< தமிழில் டேலி Tally.ERP9 >

Mar 28, 2010

ரிபோர்ட்ஸ் வகைஅருண் என்பவர் 5 லட்சம் முதலீடு செய்து வீட்டு உபயோக பொ
ருள் கடையை துவங்குகிறார்.
1 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து மாதம் பத்தாயிரம் வாடகைக்கு கடையை பிடிக்கிறார்.
பின்பு கடைக்கு தேவையான தளவாட சாமான்களை 50,000 ரூபாய்க்கும், விற்பனைக்கு தேவையான டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை 3 லட்சம் ரூபாய்க்கும் வாங்குகிறார்.

வருட முடிவில் அருணுக்கு கீழ்கண்ட ரிபோர்ட் தேவைப்படும்.
பேங்க் பேலன்ஸ்
கையிருப்பு தொகை
லாபம்
மற்றவர்களுக்கு அருண் தர வேண்டிய தொகை.
மற்றவர்களிடம் இருந்து அருணுக்கு வர வேண்டிய தொகை.
மேற்கண்ட ரிபோர்ட்டை வருட முடிவில் மட்டுமல்ல காலாண்டுக்கு ஒருமுறையோ
அரையாண்டுக்கு ஒரு முறையோ ஏன் தேவைக்கேற்ப தினமும் கூட Tally மென்பொருள் மூலம் பெறலாம்.அதுமட்டுமல்ல Trial balance, Trading profit & loss, Balance sheet, stock report ஆகிய ரிபோர்ட்களும் தேவைப்படும்.
ஸ்டாக்கில் எத்தனை டிவி எத்தனை பிரிட்ஜ் போன்றவையும் T.V என்றால் SONY-யில் எத்தனை SAMSUNG-ல் எத்தனை போன்ற ரிபோர்ட்டும் தேவைப்படும்.

இந்த கணக்கை நோட்புக்கில் எழுதி சரிபார்ப்பதை விட Tally மென்பொருளில் சரிபார்பதே எளிதாகும். காரணம் நேரத்தை வீணடிக்காமல் தெளிவான ரிபோர்ட்டை விரைவில் பெறலாம்.

Mar 26, 2010

டேலி படி வேலை ரெடி"டேலி படி வேலை ரெடி"

தற்போது நீங்க துணிக்கடையோ டிபார்ட்மென்ட் ஸ்டோரோ அல்லது ஹோட்டலோ எங்கு போனாலும் கம்பியூட்டர் பில் தருவார்கள்.
இது பில்லிங் சாப்ட்வேர் மூலம் பெறபடுகிறது.
பில்லிங் சாப்ட்வேர் மூலம்
அன்றைய ஸ்டாக், VAT தொகை, கையிருப்பு தொகை, பொருள்களின் விலைவிபரம் மட்டும் தான் பெறமுடியும்.
ஆனால் Tally ஒரு எளிமையான கணக்கியல் மென்பொருள். Tally என்பது ஒரு ALL IN ONE சாப்ட்வேர். இந்த சாப்ட்வேர் மூலம் உங்கள் கடையின் கணக்கு சம்பந்தமான எந்த ஒரு தகவலையும் ஆதி முதல் அந்தம் வரை புள்ளிவிவரமாக பெறலாம்.சிறிய நிறுவனமோ பெரிய கடையோ எந்த கணக்கும் நீங்கள் கேட்கும் தகவல் A to Z எளிதில் பெறலாம்.
Tally சாப்ட்வேர் User friendly ஆக இருப்பதால் அனைவரும் எளிதில் கையாளலாம்.


ஞாயிற்றுகிழமையில் தினத்தந்தி, HINDU போன்ற நாளிதழ்களை பார்த்தால் Tally Operator தேவை என ஏராளமான வரி விளம்பரங்கள் வெளியாயிருக்கும்.


ஆதலினால் Tally கற்பீர். வாழ்வில் உயர்வீர்
டேலியில் உங்கள் கணக்கு சம்பந்தமா எதுவும் பண்ணலாம். எல்லாம் எளிது.

Mar 24, 2010

VAT-வாட்- மதிப்பு கூட்டு வரிமதிப்பு கூட்டு வரி
சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகமெங்கும் பாண்டிச்சேரி ரிஜிஸ்டிரேசன் எண்ணுள்ள அம்பாசிடர் கார்கள் தான் நிறைய தென்படும். காரணம் அனைத்து பொருள்களுக்கும் தமிழகத்தை விட பாண்டிச்சேரியில் விற்பனைவரி குறைவு. அதனால் தான் டி.வி முதல் கார் வரை அனைத்தையும் பாண்டிச்சேரியில் தான் வாங்கினார்கள். ஒரு பொருளை தமிழ்நாட்டில் விற்பனை வரி செலுத்தி வாங்குவதை காட்டிலும் அப்பொருளை பாண்டிச்சேரியில் வரி செலுத்தி வாங்குவது மிகுந்த லாபம் தந்தது. அதன்பின்பு தான் எந்த மாநிலத்தில் வாகனத்தை வரி செலுத்தி வாங்கினாலும் அந்த வாகனத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டுவரும் போது நுழைவுவரி ENTRY TAX கட்ட வேண்டும் என சட்டம் அமல்படுத்தபட்டது.
காரணம் எலெக்ட்ரானிக் பொருளுக்கு தமிழ்நாட்டில் 16 சதவீத வரி இருக்கும். பாண்டிச்சேரியில் அதே பொருளுக்கு 2 சதவீத வரி தான் இருக்கும். இப்படி அடுத்தடுத்த மாநிலங்களிலேயே வரி மாறுபாடுகள் இருந்ததால் வரி ஏய்ப்புகள் நடக்க வாய்ப்புகள் ஏற்பட்டது.
இதற்காக தான் மத்திய அரசு எந்த பொருளை எந்த மாநிலத்தில் வாங்கினாலும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை UNIFORM TAX RATE கொண்டுவர எண்ணியது.
இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் நடைமுறையிலுள்ள
Value Added Tax எனப்படும் VAT மதிப்புக்கூட்டு வரி முறை இந்தியாவெங்கும் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டது.

Mar 23, 2010

டேலி பதிப்புகள் TALLY VERSIONSஎந்த ஒரு மென்பொருளும் அதை வாங்கி உபயோகிக்கும் பயன்பாட்டாளரின் அன்றாட தேவைக்கேற்ப அந்த மென்பொருளை புதிய வசதிகளுடன் மேம்படுத்தி அவ்வப்போது வெளியிட வேண்டும். இல்லையென்றால் அந்த மென்பொருளை வாங்கி உபயோகிப்பவர் தனக்கு தேவைப்படும் புதிய வசதிக்காக வேறு ஒரு மென்பொருளை தேடிச் செல்வார்.
இதற்காகத் தான் மென்பொருள் தயாரிப்பாளர்கள் அவ்வப்போது புது பதிப்புகள் VERSIONS வெளியிடுவது வழக்கம்.
பிரபல இயங்குதள மென்பொருள் OPERATING SOFTWARE மைக்ரோசாப்டின் விண்டோஸ் கூட அவ்வப்போது புதிய VERSION பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.

WINDOWS 95 ,98 , XP, VISTA என பல பதிப்புகளை வெளியிட்ட மைக்ரோசாப்ட் தற்போது விண்டோஸ் 7 என்ற பதிப்பை வெளியிட்டுள்ளது.
TALLY நிறுவனமும் அதே போல் பல்வேறு பதிப்புகளை வெளியிட்டுள்ளது.
TALLY 4.5
TALLY 5.4
TALLY 6.3
TALLY 7.2
TALLY 8.1
TALLY 9.0
போன்ற பதிப்புகளை வெளியிட்ட
TALLY நிறுவனம் தற்போது
TALLY 9.erp என்ற புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

Mar 14, 2010

டேலி அறிமுகம் :- யாருக்கு தேவை டேலி
முன்பெல்லாம் பள்ளி பருவத்தில் மாணவர்கள் டைப் ரைட்டிங் வகுப்புக்கு செல்வார்கள்.
ஆனால் தற்போது கம்ப்யூட்டர் வகுப்புக்கு செல்கிறார்கள்.
என்னதான் படித்தாலும் டேலி மாதிரியான படிப்பு மட்டுமே நமக்கு பகுதி நேர வேலை வாய்ப்புகளை பெற்று தருகிறது .

இன்னைக்கு csc -ல் டேலி படிச்சா நாளைக்கே வேலை என்பது எல்லோருக்கும் தெரிந்த விளம்பரம்.

டேலி படிச்சா வேலை வாய்ப்புகள் ஏராளமா கொட்டி கிடக்கு.அக்கவுன்ட்ஸ் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அனைவரும் படிக்கலாம்..!
வருமானம் ஈட்டலாம்..!!