< தமிழில் டேலி Tally.ERP9 >

Oct 29, 2010

Tally.ERP9இன் புதிய ரிலீஸ் 2.1




சென்ற வாரம் Tally.ERP9இன் புதிய ரிலீஸ்
( RELEASE ) 2.1 வெளியானது.
சரி... Tally நிறுவனம் எதற்கு அடிக்கடி புதிய RELEASEஐ வெளியிடுகிறது தெரியுமா...?

இந்தியாவெங்கும் VAT வரிவிதிப்பு முறை இருந்தாலும் மாநிலத்திற்கு மாநிலம் வரி விகிதம்
(RATE OF TAX ) மாறுபடுகிறது.
திடீரென ஒரு சில மாநிலங்களில் வரி விகிதங்களை மாற்றி விடுகிறார்கள்.
அந்த மாதிரி சமயங்களில் Tally மூலம் பில் போடுவது முதல், கணக்குகளை நிர்வகிப்பது வரை சிரமமாகி விடும்.
அதே நேரம் மாதாந்திர VAT ரிட்டனை E filing செய்வது மேலும் சிரமமாகி விடும்.
இதுபோன்ற நேரங்களில் Tally மட்டுமல்ல மற்ற அக்கவுண்ட்ஸ் சாப்ட்வேரை பயன்படுத்துவோரும் தங்கள் மென்பொருளை மேம்படுத்த வேண்டியது
( UPDATE ) கட்டாயமாகி விடும்.

Tally நிறுவனம் தேவைப்படும் போதெல்லாம் தனது புதிய RELEASE களை நன்கு சரிபார்த்தே வெளியிடுகிறது.
ஆனால் அந்த மென்பொருளை பயன்படுத்தும் போது ஒரு சில OPTION கள் சரிவர செயல்படாது.
சில ஆப்ஷன்களை பயன்படுத்தும்போது நடைமுறையில் சில சிரமம் தரும்.
அந்த குறைகளையும் சரி செய்து மீண்டும் புது RELEASEகள் வெளியிடும்.

அதே போல் மேலும் புதிய ஆப்ஷன்களை சேர்க்கும் போதும் Tally புது ரிலீஸ்களை வெளியிடும்.

நீங்கள் புதிதாக Tally.ERP9 வாங்கி பயன்படுத்துகிறீர்களா..? அல்லது ஏற்கனவே பயன்படுத்திய Tally 9 மென்பொருளை மேம்படுத்தி
( UPDATE செய்து ) Tally.ERP9ஆக உபயோக படுத்துகிறீர்களா..?

எப்படி இருந்தாலும் உங்களுக்கு ஒரு வருடத்திற்கு Tally நிறுவனம் வெளியிடும் அனைத்து RELEASEகளையும் நீங்கள் இலவசமாக டவுன்லோடு செய்து TALLYஐ அப்டேட் செய்து கொள்ளலாம் என்பது தெரிந்திருக்கும்.

ஒரு வருடத்திற்கு இலவசம் என்பதால் எல்லா ரீலீஸ்களேயும் உடனே அப்டேட் செய்ய நினைக்காதீர்கள்.
புது ரிலீஸ்கள் வெளியானதும்

www.tallysolutions.com

என்ற தளத்திற்கு சென்று புதிய ரிலீஸில் என்னென்ன மாற்றங்கள், சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை நிதானமாக படித்து பாருங்கள்.

அந்த மாற்றங்கள் தேவையென்றால் மட்டுமே அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
இல்லையென்றால் பழைய நிலையிலேயே உபயோகபடுத்துங்கள்.


¤ டேலி டிப்ஸ் ¤
எல்லாம் சரி..
தற்போது நீங்கள் பயன்படுத்தி வரும் Tallyயின் VERSION என்ன என்ற விபரம் தெரிந்து கொள்ள வேண்டுமா..?

உங்கள் Tally 9 அல்லது Tally.ERP9 ஐ ஓபன் செய்யுங்கள்..


ALT+CTRL+B என்ற ஷார்ட் கட் கீயை உபயோகித்து பாருங்கள்..


இப்போது உங்கள் Tally திரையில் நீங்கள் பயன்படுத்தும் VERSION மற்றும் RELEASE விபரங்கள் தெளிவாக தெரியும்.

4 comments:

வடுவூர் குமார் said...

Nice Info.Thanks

K.RAJA said...

நன்றி!

K.RAJA said...

தங்களின் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி!

Gulzar Ahmed said...

நண்பரே உங்களுடிய இந்த சேவைக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்,ஆனால் நீங்கள் செய்வது சரி இல்லை,நம்முடைய எத்தணை தமிழ் நண்பர்கள் அவர்களுடிய blogil இலவசமாக அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை முழுமையா எழுதிகிறார்கள் .நீங்கள் ஏன் step by step tally பற்றி சொல்லி தர கூடாது?"ஏற்றம் தரும் எழுபது" தமிழ் கணினி வலைத்தளங்கலீல் உங்கள் தளத்தை பாத்து tally கற்று கொள்ளலாம் என்று வந்தால் நீங்கள் புத்தகத்தை வங்கி படிக்கச் சொல்றிங்க ,நீங்கள் செய்வது சரியா?ப்ளீஸ் நண்பரே உங்களுடைய திறமையை எங்களுடன் பகரிந்து கொள்ளுங்கள் உங்களை கொண்டு பலபேர்கள் முன்னேர்வார்கள்

Post a Comment