< தமிழில் டேலி Tally.ERP9 >

Jan 6, 2011

Tally.ERP9இல் PDF வசதி [Part-1]




இப்போதெல்லாம் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் யாரும் பணம் எடுக்க பெரும்பாலும் வங்கிக்கு சென்று டோக்கன் வாங்கி மணிக்கணக்கில் காத்திருப்பதில்லை.

சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் பேங்கில் DEBIT CARD கொடுத்து விடுகிறார்கள்.

அதனால் நீங்கள் பணம் எடுக்க பேங்கிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
ATM சென்டருக்கு சென்று உங்கள் சேமிப்பு கணக்கில் பேலன்ஸ் பார்த்து பணம் எடுத்து கொள்ளலாம்.
ATMக்கு சென்றவுடன் நமது கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறது என்பதை பார்க்க மினி ஸ்டேட்மெண்ட் எடுப்போம்.
அதன்பிறகே நமக்கு தேவையான பணத்தை பெறுவோம்.
ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் நாம் அந்த மினி ஸ்டேட்மெண்ட் சிலிப்பை பத்திரபடுத்தி கொள்வோம்.
ஆனால் அந்த சிலிப்பில் உள்ள எழுத்துக்கள் அடுத்தமுறை பார்க்கும்போது அழிந்திருக்கும்!

சமீபத்தில் நண்பர் ஒருவர் சென்ற வருடம் மாநகராட்சிக்கு சொத்துவரி கட்டிய ரசீதை ஜெராக்ஸ் எடுக்க பைலில் தேடினார்.
வெற்று பேப்பர் தான் இருந்தது!
காரணம் வழக்கமாக கார்பன் வைத்து பில் போடும் அதிகாரி கடந்த முறை கையடக்க கருவி மூலம் பில் போட்டு தந்தார்.
அந்த பில் ATM மினி ஸ்டேட்மெண்ட் அளவிற்கு தான் இருந்தது.

அதேபோன்ற கையடக்க கருவியின் மூலம் தான் மாநகராட்சி பேருந்துகளில் பயணச்சீட்டு தருகிறார்கள்.
சமீப காலமாக பிரபல கொரியர் நிறுவனங்கள் இது போன்ற கையடக்க கருவியில் நமது கையெழுத்தை பெற்று தபால்களை தருகிறார்கள்.
ஒரு சில பைனான்ஸ் கம்பெனிகாரர்கள் தினசரி பணம் வசூல் செய்து கையடக்க கருவி மூலம் தான் பில் தருகிறார்கள்.
ஏன் இன்னும் கொஞ்சம்நாள் போனால் மாத பணத்தை வசூல் செய்ய உங்கள் வீட்டு பால்காரர் , பேப்பர்காரர் , கேபிள் டிவிகாரர் என எல்லோரும் கையடக்க கருவியோடு பில் போட வந்தால் ஆச்சர்யப்பட தேவையில்லை.
இதேபோலத் தான் வியாபாரி ஒருவர் தான் கொள்முதல் செய்த வெளிமாநில பார்ட்டிகளுக்கு அவசரமாக
"சி" பாரம் தர வேண்டி இருந்தது.
அதற்காக அந்த பார்ட்டிகளிடம் கொள்முதல் செய்த பில்களை வணிகவரி அலுவலகத்தில் கொடுக்க ஜெராக்ஸ் எடுத்தார்.
தேவைப்பட்ட பில்களில் 2 பார்ட்டிகளின் சில பில்கள் பைலில் இல்லை.
அதனால் அந்த பார்ட்டிகளுக்கு போன் செய்து தொலைந்து போன பில் காபியை உடனடியாக FAX
( தொலைநகல் ) மூலம் அனுப்ப சொல்லியிருந்தார்.

கொரியர் தபால் மூலம் அனுப்பினால் தாமதமாகும் என்பதற்காகவும் பில்காபி உடனடியாக தேவை என்பதற்காகவும் தான் FAX அனுப்ப சொல்லியிருந்தார்.
ஒரு பார்ட்டி பில்காபியை FAX அனுப்பி இருந்தார்.
மற்றொரு பார்ட்டி பில்காபியை ஸ்கேன் செய்து மெயில் அட்டாசமெண்டாக மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.
அவரிடம் FAX கருவி இருந்தது. அதனால் இது சாத்தியமானது.
இல்லாவிட்டால் அருகிலுள்ள PCO வின் FAX நம்பருக்கு பில்காபியை அனுப்ப சொல்ல வேண்டியிருக்கும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது FAX காபி , ATM மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் கையடக்ககருவிகள் தரும் பில்கள் எல்லாம் என்றைக்கு பிரிண்ட் ஆகிறதோ அன்று மட்டும் தான் உபயோகபடுத்தும் அளவிற்கு பிரிண்ட்அவுட் இருக்கும்.
ஆகவே இதுபோன்ற பிரிண்ட்அவுட்களை உடனடியாக ஜெராக்ஸ் எடுத்து கொள்வது பிற்பாடு நமக்கு எப்போதும் உதவும்.
இல்லாவிட்டால் அந்த பிரிண்ட்அவுட் அழிந்து விரைவில் வெற்றுதாளாக மாறிவிடும்.

பேக்ஸ் தாளில் எடுக்கப்படும் பிரிண்ட்டில் உள்ள எழுத்துக்கள் சீக்கிரத்தில் மறைந்துவிடுவதால் நாம் நிரந்தர ரெக்கார்டாக பயன்படுத்த முடிவதில்லை என்பதே உண்மை!

எல்லாம் சரி.
Tally.ERP9 என்ற மென்பொருளுக்கும் இந்த பேக்ஸ் பிரிண்ட்அவுட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா..?
கட்டாயம் இருக்கிறது.
ஆம் இப்போது Tally.ERP9 மூலம் எந்த ஒரு ரிபோர்ட்டையும் நீங்கள்
PDF (Portable Document Format) ஆக மாற்றி கொள்ளலாம்..


>> தொடர்ச்சி அடுத்த பதிவில்..>>

3 comments:

Anonymous said...

தயவு செய்து பதிவு போட்டவுடன் இன்ட்லியில் இணைத்துவிடுங்கள்.

Anonymous said...

ஆஹா. என்ன ஒரு விரிவான தெளிவான விளக்கம். படிக்கப்படிக்க ஆனந்தமாக இருந்தது.

K.RAJA said...

ஆலோசனைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

Post a Comment