< தமிழில் டேலி Tally.ERP9 >

Apr 4, 2010

மெடிகல் ஷாப் பில்லிங்



நீங்கள் எந்த மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கினாலும் கம்பியூட்டர் பில் தானே தருகிறார்கள். தற்போது பெரும்பான்மையான மருந்து கடைகளில் குறிப்பிட்ட சில சாப்ட்வேர்களை உபயோகிக்கிறார்கள்.
இந்த சாப்ட்வேர்களைத் தான் சில்லறை மருந்து வியாபாரிகள் RETAILER நம்பியுள்ளனர்.

முக்கிய காரணம் நீங்கள் டாக்டர் எழுதி தரும் மருந்து சீட்டை மருந்து கடையில் கொடுத்தால் கடைக்காரர் மருந்து இருக்கும் ரேக்கை பார்க்க மாட்டார். முதலில் கம்பியூட்டரில் என்டர் செய்து சீட்டிலுள்ள அந்த மருந்து இருக்கிறதா என்றும் என்ன விலை என்றும் சொல்லி விடுவார்.



இது எப்படி முடிகிறது..? ஆர்டர் செய்த மருந்தோ மாத்திரையோ கடைக்கு வந்தவுடன் கம்பியூட்டரில் அந்த மருந்து பற்றிய தகவல்களை ஏற்றிவிடுவார்கள்.

ஒவ்வொரு மருந்தின் பெயர் பேட்ச் நம்பர் எக்ஸ்பியரி தேதி அந்த மருந்தை சப்ளை செய்த வியாபாரி பெயர் அவருடைய விற்பனைவரி டின் நம்பர் வாட் வரி பில் நம்பர் மருந்தின் அடக்க விலை விற்பனை செய்யும் விலை ஆகிய மொத்த விபரங்களையும் கம்பியூட்டரில் என்டிரி செய்து வைத்திருப்பார்.
அதனால் கடைக்காரர் தேடும் எந்த தகவலும் எளிதில் கிடைக்கும்.
மருந்து பொருட்களை கையாள்வதற்கு ஏதுவாக அமையும்.



ரெமிடி போன்ற சாப்ட்வேர்கள் ஏராளமாய் உள்ளன.

டேலி 9 ERP மூலம் மெடிகல் கடைக்கு மட்டுமல்ல எல்லாவித வியாபார கணக்குகளையும் நிர்வகிக்கலாம்.