< தமிழில் டேலி Tally.ERP9 >

Dec 12, 2011

டேலி பயன்பாட்டு மொழிகளின் பட்டியல்.

அழைப்பு மணி
( காலிங் பெல் ) ஒலித்தது. கதவைத் திறந்தேன்.
வந்தவர்
"சார் கேஸ் " என்று உரத்த குரல் கொடுத்தார்.

எம்டி (EMPTY) கொடுங்க சார் என்றார்.

காலி சிலிண்டர் தந்தேன்.
காலி சிலிண்டர் எடுத்துக் கொண்டு சென்றவர் பின்பு முழு சிலிண்டர் எடுத்து வந்தார்.

காசு கொடுங்க சார் என்று பில்லை நீட்டினார்.

பில் இரு பகுதியாக இருந்தது.

பில்லின் ஒரு பகுதியை எனக்கு தந்துவிட்டு பில்லின் மற்றொரு பகுதியில் கையெழுத்திட சொன்னார்.

எனக்கு ஒரே ஆச்சர்யம் காரணம் நான் கையெழுத்திட்ட பில் முழுக்க தமிழில் அச்சிடபட்டிருந்தது.

எனக்கு தந்த பில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

ஒரே பில் தான் ஒரு பகுதி ஆங்கிலம் ஒரு பகுதி தமிழ் ஏன் என்று கேட்டேன்.

எங்களை மாதிரி டெலிவரி பாய்ஸுக்கும் லோடு மேனுக்கும் ரூட்டுல ( ROUTE ) ஈசியா டெலிவரி செய்றதுக்கு தமிழில் பில்.

கஸ்டமருக்கு இங்கிலீஸ்ல பில் என்றார். எங்க ஆபிஸில இங்கிலீஸுல பில்லை சார்ட்டா அடிக்கிறாங்க சார்.

அதை எங்களை போல இருக்கிற லோடுமேனால சரியா படிச்சு புரிஞ்சிக்க முடியாது.

சில சமயம் பழக்கப்பட்ட ஏரியாவுல கஸ்டமர் வீட்டுக்கிட்ட நின்னுகிட்டே அந்த அட்ரஸை தேடுற காமெடி எல்லாம் நடக்கும் என்றார்.

அவர் பேச்சை கேட்ட போது கவிஞர் காசி ஆனந்தனின் இந்த பாடல் தான் ஞாபகம் வந்தது.


"தமிழா நீ பேசுவது தமிழா "

டேலி (tally) மென்பொருள் மூலம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பில் அச்சிடலாம் என்று சொல்கிறோம்.

ஏனென்றால் Tally ( டேலி ) மென்பொருள் என்பது CONCURRENT MULTILINGUAL SOFTWARE ஆகும். எங்கேயாவது டேலி மென்பொருள் மூலம் தமிழில்
( TAMIL ) அச்சிடப்பட்ட பில்லை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?

வெகு அபூர்வமான விசயம். காரணம் யாரும் முயற்சி செய்து பார்ப்பதில்லை!


நம்மில் பலருக்கு டேலி (TALLY) மென்பொருள் மூலம் ஆங்கிலத்தில் மட்டுமே கணக்குகளை நிர்வகிக்க முடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

டேலியில் ஏதாவது ஒரு கம்பெனியை திறந்து கொள்ளுங்கள்.

ALT+ G என்ற சுருக்குவிசையை பயன்படுத்தி தமிழ் மொழியை தேர்வு செய்தால் ஒட்டு மொத்த டேலி மெனுவும் தமிழில் மாறிவிடும் என்பது தெரியுமா..

பிறகு நீங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கணக்கு நிர்வகிக்கலாம்.
தமிழில் பில் அச்சிடலாம்.

உங்கள் கைப்பேசியில் SETTING MENU விற்கு LANGUAGE பகுதியை திறந்து தமிழ் மொழியை தேர்வு செய்தால் மொத்த மெனுவும் தமிழில் மாறிவிடுகிறது அல்லவா.
பின்பு குறுஞ்செய்தியை கூட தமிழில் அனுப்பலாம். அதுபோலத் தான் இதுவும். அப்ப டேலி மென்பொருளில் தமிழ் தவிர வேறு என்ன பயன்பாட்டு மொழிகள் இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா..

Tallyல் ஏதாவது ஒரு கம்பெனியை திறந்து கொள்ளுங்கள்.

ALT+G என்பதை அழுத்துங்கள். இப்பொழுது என்னென்ன மொழிகளில் டேலி மென்பொருளை பயன்படுத்தலாம் என பயன்பாட்டு மொழிகளின் பட்டியல் தெரிகிறதா..

இதோ அந்த பட்டியல்.

1) ARABIC ( SAUDI ARABIA )

2) URDU (ISLAMIC REPUBLIC OF PAKISTAN )

3) ஆங்கிலம்

4) இந்தோனேசியன் மொழி

5) கன்னடம்

6) குஜராத்தி

7) தமிழ்

8) தெலுங்கு

9) பஞ்சாபி

10) பஹாஸா மெலாயு

11) மராத்தி

12) மலையாளம்

13) வங்காளி

14) ஹிங்கிலிஷ்

15) ஹிந்தி

உங்கள் தேவை எதுவோ அந்த மொழியில் டேலி மென்பொருளை உபயோகித்து பயன்பெறுங்கள்.

டேலியில் பயன்பாட்டு மொழியை மாற்ற சுருக்குவிசை


ALT+G.


டேலியில் விசைப்பலகை
( KEY BOARD ) யின் தட்டச்சு மொழி
( TYPING LANGUAGE ) மாற்றம் செய்ய சுருக்கு விசை

ALT+ K.

1 comment:

தமிழ் மகேந்திரன் said...

என் தமிழ் இனிமேலும் வாழும். கணிணியில், இணையத்தில், மென்பொருளில் தமிழைக் காண்கிறேன். என் தமிழ் இனிமேலும் வாழும்.

Post a Comment