< தமிழில் டேலி Tally.ERP9 >

Apr 15, 2012

சொல்ல மறந்த சுருக்குவிசை ( Tally Shortcut Keys)

**¤ Tally ( டேலி ) யின் ஹாட் கீ ( HOT KEY ) ¤**


அவசரமாக திருச்சியிலிருந்து சென்னை செல்லவேண்டும். பேருந்து நிலையம் செல்கிறீர்கள். திருச்சி டூ சென்னை என்று போட்டிருந்தால் ஏதாவது ஒரு வண்டியில் ஏறிவிடுவீர்களா. சாதாரண கட்டணம் என எழுதியிருக்கும் பேருந்தில் நிச்சயம் ஏற மாட்டீர்கள். அதில் கட்டணம் குறைவென்றாலும் ஊரெல்லாம் நின்று செல்லும். அடுத்து எக்ஸ்பிரஸ் பேருந்து .இது குறைவான இடங்களில் மட்டும் நின்று செல்லும். அடுத்து பை பாஸ் பேருந்து. இது ஊருக்குள் சென்று போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ளாமல் புறவழிச் சாலையில் விரைவில் சென்று விடும். அடுத்து பாயிண்ட் டூ பாயிண்ட் . திருச்சியில் கிளம்பினால் சென்னை தான். உங்கள் தேர்வு எதுவாக இருக்கும். பாயிண்ட் டூ பாயிண்ட் , எக்ஸ்பிரஸ் விரைவு பேருந்து , பை பாஸ் பேருந்து , நிச்சயம் இதில் ஏதாவது ஒன்றாகத் தான் இருக்கும். காரணம் கட்டணம் அதிகம் என்றாலும் இந்த பேருந்துகளில் விரைந்து செல்ல முடிவதால் உங்கள் நேரம் மிச்சபடுகிறது. போகும் பாதை வெவ்வேறாக இருந்தாலும் சேருமிடம் ஒன்றே. இதையே தானே டேலியிலும் நீங்கள் எதிர்பார்ப்பீங்க.


டேலியில் விரைவாக வேலையை முடிக்கவும் நேரத்தை மிச்சப்படுத்தவும் என்ன செய்யலாம். அதற்கு மவுஸை பயன்படுத்தாமல் கீ போர்டை அதிகம் பயன்படுத்த வேண்டும். அப்போ எந்த சுருக்கு விசையை ( SHORTCUT KEY ) எப்போது பயன்படுத்த வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும். உங்கள் கணினியின் டேலி-ஐ கிளிக் செய்யுங்கள். முதலில் COMPANY INFO தெரியும். அதில் வரிசையாக மெனுக்கள் தெரியும். ஒவ்வொரு வரியிலும் ஒரு எழுத்து தடித்த எழுத்தாக இருக்கும். இதில் நாம் தேர்வு செய்ய நினைப்பது 1 ) SELECT COMPANY ( ஏற்கனவே நாம் உருவாக்கி வைத்த கம்பெனிகளின் பட்டியல் ) 2) CREATE COMPANY (புதிதாக கம்பெனி உருவாக்க) 3) BACK UP (ஏற்கனவே உள்ள கம்பெனிகளின் டேட்டாவை நகலெடுக்க ( COPY செய்ய) 4)RESTORE ( கம்பெனி டேட்டாவை நிறுவுதல் ). இப்போது SELECT COMPANYக்கு செல்ல உங்கள் கீ போர்டில் S என்ற கீயை அழுத்துங்கள். அல்லது F1 என்ற கீ யை அழுத்துங்கள். புதிதாக டேலியில் கம்பெனி துவங்க வேண்டுமா..? C என்ற கீயை அழுத்தினால் கம்பெனி CREATION மெனுவிற்கு நேரடியாகச் செல்லலாம். சரி. S என்ற கீயை உங்களுக்கு தேவையான கம்பெனியை திறந்து கொள்ளுங்கள்.
Tally மென்பொருளை பொறுத்தவரை DISPLAYவிலோ அல்லது Voucher Entryன் போதோ எவ்வளவு தூரம் நாம் மௌஸை தொடாமல் விசைபலகையை மட்டும் பயன்படுத்தி சுருக்குவிசையை உபயோகப்படுத்துகிறோமோ அவ்வளவுதூரம் நேரம் மிச்சப்படும். வேலைநேரமும் சுவாரசியமாக இருக்கும். தலையை சுத்தி மூக்கை தொடாம உங்கள் வேலையை சுலபமா முடிக்கனும்னா கட்டாயம் டேலியின் சுருக்குவிசைகளை எங்கே எப்போது பயன்படுத்துறதுன்னு உங்களுக்கு தெளிவான அனுபவம் தான் கை கொடுக்கும். டேலி சுருக்கு விசைகள் பார்த்தாலோ படித்து ஞாபகத்தில் வச்சிகிட்டு இருந்தாலோ புரியாது. பழக பழக அனுபவத்துல தான் அதன் சிறப்பம்சம் புரியும்.

1 comment:

Anonymous said...

டேலி பயிலும் என் நண்பருக்கு பயனுள்ளதாக உள்ளது தங்கள் ...

Post a Comment