< தமிழில் டேலி Tally.ERP9 >

Jun 8, 2012

புது வருடமும் புது கணக்கும்..

வண்டு முருகன்...
வண்டு முருகன்...

நீதிபதி :- ஆங்கில புத்தாண்டு
என்னைக்கு துவங்குது.

வண்டு முருகன்:-
கனம் நீதிபதி அவர்களே..!
ஆங்கில புத்தாண்டு ஐனவரி முதல் தேதியில் தொடங்குது யுவர் ஓனர்..?

நீதிபதி:- தமிழ் புத்தாண்டு எப்ப துவங்குது..?

வண்டு முருகன்:- ஆகா..
ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்கய்யா . நல்லா கேக்கிறாங்ராய்ங்க
டீடெயிலு. அதாவது சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டா
இருந்திச்சி. இப்ப 5 வருசத்திற்கு ஒரு தரம் சித்திரை , தை ன்னு அவங்க
நோக்கத்துக்கு மாத்திகிறாங்க. ஆகா.. நானா தான் அரசியல் பேசிட்டனோ.
பிசியா சூட்டிங் போயிக்கிட்டு இருந்த என்ன அரசியல பேச வச்சதால இப்படி
சிக்கி சீரழஞ்சி ஒரு பொழப்பும் இல்லாம வீட்டுல சும்மா உக்காந்துகிட்டு
சுட்டி டீவி பாத்துகிட்டு இருக்கேன். இப்ப திரும்பவுமா..

வேண்டாம்
விட்டிருங்க வலிக்குது... அழுதுருவேன்.

நீதிபதி:- வட இந்தியர்கள் எப்ப
புது கணக்கை துவக்குறாங்க..


வண்டு முருகன்:- ஒவ்வொரு வருசமும் தீபாவளி அன்னிக்கி வட இந்தியர்கள் புது வருட கணக்கை ஆரம்பிக்கிறாங்க.

நீதிபதி:- அப்புறம் எல்லா பேங்கிற்கு ஏப்ரல் முதல் நாள் புது வருட
கணக்கு சொல்லி லீவு விடறாங்க.அது ஏன் தெரியுமா...?

வண்டு முருகன்:-
அப்சக்ஜன் யுவர் ஆனர்.( ஓவரா கத்திட்டேனோ ) நான் என்னமோ ரிசர்வ் பேங்க்
கவர்னர் மாதிரி என் கிட்ட பேங்க் நிர்வாகத்தை பத்தி கேட்டா
எப்பூ...பூ...டி. என்னை ஓவரா கடுப்பேத்துறீங்க மை லார்ட். இத்தோட நான்
கிளம்புறேன்.


இந்தியாவில் வருமான வரி , விற்பனை வரி, வங்கிகள் ன்னு
எல்லா கணக்குகளும் ஏப்ரல் முதல் நாள் தான் புது வருடம் துவங்குகிறது.
அதனால் தான் நாம ஏப்ரல் முதல் தேதியில் துவங்கி
மார்ச் 31 ல் முடியும்
காலத்தை கணக்கியல் ஆண்டாக நிர்வகிக்கிறோம்.

வழக்கமா நாம் ஏப்ரல் முதல்
தேதியில் தான் புதுக் கணக்கு பூஜை போடுவோம்.

புதுக் கணக்கு பூஜை போட
என்னென்ன புத்தகங்கள் வாங்குவோம்.
அன்றாட வரவு செலவு எழுத
ROUGH DAY BOOK
( கச்சா குறிப்பேடு ),
DAY BOOK,
LEDGER,
புது BILL BOOK, PURCHASE
REGISTER,
SALES REGISTER,
BANK PASS BOOK
( OSWAL ),
PARTY
COLLECTION BOOK ( OSWAL ),
BOX FILE,
பேனா ,
பென்சில்,
ரப்பர்.

Tally மென்பொருள் இருக்கிறதால இப்ப இதையெல்லாம் வாங்க வேண்டிய
அவசியமில்லாம போயிருச்சு.

Paper less work, Virtual office என்கிற ரேஞ்சுக்கு டேலி மென்பொருள்
டெவலெப் ஆயிட்டு வருது.

VOUCHER ENTRY மூலம் Tally-ல் பதிவு செய்தாலே
போதும். உங்களுக்கு தேவையான
DAY BOOK,
BANK BOOK,
CASH BOOK,
BALANCE
SHEET,
PROFIT & LOSS,
TRIAL BALANCE,
STOCK BOOK ,
PARTY LEDGER, என
எல்லா ரிபோர்ட்டும் கிடைத்து விடும்.
சரி, வாங்க, Tally யில் எப்படி
புது வருட கணக்கை துவங்குவது எனப் பார்ப்போம்.

RAJ & CO என்ற கம்பெனியில்

2011-2012 வருடத்திற்கு கணக்குகளை பதிந்து வச்சிருக்கீங்க.

இப்ப
RAJ & CO-விற்கு
2012 - 2013 வருடத்திற்கான கணக்குகளை VOUCHER ENTRY மூலம்
பதியனும். இதற்கு
RAJ & CO என்ற பெயரில் புதிதாக ஒரு கம்பெனியை Tallyல்
துவக்குவீங்களா.
சாரி பிரதர். புதிதாக கம்பெனி துவக்குவது சுலபம்.
ஆனா
அப்படி செய்தால் 2011-2012 வருடத்தில் நாம் பயன்படுத்திய LEDGERகளை
மீண்டும் நாம்
2012-2013 வருட கம்பெனிக்கும் புதிதாக துவக்க
வேண்டியிருக்கும்.

இதனால் நமக்கு ஏராளமான நேரம் வீணாகும்.

Tally யில் இந்த
இடையூறை போக்க ஒரு சுலபமான வசதி செஞ்சிருக்காங்க.

அந்த வசதிக்கு பேரு தான்

SPLIT COMPANY DATA.

இப்ப RAJ & CO கம்பெனியை
ஓபன் செய்யுங்க.

CURRENT PERIOD
2011 - 2012 என இருக்கா..

ALT+F2வை
அழுத்துங்கள்.

CHANGE PERIOD என்பதை
1.4.2012 to
31.3.2013 என்று
மாற்றுங்கள்.

இப்ப CURRENT PERIODஐ பாருங்க.
அடுத்த வருசத்திற்கு
(2012-2013) மாறியிருக்கா. Raj & co என்ற கம்பெனி
1.4.2011 to 31.3.2013
என இரண்டு வருட கணக்கா மாறியிருக்கு.
இப்ப நாம
SPLIT COMPANY ஆப்சன்
மூலம் இரண்டு வருட கணக்கை தனியா பிரிச்சி Raj & co விற்கு 2011-2012 ,
2012-2013 என்று இரண்டு கம்பெனியா மாற்றனும். எப்படி..?

ALT+F3 ஐ
அழுத்துங்க.

அதில் SPLIT COMPANY DATA என்ற ஆப்சனை தேர்வு செய்து ENTER
பட்டனை அழுத்துங்க. இப்ப SELECT COMPANY என்ற ஆப்சனை தேர்வு செய்து
ENTERஐ அழுத்துங்க.

SPLIT FROM என்பதற்கு
1.4.2012 என்று மாற்றவும்.

SPLIT COMPANY என்பதற்கு YES என்பதை அழுத்துங்கள். SPLITING COMPANY IN
PROGRESS என்ற கட்டம் திரையில் தெரியும். சிறிதுநேரம் கழித்து பார்த்தால்
இரண்டு புதிய கம்பெனி துவக்கப் பட்டிருக்கும்.
அதாவது
RAJ & Co
2011 -2012
(From 1.4.2011) என்றும்
2012-2013
(From 1.4.2012)
என்றும் இரண்டு கம்பெனிகள் இருக்கும்.

அதேசமயம்
RAJ & co பழைய
கம்பெனியும் அப்படியே எந்த மாறுதல் இல்லாம இருக்கும் .

2011-2012 கம்பெனி
டேட்டா நம்மிடம் இருப்பதால் SPLIT COMPANY மூலம் புதிதாக உருவான
RAJ & Co
(from 1.4.2011 ) என்ற கம்பெனியை DELETE செய்யுங்கள்.

RAJ & CO
(from 1.4.2012) என்ற புதிய கம்பெனியில் நாம் பதிவிட துவங்கலாம். அதற்கு முன்
கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள் சில உள்ளன..

5 comments:

rajamelaiyur said...

இப்படி கூட tally நடத்தலாமா ?

MARI The Great said...

அருமையான பாடம் ..!

Subramanian said...

வணக்கம்! "கடற்கரை"யிலிருந்து வருகிறேன். தங்களது கடின உழைப்பில் உருவாகிற இந்த சேவை மிகுந்த பாராட்டுக்குரியது. அனைத்து பதிவுகளும் (பாடங்களும்)மிக எளிமையாக புரிந்துகொள்ளும்படி உள்ளது. தங்களது மனம் உவந்த சேவைக்கு மிக்க நன்றி!

Thozhirkalam Channel said...

தொடர்ந்து அதிக தகவல்களை தொகுத்து தருகிறீர்கள்,,,
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

K.RAJA said...

அனைவருக்கும் நன்றி!

Post a Comment