உங்களுக்கு அத்துபடி தானே என்று கேட்ட போது தான் வில்லங்கமே ஆரம்பமானது!
நேர்முக தேர்வுக்கு வந்தவர்களெல்லாம் எங்களுக்கு டேலி தெரியும்.ஆனால் பில் புக் பர்சேஸ் பைல் வைத்து எப்படி என்ட்ரி போடுவதென்று ஒரு நாள் சொல்லிக் கொடுங்கள்.அதை வைத்து நாங்கள் பிக்அப் செய்து கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
காரணம் கேட்ட போது நீங்க டேலி 9 சாப்ட்வேர் வச்சிருக்கீங்க .நாங்க படிச்சது டேலி 6.3 என்று ஒருவரும் நான் டேலி 7.2 படிச்சேன்னும் சொல்லியிருக்காங்க.
வேலை தேடி நேர்முக தேர்விற்கு வந்தவர்கள் என்ட்ரி போட சொல்லி கொடுங்கள் என்பதை கேட்டதும் நண்பர் அரண்டு விட்டார்!

Aug 31, 2010

Tax

Aug 26, 2010

Tally.ERP9
Feedback:

Apr 4, 2010

மெடிகல் ஷாப் பில்லிங்நீங்கள் எந்த மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கினாலும் கம்பியூட்டர் பில் தானே தருகிறார்கள். தற்போது பெரும்பான்மையான மருந்து கடைகளில் குறிப்பிட்ட சில சாப்ட்வேர்களை உபயோகிக்கிறார்கள்.
இந்த சாப்ட்வேர்களைத் தான் சில்லறை மருந்து வியாபாரிகள் RETAILER நம்பியுள்ளனர்.

முக்கிய காரணம் நீங்கள் டாக்டர் எழுதி தரும் மருந்து சீட்டை மருந்து கடையில் கொடுத்தால் கடைக்காரர் மருந்து இருக்கும் ரேக்கை பார்க்க மாட்டார். முதலில் கம்பியூட்டரில் என்டர் செய்து சீட்டிலுள்ள அந்த மருந்து இருக்கிறதா என்றும் என்ன விலை என்றும் சொல்லி விடுவார்.இது எப்படி முடிகிறது..? ஆர்டர் செய்த மருந்தோ மாத்திரையோ கடைக்கு வந்தவுடன் கம்பியூட்டரில் அந்த மருந்து பற்றிய தகவல்களை ஏற்றிவிடுவார்கள்.

ஒவ்வொரு மருந்தின் பெயர் பேட்ச் நம்பர் எக்ஸ்பியரி தேதி அந்த மருந்தை சப்ளை செய்த வியாபாரி பெயர் அவருடைய விற்பனைவரி டின் நம்பர் வாட் வரி பில் நம்பர் மருந்தின் அடக்க விலை விற்பனை செய்யும் விலை ஆகிய மொத்த விபரங்களையும் கம்பியூட்டரில் என்டிரி செய்து வைத்திருப்பார்.
அதனால் கடைக்காரர் தேடும் எந்த தகவலும் எளிதில் கிடைக்கும்.
மருந்து பொருட்களை கையாள்வதற்கு ஏதுவாக அமையும்.ரெமிடி போன்ற சாப்ட்வேர்கள் ஏராளமாய் உள்ளன.

டேலி 9 ERP மூலம் மெடிகல் கடைக்கு மட்டுமல்ல எல்லாவித வியாபார கணக்குகளையும் நிர்வகிக்கலாம்.

Mar 28, 2010

ரிபோர்ட்ஸ் வகைஅருண் என்பவர் 5 லட்சம் முதலீடு செய்து வீட்டு உபயோக பொ
ருள் கடையை துவங்குகிறார்.
1 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து மாதம் பத்தாயிரம் வாடகைக்கு கடையை பிடிக்கிறார்.
பின்பு கடைக்கு தேவையான தளவாட சாமான்களை 50,000 ரூபாய்க்கும், விற்பனைக்கு தேவையான டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை 3 லட்சம் ரூபாய்க்கும் வாங்குகிறார்.

வருட முடிவில் அருணுக்கு கீழ்கண்ட ரிபோர்ட் தேவைப்படும்.
பேங்க் பேலன்ஸ்
கையிருப்பு தொகை
லாபம்
மற்றவர்களுக்கு அருண் தர வேண்டிய தொகை.
மற்றவர்களிடம் இருந்து அருணுக்கு வர வேண்டிய தொகை.
மேற்கண்ட ரிபோர்ட்டை வருட முடிவில் மட்டுமல்ல காலாண்டுக்கு ஒருமுறையோ
அரையாண்டுக்கு ஒரு முறையோ ஏன் தேவைக்கேற்ப தினமும் கூட Tally மென்பொருள் மூலம் பெறலாம்.அதுமட்டுமல்ல Trial balance, Trading profit & loss, Balance sheet, stock report ஆகிய ரிபோர்ட்களும் தேவைப்படும்.
ஸ்டாக்கில் எத்தனை டிவி எத்தனை பிரிட்ஜ் போன்றவையும் T.V என்றால் SONY-யில் எத்தனை SAMSUNG-ல் எத்தனை போன்ற ரிபோர்ட்டும் தேவைப்படும்.

இந்த கணக்கை நோட்புக்கில் எழுதி சரிபார்ப்பதை விட Tally மென்பொருளில் சரிபார்பதே எளிதாகும். காரணம் நேரத்தை வீணடிக்காமல் தெளிவான ரிபோர்ட்டை விரைவில் பெறலாம்.

Mar 26, 2010

டேலி படி வேலை ரெடி"டேலி படி வேலை ரெடி"

தற்போது நீங்க துணிக்கடையோ டிபார்ட்மென்ட் ஸ்டோரோ அல்லது ஹோட்டலோ எங்கு போனாலும் கம்பியூட்டர் பில் தருவார்கள்.
இது பில்லிங் சாப்ட்வேர் மூலம் பெறபடுகிறது.
பில்லிங் சாப்ட்வேர் மூலம்
அன்றைய ஸ்டாக், VAT தொகை, கையிருப்பு தொகை, பொருள்களின் விலைவிபரம் மட்டும் தான் பெறமுடியும்.
ஆனால் Tally ஒரு எளிமையான கணக்கியல் மென்பொருள். Tally என்பது ஒரு ALL IN ONE சாப்ட்வேர். இந்த சாப்ட்வேர் மூலம் உங்கள் கடையின் கணக்கு சம்பந்தமான எந்த ஒரு தகவலையும் ஆதி முதல் அந்தம் வரை புள்ளிவிவரமாக பெறலாம்.சிறிய நிறுவனமோ பெரிய கடையோ எந்த கணக்கும் நீங்கள் கேட்கும் தகவல் A to Z எளிதில் பெறலாம்.
Tally சாப்ட்வேர் User friendly ஆக இருப்பதால் அனைவரும் எளிதில் கையாளலாம்.


ஞாயிற்றுகிழமையில் தினத்தந்தி, HINDU போன்ற நாளிதழ்களை பார்த்தால் Tally Operator தேவை என ஏராளமான வரி விளம்பரங்கள் வெளியாயிருக்கும்.


ஆதலினால் Tally கற்பீர். வாழ்வில் உயர்வீர்
டேலியில் உங்கள் கணக்கு சம்பந்தமா எதுவும் பண்ணலாம். எல்லாம் எளிது.

Mar 24, 2010

VAT-வாட்- மதிப்பு கூட்டு வரிமதிப்பு கூட்டு வரி
சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகமெங்கும் பாண்டிச்சேரி ரிஜிஸ்டிரேசன் எண்ணுள்ள அம்பாசிடர் கார்கள் தான் நிறைய தென்படும். காரணம் அனைத்து பொருள்களுக்கும் தமிழகத்தை விட பாண்டிச்சேரியில் விற்பனைவரி குறைவு. அதனால் தான் டி.வி முதல் கார் வரை அனைத்தையும் பாண்டிச்சேரியில் தான் வாங்கினார்கள். ஒரு பொருளை தமிழ்நாட்டில் விற்பனை வரி செலுத்தி வாங்குவதை காட்டிலும் அப்பொருளை பாண்டிச்சேரியில் வரி செலுத்தி வாங்குவது மிகுந்த லாபம் தந்தது. அதன்பின்பு தான் எந்த மாநிலத்தில் வாகனத்தை வரி செலுத்தி வாங்கினாலும் அந்த வாகனத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டுவரும் போது நுழைவுவரி ENTRY TAX கட்ட வேண்டும் என சட்டம் அமல்படுத்தபட்டது.
காரணம் எலெக்ட்ரானிக் பொருளுக்கு தமிழ்நாட்டில் 16 சதவீத வரி இருக்கும். பாண்டிச்சேரியில் அதே பொருளுக்கு 2 சதவீத வரி தான் இருக்கும். இப்படி அடுத்தடுத்த மாநிலங்களிலேயே வரி மாறுபாடுகள் இருந்ததால் வரி ஏய்ப்புகள் நடக்க வாய்ப்புகள் ஏற்பட்டது.
இதற்காக தான் மத்திய அரசு எந்த பொருளை எந்த மாநிலத்தில் வாங்கினாலும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை UNIFORM TAX RATE கொண்டுவர எண்ணியது.
இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் நடைமுறையிலுள்ள
Value Added Tax எனப்படும் VAT மதிப்புக்கூட்டு வரி முறை இந்தியாவெங்கும் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டது.

Mar 23, 2010

டேலி பதிப்புகள் TALLY VERSIONSஎந்த ஒரு மென்பொருளும் அதை வாங்கி உபயோகிக்கும் பயன்பாட்டாளரின் அன்றாட தேவைக்கேற்ப அந்த மென்பொருளை புதிய வசதிகளுடன் மேம்படுத்தி அவ்வப்போது வெளியிட வேண்டும். இல்லையென்றால் அந்த மென்பொருளை வாங்கி உபயோகிப்பவர் தனக்கு தேவைப்படும் புதிய வசதிக்காக வேறு ஒரு மென்பொருளை தேடிச் செல்வார்.
இதற்காகத் தான் மென்பொருள் தயாரிப்பாளர்கள் அவ்வப்போது புது பதிப்புகள் VERSIONS வெளியிடுவது வழக்கம்.
பிரபல இயங்குதள மென்பொருள் OPERATING SOFTWARE மைக்ரோசாப்டின் விண்டோஸ் கூட அவ்வப்போது புதிய VERSION பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.

WINDOWS 95 ,98 , XP, VISTA என பல பதிப்புகளை வெளியிட்ட மைக்ரோசாப்ட் தற்போது விண்டோஸ் 7 என்ற பதிப்பை வெளியிட்டுள்ளது.
TALLY நிறுவனமும் அதே போல் பல்வேறு பதிப்புகளை வெளியிட்டுள்ளது.
TALLY 4.5
TALLY 5.4
TALLY 6.3
TALLY 7.2
TALLY 8.1
TALLY 9.0
போன்ற பதிப்புகளை வெளியிட்ட
TALLY நிறுவனம் தற்போது
TALLY 9.erp என்ற புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

Mar 14, 2010

டேலி அறிமுகம் :- யாருக்கு தேவை டேலி
முன்பெல்லாம் பள்ளி பருவத்தில் மாணவர்கள் டைப் ரைட்டிங் வகுப்புக்கு செல்வார்கள்.
ஆனால் தற்போது கம்ப்யூட்டர் வகுப்புக்கு செல்கிறார்கள்.
என்னதான் படித்தாலும் டேலி மாதிரியான படிப்பு மட்டுமே நமக்கு பகுதி நேர வேலை வாய்ப்புகளை பெற்று தருகிறது .

இன்னைக்கு csc -ல் டேலி படிச்சா நாளைக்கே வேலை என்பது எல்லோருக்கும் தெரிந்த விளம்பரம்.

டேலி படிச்சா வேலை வாய்ப்புகள் ஏராளமா கொட்டி கிடக்கு.அக்கவுன்ட்ஸ் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அனைவரும் படிக்கலாம்..!
வருமானம் ஈட்டலாம்..!!