< தமிழில் டேலி Tally.ERP9 >

Jul 23, 2011

வரி மாற்றங்களும் சில நெருடல்களும் ( Tally 9 )




VAT

நெருடல் 1 :

வாட் வரிச் சட்டம் 1.1.2007 நடைமுறைக்கு வந்தது.
ஆனால் அதற்கு முன் எந்த ஒரு பொருளுக்கும் வரி மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

தமிழகத்தில் 20 சதவீத வரிக்கு விற்கப்படும் பொருள் பாண்டிச்சேரியில் 4 சதவீத வரிக்கு கூட விற்கப்படும்.

அதற்காக இந்தியாவில் நீங்கள் எந்த மாநிலத்தில் ஒரு பொருளை வாங்கினாலும் ஒரே வரி தான் இருக்க வேண்டும்.

ஒரே பொருளுக்கு மாநிலத்திற்கு மாநிலம் வரி வேறுபடக்கூடாது.

சமச்சீர் வரித் திட்டம்
(UNIFORM TAX SYSTEM)
என்ற முறை தேவைப்பட்டது.

அதற்காகத் தான் மதிப்புக்கூட்டு வரி
( VALUE ADDED TAX ) எனும் வாட் வரி இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்டது.

ஆனால் நடப்பது என்ன..?

இந்தியா முழுதும் எந்த பொருளுக்கும் ஒரே வரி விகிதம் என்பதற்காக ஆரம்பிக்கபட்ட STATE BASED VAT SYSTEM இன்று எந்த பொருளை வாங்கினாலும் பழையபடியே மாநிலத்திற்கு வெவ்வேறு வரி விகிதம் என வந்துள்ளது!


நெருடல் 2 :

தமிழக வாட் வரிச் சட்டத்தில் இன்னமும் REVISED RETURN கொடுக்க வணிகர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை!


நெருடல் 3 :

வாட் வரி நடைமுறைக்கு வந்தவுடன் மத்திய விற்பனை வரி
( CST ) ஆண்டிற்கு ஒரு சதவீதம் வரி குறைக்கப்படும் என கூறப்பட்டது.
ஆனால் நடந்தது என்ன..?!

4 சதவீதமாக இருந்த மத்திய விற்பனைவரி
( CST )
முதலில் 3 சதவிகிதமாகவும்
பின்பு 2 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டது.
ஆனால் 2 சதவிகித மத்திய விற்பனைவரி இன்னமும் குறைக்கபடாமல் இருக்கிறது!

தற்போது CST வரியே இல்லாமல் இருந்திருக்க வேண்டும்..
ஆனால் ஏனோ
2 சதவிகித வரியாகவே தொடர்கிறது.

இது ஒருபுறம் இருக்க
வாட் வரியை நீக்கி விட்டு மத்திய அரசு இந்தியா முழுவதும் GST
( சரக்கு சேவை வரி )
என்ற வரித் திட்டத்தை கொண்டுவர உள்ளது.

இதன்படி
( Goods Service Tax )
சரக்கு சேவைவரி என்பது

VAT ,

CST ,

EXCISE ,

SERVICE TAX

என அனைத்து வரிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

இதற்காக மத்திய அரசு மாநில அரசுகளிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.

=* நேற்று *=
31.12.2OO6 வரை
TNGST தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டம் Tamil Nadu General Sales Tax.

=* இன்று *=
1.1.2007 முதல் VAT மதிப்பு கூட்டு வரிச் சட்டம் Value Added Tax.

=* நாளை *=
GST சரக்கு சேவை வரி Goods Service Tax.



நாட்டில் எந்த வரிச் சட்டம் நடைமுறைக்கு வந்தாலும்
Tally நிறுவனம் அதற்கேற்ப தனது மென்பொருளில் மாற்றங்கள் செய்து புதிய மேம்படுத்திய (Release) வெளியீடுகளை அறிமுகம் செய்கிறது.
இதனால் Tally மென்பொருளை உபயோகிப்பவர்கள் எளிதில் கணக்குகளை பதிவு செய்ய முடிகிறது. அதேபோல் வரிகளை சரியாக கணக்கிட்டு அரசுக்கு செலுத்த முடிகிறது. பயன்பாட்டாளர்களின் தேவைக்கேற்ப தங்கள் மென்பொருளில் மாற்றம் செய்து வெளியிடுவதால் தான் அன்றும் இன்றும் என்றும் Tally நிறுவனம் கணக்கியல் மென்பொருள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

Tally மென்பொருளை உபயோகிப்பவர்கள் எளிதில் கணக்குகளை பதிவு செய்ய முடிகிறது. அதேபோல் வரிகளை சரியாக கணக்கிட்டு அரசுக்கு செலுத்த முடிகிறது. //

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

Post a Comment