< தமிழில் டேலி Tally.ERP9 >

Oct 24, 2010

Tally.ERP9 ல் MARK செய்வதன் கூடுதல் பலன்கள்..




Tally.ERP9 CTRL+SPACEBAR மற்றும் SPACEBAR என்ற இரு SHORTCUT KEY மூலம் மேலும் சில நன்மைகள் பெறலாம்.

பெரும்பாலும் நாம் அதிக அளவு TRANSTACTIONS உள்ள கணக்குகளுக்கு மட்டுமே BILLWISE DETAILS OPTIONSனுக்கு YES கொடுத்திருப்போம். ஆனால் அப்படி நாம் BILLWISE DETAILS கொடுக்காத கம்பெனியில் பார்ட்டி பேலன்ஸ் சரி பார்ப்பது கஷ்டமாக இருக்கும். அதற்கு ஒரு பார்ட்டி அக்கவுன்ட்சை திறந்து பாருங்கள்.
எந்த பில்லுக்கு எந்த தேதியில் வந்த AMOUNT டேலி ஆகிறதென்று பார்த்தால் குழப்பாக இருக்கும். அதனால் அந்த பார்ட்டி லெட்ஜர் காப்பியை பிரிண்ட் எடுத்து டேலி செய்து பார்ப்பீர்கள்.

டேலி ERP9 ல் ஏதாவது ஒரு பார்ட்டி லெட்ஜரை திறந்தவுடன் எந்த பில்லுக்கு எந்த AMOUNT டேலி ஆகிறது என SPACEBARஐ அழுத்தி மார்க் செய்து சரிபார்த்து கொள்ளலாம். மார்க் செய்யப்படாமல் விடுபட்ட என்டரிகளை எளிதில் கண்டுபிடித்து பார்ட்டி லெட்ஜரை சரி செய்யலாம்.
அதேபோல் நாம் தினந்தோறும் பேங்க் என்டிரியை தொடர்ந்து TALLYயில் பதிந்து கொண்டே வருவோம். ஆனால் நமக்கு பேங்க் ஸ்டேட்மெண்ட் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தான் கிடைக்கும்.
நாம் பேங்க் ஸ்டேட்மெண்டில் உள்ள ஒவ்வொரு என்டிரியையும் பார்த்து TALLY.ERP 9 யிலுள்ள நமது பேங்க் லெட்ஜரிலுள்ள என்டிரியை SPACEBARஐ அழுத்தி மார்க் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.



சாதாரணமாக மளிகைக்கடைக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களின் லிஸ்டை கொடுத்து விட்டு வருவோம்.
கடைக்காரரும் பொருட்களை எடுத்து வைத்து விட்டு அந்த பொருட்களின் விலையையும் எழுதி வைத்திருப்பார்.
நீங்கள் பில்லுக்குரிய தொகையை கொடுத்தவுடன் கடைக்காரர் எடுத்து வைத்திருக்கும் பொருளை உடனே தர மாட்டார். மாறாக லிஸ்டில் உள்ள ஒவ்வொரு பொருளையும் டிக் அடித்த பிறகு தான் எடுத்து வைப்பார். இது ஒரு CHECK & VERIFY தான்.

இதைப்போல் தான் Tally.ERP9 லிலும் SPACE BARஐ அழுத்தி MARK செய்து கணக்குகளை சரி பார்த்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment