< தமிழில் டேலி Tally.ERP9 >

Oct 13, 2010

டேலி: MARK செய்து DELETE செய்ய..



Tally.ERP9


* புதுசு கண்ணா புதுசு *


இப்பெல்லாம் யாரை பார்த்தாலும் கேமிரா போனைத் தான் வச்சிருங்காங்க.
யாரையாவது பார்த்தா முதலில் லேட்டஸ்ட் பாட்டு இருந்தா புளுடூத்துல அனுப்புங்க தான் கேட்பாங்க. நீங்க உங்களோட செல்போனில் பாடல்களை உங்க விருப்பபடி வெவ்வேறு போல்டரில் சேமிச்சி வச்சிருப்பீங்க. அப்ப உங்க பிரண்ட் எல்லா பாடலையும் அனுப்ப வேண்டாம். குறிப்பிட்ட சில பாடல்களை மார்க் ( MARK ) செய்து அனுப்ப சொல்வார். இப்ப நீங்க ஆப்ஷனுக்கு
( OPTION ) போய் மார்க் செய்து புளூடூத் மூலம் அனுப்புவீங்க. MOVE MARKED என்ற ஆப்ஷன் மூலம் ஒரு போல்டரிலுள்ள டேட்டாவை மற்றொரு போல்டருக்கு மாற்றம் செய்ய முடியும். அதே போல் தான் உங்கள் செல்போனிலோ அல்லது உங்கள் E-mail லிலோ இன்பாக்ஸில் உள்ள தேவையில்லாத மெஜேஜை MARK செய்து தானே DELETE செய்வீர்கள். இந்த MARK என்ற முறையில் தான் Tally.ERP9 என்ற VERSION-ல் SELECT , SELECT ALL என்ற இரு ஆப்ஷன் தந்திருக்கிறார்கள். இதற்கு SHORTCUT KEY என்ன தெரியுமா..?


Tally.ERP9ல் DISPLAY MENU கிளிக் செய்த பிறகு எந்த பக்கத்திற்கு சென்றாலும் SCREEN ன் வலது ஓரத்தில்
S=SELECT
S-_SELECT ALL
என்ற ஆப்ஷன் இருக்கும்.
DISPLAY MENU வில் குறிப்பிட்ட ஒரு VOUCHER ENTRY ஐ செலக்ட் செய்ய உங்கள்
KEY BOARD-ல் SPACE BARஐ அழுத்தவும்.
SELECT ALL செய்ய
SHORTCUT KEY
CTRL+SPACE BAR.

சில சமயம் தொடர்ச்சியாக பல வவுச்சர் என்டிரிகளை DELETE செய்ய வேண்டியிருக்கும்.
அப்போது திரையின் கீழே வலது ஓரத்தில் தெரியும்
SELECT ALL என்ற OPTIONSஐ கிளிக் செய்தால் அனைத்து வவுச்சர்களும் கரும்பச்சை நிறத்தில் மார்க் செய்யபட்டு இருக்கும்.

இப்போது
ALT+ D என்ற ஆப்ஷனை OK செய்து DELETE செய்யலாம்.
குறிப்பிட்ட ஒரு சில வவுச்சர்களை மட்டும் MARK செய்ய KEY BOARDல் உள்ள SPACEBARஐ அழுத்தி தேர்வு செய்து DELETE செய்யலாம்.

6 comments:

Anonymous said...

Please add ta.indli.com vote button.

K.RAJA said...

தாங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி நண்பரே..

நடவடிக்கை எடுக்கிறேன்..

வடுவூர் குமார் said...

மனைவிக்கு உதவியாக இருந்தது இக்குறிப்புகள்,நன்றி.

K.RAJA said...

மகிழ்ச்சி நண்பரே!

Jaya kumar.D said...

create செய்த companyயின் முகவரியை edit செய்து மீண்டும் Save பண்ண முடியுமா? நண்பரே!

Saravanan said...

//Jaya kumar.D said...
create செய்த companyயின் முகவரியை edit செய்து மீண்டும் Save பண்ண முடியுமா? நண்பரே!//

கண்டிப்பாக எடிட் செய்ய முடியும் Select Company -Gate of Tally யில் F3(Company Info) கிளிக் செய்யவும் பின்பு Alter(Shortcut - A)கிளிக் செய்யவும்
இப்பொழுது எடிட் செய்ய வேண்டிய கம்பெனியினை தேர்வு செய்து என்டர் கொடுக்கவும்
இப்பொழுது தேவையான தகவல்களை எடிட் செய்யலாம்

Post a Comment